இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Tuesday, March 18, 2008

பேனாவை மிரட்டிய கத்திகள் - சுஜாதாவும் இஸ்லாமும்: உமர் விமர்சனம்



பேனாவை மிரட்டிய கத்திகள் - சுஜாதாவும் இஸ்லாமும்: உமர் விமர்சனம்

முன்னுரை: எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு முன்பு, உலகமெல்லாம் பரந்து கிடக்கும் கடலில் ஒரு மில்லி லிட்டர் தண்ணீரைப் போன்றவன் நான். எனக்கு சுஜாதாவைப் பற்றி பேசவோ எழுதவோ தகுதி இல்லை. நான் அவருடைய எழுத்துக்களை ரசிப்பவன் ருசிப்பவன். இப்படி இருந்தும் இஸ்லாமிய சகோதரர்கள் வெளியிட்ட ஒரு கட்டுரை என்னை இந்த சிறிய கட்டுரையை எழுத தூண்டியுள்ளது.


குர்‍ஆனைப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து என்ன?

இஸ்லாமிய தளங்களில் நான் கண்ட கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தருகிறேன்:

Quote:

தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே…

"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.
.....
.....
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."  http://neshamudan.blogspot.com/2008/03/blog-post_11.html


சுஜாதா அவர்களின் இந்த வரிகள் பற்றி என் கருத்து:

மற்றவர்கள் இஸ்லாமை புகழ்ந்தால், மகிழ்ச்சியில் துள்ளும் இஸ்லாமியர்கள்:

பொதுவாக ஒவ்வொருவருக்கும் தங்கள் மதத்தைப்பற்றி மற்றவர்கள் முக்கியமாக மாற்று மதத்தவர்கள் புகழ்ந்தால், அதுவும் புகழ் பெற்றவர்களாகிய எழுத்தாளர்கள், ஆட்சியில் இருப்பவர்கள், தலைவர்கள் போன்றவர்கள் புகழ்ந்தால் மிகவும் மனதிற்கு ஜில்லென்று இருக்கும். இது எல்லா மத நம்பிக்கையுள்ளவர்களுக்கும் பொருந்தும். அதே போலத்தான் இஸ்லாமியர்களும், இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால், அதே நபர் அல்லது மற்றவர்கள் "இஸ்லாமைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் எதிராக பேசிவிட்டால் போதும்... " எத்தனை தர்னாக்கள், எதிர்ப்பு கூட்டங்கள், கடை உடைப்புக்கள் இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.

மற்றவர்கள் புகழும் போது சந்தோஷப்படும் அதே மனம், மற்றவர்கள் குறை கூறும் போது, நாம் நிதானத்தை இழக்காமல் அதற்கு சரியான பதில் தரமுயலவேண்டும். மற்றும் நம்மிடம் அந்த குறை உள்ளதா இல்லையா என்று சிந்தித்து செயல்படுவது நல்லது.


ஏன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இப்படி புகழ்ந்தார்?

சுஜாதா அவர்களின் ஞானத்திற்கு முன்பாக நான் ஒரு பைசா கூட தேரமாட்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஒரு எழுத்தாளர், அதுவும் பல துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர் இப்படி சொன்னார் அதுவும் குர்‍ஆன் பற்றி இப்படி சொன்னார் என்ற செய்தியை படித்தவுடன் மனதின் அடித்தளத்தில் ஒரு பெரிய சுத்தியைக்கொண்டு அடிப்பது போல ஒரு உணர்வு எனக்கு. [ஏன் கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் புகழ்ந்தால் நீ சந்தோஷப்படமாட்டாயா? என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் சென்று பல நொடிகள் ஆகிவிட்டது. சந்தோஷப்படுவேன், இதில் சந்தேகமில்லை, ஆனால், ஒரு வேளை அவர் கிறிஸ்தவத்தைப் பற்றி அவதூறாக பேசினாலும், அதை நான் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், வேதம் என்பது நல்லதா கெட்டதா என்று மற்றவர்கள் சொல்லி நாம் தெரிந்துக்கொள்வது அல்ல, நாமாகவே படித்து புரிந்துக்கொள்வது]

மனிதர்களின் வகைகள்:

மனிதர்கள் மத சம்மந்தப்பட்ட விவகாரங்களைப் பொருத்தமட்டில் கீழ்கண்ட மூன்று பிரிவினர்களாக இருப்பதாக நான் நினைக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து.

1. எம்மதமும் சம்மதம் என்பவர்கள்
2. என் மதம் மட்டும் தான் சம்மதம் என்பவர்கள்
3. எம்மதமும் சம்மதமில்லை என்பவர்கள்


சமுதாயத்தில் நாம் காணும் கவிஞர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் பெரும்பான்மையாக முதல் வகையை சம்மந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். எம்மதமும் சம்மதம் என்று நான் சொன்னது, இவர்கள் எல்லா சாமிகளையும் வணங்குவார்கள் என்ற எண்ணத்தில் சொல்லவில்லை, அதற்கு மாறாக மற்ற மத மக்களின் மனதை புண்படுத்தும்படி பேச முயலமாட்டார்கள். உதாரணத்திற்கு ஒரு சின்ன ஊரில் ஒரு முஸ்லீம் மருத்துவர் இருந்து, அந்த ஊரில் உள்ள மக்கள் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில், இந்த மருத்துவரை அழைத்து ஒரு பள்ளியில் அல்லது திருவிழாவில் பேசும் படி கேட்டுக்கொண்டால், இவர் மேடையில் மற்ற சாமிகளை பழித்துப் பேசுவாரா? பேசமாட்டார், பொதுவாக உள்ள சில நல்ல விஷயங்களை பேசி முடித்துக்கொள்வார்.

இதே போல, இஸ்லாம் பற்றி இரம்ஜான் அன்று செய்தித்தாளில் பதிப்பதற்கு ஒரு கட்டுரையை எழுதிக்கொடுக்கும் படி பத்திரிக்கையாளர்கள் சுஜாதா போன்ற எழுத்தாளர்களை கேட்டுக்கொள்ளும் போது, இவர் தனக்கு சில உண்மைகள் தெரிந்து இருந்தாலும், எப்படி எழுதுவார்? இஸ்லாமை புகழ்ந்து தான் எழுதவேண்டும், இது தான் மக்கள் மத்தியில் மத நல்லிணக்கத்திற்காக‌ சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள ஒரு எழுத்தாளர் செய்யவேண்டிய வேலை.

என்னைக்கேட்டால், சுஜாதா அவர்கள் செய்தது சரியானது என்றுச் சொல்லுவேன், ஆனால், 100% சரியானது என்றுச் சொல்லமாட்டேன். அவர் முதலில் எழுதிக்கொண்டு வந்தது சரியாக உள்ளது, ஆனால், கடைசி பத்தி மட்டும் சரியானது என்று ஏற்றுக்கொள்வது சிறிது கடினமே. அவர் ஏதாவது எழுதவேண்டுமானால், பொதுவாக எழுதவேண்டுமே தவிர, குர்‍ஆனையும், ஒரு சில இஸ்லாமியர்கள் எழுதிய நூல்களை மட்டும் படித்துவிட்டு, கீழ்கண்டவாறு அவர் எழுதியது தான் எனக்கு வேதனையாக உள்ளது.


Quote:

===============
....'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.
.....
.....
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."

===============


இஸ்லாமியர்கள் பதித்த "சுஜாதாவின் பார்வையில் குர்‍ஆன்" என்ற கட்டுரை, சுஜாதா அவர்கள் மறைவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் எழுதி பதித்து இருந்தார்களானால், என்னுடைய இந்த கட்டுரை "நான் சுஜாதா அவர்களுக்கே" முதலில் அனுப்பியிருப்பேன்.

அப்படியானால், சுஜாதா அவர்களுக்கு இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரியவில்லை என்று சொல்கிறீர்களா என்று என்னை கேட்டால்:

ஆம் என்பது தான் என் பதிலாக இருக்கும். ஏனென்றால், சுஜாதா அவர்கள் சொன்ன விவரங்களிலிருந்து, அவர்:

1) குர்‍ஆனை மட்டுமே படித்துள்ளார்
2) சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளார்.


இஸ்லாமை அறிந்துக்கொள்ள‌ வேறு என்னத்தை படிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டால்,

1) குர்‍ஆனோடு கூட, ஹதீஸ்களை அவர் படித்து இருக்கவேண்டும்,
2) முகமதுவின் வாழ்க்கை சரிதையாகிய சீராவை படிக்கவேண்டும்,
3) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிய முகமதுவின் சரித்திரத்தை படிக்கவேண்டும்


அப்போது தான் குர்‍ஆன் பற்றி எல்லாம் நன்றாக புரியும். குர்‍ஆனின் ஒவ்வொரு வசனமும் முகமதுவின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்டது. முகமதுவின் வாழ்க்கையை அறிந்துக்கொள்ளாமல் குர்‍ஆனின் வசனங்களுக்கு பொருள் கூறுவது என்பது முடியாத காரியம். இது முஸ்லீம்களுக்கே தெரியும்.குர்‍ஆனின் வசனங்கள் ஒரு மனிதனின் உடல் என்றுச் சொன்னால், அந்த உடல் நடமாட உயிர் முக்கியம், அது போல குர்‍ஆனை புரிந்துக்கொள்ள முகமதுவின் வாழ்க்கை என்னும் உயிர் தேவை, ஹதீஸ்கள் தேவை.

ஏன்? குர்‍ஆனும், முகமதுவின் வாழ்க்கையை சொல்லும் ஒரு சில இஸ்லாமிய ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களும் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ள போதாதா? என்று கேட்டால், போதாது என்பது தான் என் பதிலாக இருக்கும்.

இஸ்லாமிய அறிஞர்கள் முகமதுவின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்வார்கள், மறுபக்கத்தை யார் சொல்வது, நாமாகத்தான் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும், அல்லது இஸ்லாமியர் அல்லாதவர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கவேண்டும், அப்படியும் இல்லையானால், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதையை படிக்கவேண்டும்,இதையெல்லாம் படிக்காமல் இஸ்லாம் பற்றி விவரிப்பது, சரியானதாக இருக்காது என்பது என் கருத்து.

ஒரு வேளை, சுஜாதாவே என்னிடம் இயேசு பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டால், நான் என்ன "பி. ஜைனுல் ஆபீதீன்" அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தையா அவரிடம் கொடுப்பேன், நாத்தீகர்கள் எழுதுகின்ற புத்தகத்தையா கொடுப்பேன்? இல்லை,அதை கொடுக்கமாட்டேன். அதற்கு பதிலாக பைபிளை கொடுப்பேன், அல்லது சில கிறிஸ்தவ ஆசிரியர்கள் இயேசுவைப்பற்றி புகழ்ந்து எழுதியதை கொடுப்பேன். அதே போலத்தான், இஸ்லாமியர்கள் எப்படிப்பட்ட புத்தகங்களை இவரிடம் கொடுத்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? முகமதுவின் வாழ்க்கை முழுவதும் அறிந்துக்கொள்ள, குர்‍ஆன் வசனங்களின் சரியான அர்த்தங்களை அறிந்துக்கொள்ள குர்‍ஆன் மட்டும் போதாது.

ஆக, சுஜாதா அவர்கள் கொஞ்சம் கவனமாக எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து. நானும் சுஜாதா அவர்களின் தீவிர ரசிகன் தான், என்னை யாரும் தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம். சுஜாதாவின் ரசிகர்களின் மனது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன், ஆனாலும் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே".


என் சந்தேகம்: சுஜாதாவிற்கு இஸ்லாமிய மிரட்டல்கள், பயமுறுத்தல்கள்: இது உண்மையா?

இன்னும் சுஜாதா இஸ்லாம் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்று தெரிந்துக்கொள்ளலாம் என்று இணையத்தில் தேடும் போது, கீழ்கண்ட தகவலைக் கண்டேன். இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் தான் என் சந்தேகத்தை தீர்க்கவேண்டும்.

அதாவது, சுஜாதா அவர்கள் ஜுனியர் விகடனில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி என்ற கருப்பொருளில் "காலச்சுவடுகள்" என்ற கட்டுரைத்தொடரை எழுதும் போது, சிரிரங்கத்தில் இஸ்லாமிய போர்வீரர்களால் 10,000 இந்துக்கள் கொள்ளப்பட்டார்கள் என்று அவர் தன் தொடரில் எழுதியதைத் தொடர்ந்து, அவருக்கு பயமுறுத்தல் மற்றும் மிரட்டல் கடிதங்கள் வந்ததாகவும், அதனால், அவர் அத்தொடரை எழுதுவதை சிறிது காலம் தள்ளிப்போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? அல்லது பொய்யா?


Quote:

============
I believe, when he wrote about the massacre of ten thousand Sri
Vaishnavas in Srirangam by invading muslim armies, he got hate mails and
threats; this made him postpone his proposed series on Islam and Quran.

(Sujatha has said so, I think in Junior Vikatan).

Source: http://www.ponniyinselvan.net/messages/view/writer-sujatha-died--021755.html
============


எனவே, இக்கட்டுரை படிப்பவர்கள், கீழ்கண்ட தகவல்களை கண்டரிந்து பதித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

1) சுஜாதா அவர்கள் எந்த பத்திரிக்கையில் இஸ்லாம் பற்றிய சரித்திர தொடரை எழுதினார்?

2) அந்த தொடரின் பெயர் என்ன?

3) எத்தனை தொடர்கள் அவர் எழுதிமுடித்தார்?

4) எந்த தேதிகளில் எழுதினார்? (பத்திரிக்கை வாரம் ஒரு முறையோ, இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ வரும், அந்த தேதி)

5) திடீரென்று தொடர் எழுதுவதை நிறுத்திவிட்டாரா?

6) அப்படி நிறுத்தியிருந்தால், என்ன காரணம்? ஜூனியர் விகடனில் அவரே சொன்னதாக சொல்லப்படுகிறது. அது சரியா?

7) மறுபடியும் அத்தொடரை தொடர்ந்து முடித்தாரா இல்லையா?


தெரிந்தவர்கள் இக்கேள்விக்கு பதிலை தரலாம். ஒரு வேளை இந்த செய்தி தவறாகவும் இருக்க‌ வாய்ப்பு உள்ளது. அப்படி தவறாக இருக்குமானால், இந்த செய்தியை நான் வெளியிட்டதற்கு வருந்துகிறேன், இருந்தாலும் என் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவே இந்த செய்தியை இங்கு வைத்தேனே தவிர யாரையும் குற்றப்படுத்துவதற்கு அல்ல.

முஸ்லீம்களுக்கு ஒரு வேண்டுகோள்:


நான் அதிகமாக விரும்பிப்படிக்கும் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கீழ்கண்டவாறு எழுதினார், அதை நீங்கள் உங்கள் தளங்களில் பெருமையாக பதித்தீர்கள், நல்லது.

Quote:
------------------
திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."
------------------


ஒருவகையில் பார்த்தால், சுஜாதா அவர்கள் என்னையும் குற்றப்படுத்தினார் என்றே நான் எண்ணுகின்றேன். ஒரு ஆசிரியரின் கீழ் மாணவனைப்போல நான் இதை மிகவும் தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறேன்.

குர்‍ஆனில் உள்ள 164 ஜிஹாத் வசனங்கள்:

ஆனால், என் கேள்வி என்னவென்றால்: ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் மற்றும் இதர தளங்களில் குர்‍ஆனில் 164 ஜிஹாத் பற்றிச் சொல்லும் வசனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவைகள் உண்மையாகவே, ஜிஹாத வசனங்கள் தானா இல்லையா என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. நீங்கள் சொல்லும் பதிலைப் பொருத்து தான் இதை நான் நிர்ணயிக்கமுடியும்.

Quote:


164 Jihad Verses in the Koran
Compiled by Yoel Natan


II. Horizontal List of Verses

In text-only format

The Koran's 164 Jihad Verses: K 002:178-179, 190-191, 193-194, 216-218, 244; 003:121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195; 004:071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104; 005:033, 035, 082; 008:001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075; 009:005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081, 083,086, 088, 092, 111, 120, 122-123; 016:110; 022:039, 058, 078; 024:053, 055; 025:052; 029:006, 069; 033:015, 018, 020, 023, 025-027, 050; 042:039; 047:004, 020, 035; 048:015-024; 049:015; 059:002, 005-008, 014; 060:009; 061:004, 011, 013; 063:004; 064:014; 066:009; 073:020; 076:008

Source:
http://www.answering-islam.de/Main/Quran/Themes/jihad_passages.html


எழுத்தாளர் சுஜாதா அவர்கள் இன்று நம்மோடு இருந்திருப்பாரானால், நான் இந்த வசனங்களை அவருக்கு அனுப்பி பொருள் கேட்டு இருப்பேன், நான் கொடுத்துவைத்தது அவ்வளவு தான். அதனால், நீங்கள், அதாவது தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள், இந்த 164 வசனங்களுக்கு சரியான பொருள் என்ன என்று கூறினால், சுஜாதா அவர்கள் சொன்னது சரியானதா, அதாவது குர்‍ஆனை படிப்பவர்களின் மனதில் தான் பிரச்சனையா? அல்லது குர்‍ஆனில் தான் பிரச்சனையா என்பது விளங்கிவிடும்.

இந்த வசனங்களுக்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் பொருள் கூறுகின்றோம் என்று சொன்னால், அது தவறானது என்று நீங்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். எனவே, உங்கள் வேதத்தை நீங்களே எங்களுக்கு விளக்குங்கள். இஸ்லாமைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புபவர்களின் முகத்தில் கறியை பூச உங்களுக்கு இது ஒரு சரியான சந்தர்ப்பம். உங்கள் சத்திய மார்க்கத்தை அனைக்க முற்படுபவர்களுக்கு ஒரு சரியான சாட்டையடி.

இஸ்லாமியர்களுக்கு பல தளங்கள் தமிழில் உண்டு, எனவே, நீங்கள் ஒன்றாகவோ, அல்லது தனித்தனியாகவோ இவ்வசனங்களை விளக்கி தொடர் கட்டுரைகளாக பதிப்பீர்களானால், யார் யாரெல்லாம் கேள்வி கேட்பார்களோ அவர்களுக்கு இந்த தொடர் கட்டுரைகளை நீங்கள் மேற்கோள்களாக காட்டிவிடலாம்.

நீங்கள் இந்த வசனங்கள் விளக்கும் போது, கீழ்கண்ட விதத்தில் விளக்கினால், மிகவும் உதவியாக இருக்கும், எல்லாருக்கும் நன்றாக புரியும்.

1) ஜிஹாத் வசனங்களை முதலில் குறிப்பிடுங்கள்

2) இந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் வெளிப்பட்டது என்று தெரிவியுங்கள்.

3) இந்த வசனங்களின் உண்மை பொருள் என்ன என்று சொல்லுங்கள்.

4) இந்த வசனங்கள் தற்காலத்திற்கு ஒத்துவருமா வராதா என்று விளக்குங்கள்,

5) அப்படி ஒத்துவருமானால், எந்த சூழ்நிலையில் தற்காலத்தில் இவ்வசனங்களை பயன்படுத்தலாம் என்று விளக்குங்கள்.

6) இவ்வசனங்களை சராசரி தனி மனிதன் கையாளலாமா? அல்லது அரசாங்கம் தான் கையாள வேண்டுமா என்று விளக்குங்கள்.


இப்படி எல்லா வசனங்களுக்கும் நீங்கள் பொருள் கூறுவீர்களானால், மற்ற இஸ்லாமியர் அல்லாதவர்கள் எல்லாரும், இனி யாரும் இஸ்லாம் வாளால் பர‌ப்பப்பட்டது என்று சொல்லமாட்டார்கள்.

நீங்கள் உங்கள் வேதத்தில் உள்ள வசனங்களை விளக்கவில்லையானால், இஸ்லாமியர் அல்லாதவர்கள் இவைகளை தங்களுக்கு ஏற்றபடி விளக்கவேண்டிய அவசியத்தில் தள்ளப்படுவார்கள். அப்போது நீங்கள் மறுபடியும், இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள் என்று சொல்லவேண்டி வரும். எனவே, உங்கள் வேதத்தை எங்களுக்கு முதலாவது நீங்கள் விளக்குங்கள், அது சரியா இல்லையா என்பதை எல்லாரும் தெரிந்துக்கொள்வார்கள்.


முடிவுரை: இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட சில சந்தேகங்களை தீர்த்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கட்டுரையில் இரண்டு சந்தேகங்களை நான் வைத்துள்ளேன்,

1) சுஜாதா அவர்கள் இஸ்லாம் பற்றி ஏதாவது தொடர் கட்டுரைகளை எழுதினாரா இல்லையா? அதன் விவரங்கள் என்ன?

2) இஸ்லாமிய சகோதரர்கள் சுஜாதாவின் மீது வைத்த அன்பின் காரணமாக, அவர் சொன்னது சரியானது என்று நிருபிக்க, இந்த 164 ஜிஹாத் வசனங்களை விளக்கினால், நாம் அனைவரும் அவர்களுக்கு கடமை பட்டு இருப்போம். மற்றும் இந்த வசன்ங்களை விளக்குவது முஸ்லீம்களின் கடமையாக உள்ளது.


இக்கட்டுரை பொது நலன் கருதி எழுதப்பட்டது, யாரையும் குற்றப்படுத்தவோ, வேதனைபடுத்துவதற்கோ அல்ல. இக்கட்டுரையை, மனதில் எந்த குற்ற உணர்வும், வெறுப்பும் இல்லாமல் படிப்போமானால், இக்கட்டுரையில் யாரையும் வெறுக்கும் அளவிற்கு எதுவும் சொல்லப்படவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். பிரச்சனை இக்கட்டுரையில் இல்லை, படிப்பவர்களின் மனதில் தான் உள்ளது என்று சொல்லிக்கொள்கிறேன்.
 
 
 

Wednesday, February 6, 2008

உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு

 

அருமையான் இணைய வாசகர்களுக்கு இஸ்லாம் இணையப் பேரவை என்னும் தள்ம் கடந்த

20:1:2008 அன்று ஒரு நேரடி விவாத அழைப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த தீவிராவாத கும்பலிடன்ம் நேரடி விவாதம் என்பது தற்கொலைக்கு சமம் என்பதால் நண்பர் உமர் அவர்களும் நாங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது

.உங்கள் இஸ்லாமில் உண்மை இருந்தால் இந்த இணயத்திலேயே நடத்தலாம்.அது எங்களுக்கு பாதுகாப்பு மட்டும் அல்ல அவர்களின் பொய்களுக்கு ஆதாரப்பூர்வமான பதிலை அளிக்க இணையம் சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் எழுத்து வடிவ விவாத அழைப்பை 21:1:2008 அன்று வெளியிட்டு இருந்தோம்.

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html

 

எழுத்து விவாதத்துக்கு வந்தால் இஸ்லாமின் பொய்மூட்டைகள் எல்லாம் அவிழ்ந்துவிடும்

,அமைதி முகமூடிகள் கிழிந்து விடும் என்ற பயத்தில் வெளியே தலைகாட்டவில்லை.
மீண்டும் எட்டு நாட்கள் கழித்து எங்களை
25 தேதிக்குள் பதில் அளியுங்கள் என்று சொன்னவர்களை தேடியும் காணாமல் ஒரு பதிவை வெளியிட்டோம்.அதன் தலைப்பு;
 
 
 

இந்த கட்டுரை வெளியிடப்பட்டு முன்று நான்கு நாட்கள் கழித்து ஒரு முட்டாள்கள் கூட எழுத யோசிக்கும் விஷயங்களை தங்கள் பதில் என்று வெளியிட்டார்கள் இந்த இஸ்லாம் இணைய பேரவை வீரர்கள்.அதன் தலைப்பு என்ன தெரியுமா? உங்களுக்கு சிரிப்புத்தான் வரும்.

தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்

http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm

 

இதுதான் அந்த தலைப்பு

.20 தேதி கட்டுரை வெளியிட்டு விட்டு ஓடிப்போன இந்த வாய்சொல் வீரர்கள் திரும்ப வந்தது 12 நாட்களுக்கு பின்தான்.நாங்கள் அதற்குள் இவர்களை இணியம் முழுவதும் தேடிவிட்டோம்.என்ன பதில் சொல்லுவது என்று யோசிக்கவே இவர்களுக்கு 12 நாட்கள் ஓடி விட்டது.

 

(
குறிப்பு;முன்பு இதே போல் இதுதான் இஸ்லாம் என்ற இணையத்தில் நிஜாமுதீன் என்பவர் கிறிஸ்தவத்தை குறித்து தாறுமாறாக கட்டுரை எழுதிவந்தார்.உமர் அவர்கள் அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் பல தில்லுமுள்ளு வேலைகள் செய்து பின் தலைமறைவு ஆனார்.அதன் பின் உமர் அவர்கள் (Wed Nov 21, 2007 10:40 am) தமிழ் உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு எழுத்து வடிவ விவாத அழைப்பை கொடுத்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்)
 

 

இந்த

(தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்)கோமாளித்தனமான பதிலுக்கு பின் உமர் அவர்கள் ஒரு பதி அளித்து இருந்தார்.அதன் தொடுப்பு
 

இதற்கு முன் ஜீன் 2007அன்று உமர் அவர்கள் ஒரு நகைச்சுவை நிறைந்த ஒரு சில வரிகளை மொழிபெயர்த்து இருந்தார்.அது எப்படி இந்த இஸ்லாம் இணையப் பேரவைக்கு ஒத்துப்போகிறது என்பதை பாருங்கள்.
 

 

இதையெல்லாம் எடுத்து சாப்பிடு அளவுக்கு இஸ்லாம் இணையப்பேரவை இப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

.அது என்ன தெரியுமா?

 

//முக்கிய அறிவிப்பு : இறைமார்க்கமாம் இஸ்லாத்தையும், இறைமறை குர்ஆனையும், இறைத்தூதர் நபிகளாரையும் இழிவுபடுத்திய உண்மையடியான் என்ற கிருத்துவ பெயர்தாங்கி பொய்யடியானை நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்தோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பொய்யடியான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்து கொண்டார். தலைமறைவாகிவிட்ட மேற்படி ஆசாமியின் பிடரி மயிரை பிடித்து இழுத்துவந்து, எங்கள் முன்னிருத்தி விவாதம் செய்ய வைப்பவர்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் காத்திருக்கின்றது.//

 http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm

இதுதான் இஸ்லாம் இணைய பேரவையின் விவாத அழகு

.சிந்திப்பீர் இஸ்லாமிய நண்பர்களே.

Tuesday, January 29, 2008

மௌனமாக இருக்கும் இஸ்லாம் இணையப் பேரவை(iiponline)

இஸ்லாமிய இணையப் பேரவை

20/01/2008 அன்று கிறிஸ்தவத்தளங்கள்,உண்மைஅடியான் வலைமலர் ஆகியவற்றுக்கு ஒரு நேரடி விவாத அழைப்பிதழை தங்கள் தளத்தில் வெளியிட்டு 25/01/2008 குள் பதில் தரவேண்டும் என்று கூறி இருந்தது(.http://www.iiponline.org)

அதற்கு பதில் அளித்த சகோதரர் உமர் மற்றும் நாமும் நேரடி விவாதத்துக்கு நாங்கள் வரமுடியாது

.உங்களிடம் உண்மை இருந்தால் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று பகிரங்க அறிவிப்பை 21/01/2008 அன்று வெளியிட்டோம். ( http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html )

ஆனால் இன்று

29/01/2008 வரை எந்த விதமான பதிலையும் இஸ்லாம் இணையப் பேரவை தரவில்லை.எழுத்து வடிவ விவாதத்துக்கு வர விருப்பம் இல்லை என்றாவது பதில் அளித்து இருக்கலாம்.ஆனால் அதுவும் இல்லை.

பதில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்

.

Wednesday, January 23, 2008

TNTJ தலைவரும்,பிரபல இஸ்லாமிய அறிஞருமான பிஜே அவர்களின் புத்தகத்துக்கு ஈசாகுரான் மறுப்பு-6

        

Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

(பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்)


இயேசு கடவுள் என்றால் ஏன் அவர் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார் ? என்பது தான் பிஜே அவர்கள் கேட்கும் கேள்வி. பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை பைபிளின் வசனங்களை சரியாக ஆராயாமல் மேலோட்டமாக படித்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் முன்வைக்கின்ற கேள்விகளுக்கு தொடர் கட்டுரைகளாக நான் பதில் எழுதிக்கொண்டு வருகிறேன்.

இந்த வரிசையில் இயேசு ஏன் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார்? என்று பிஜே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை இக்கட்டுரையில் பார்க்கலாம்.



பிஜே அவர்கள் எழுதியது:

27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?


ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10 ) மூலம் : இயேசு இறைமகனா?



1. சில விவரங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிடும் இஸ்லாமிய அறிஞர்கள்

சாதாரணமாக பைபிளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது அந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பைபிள் அதே இடத்தில் சொல்லிவிடும். ஆனால் குர்ஆன் அப்படி அல்ல, அல்லா சொன்ன வசனங்களை குர்ஆனில் பார்க்கவேண்டும், இவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று அறிய ஹதீஸ்களின் உதவியை நாடவேண்டும். ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனின் வசனங்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினம்.

குர்ஆனை படிப்பது போல, புரிந்துக்கொள்வது போல பிஜே அவர்கள் பைபிளை புரிந்துக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது, அவருக்கு (பிஜே) தேவையான வசனங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்துள்ள வசனங்களை வேண்டுமென்றே, பைபிளுக்கு, இயேசுவிற்கும் விரோதமாக வித்தியாசமான பொருள் கொண்டுவரவேண்டும் என்று விட்டுவிட்டார் நம்முடைய இஸ்லாமிய அறிஞர், பல ஆண்டுகள் இஸ்லாமிய ஊழியம் செய்துகொண்டு வந்துக்கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள்.

பிஜே அவர்கள் எந்த வசனங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதை அறிய மேலும் படியுங்கள்.

2. பிஜே அவர்கள் சொல்வது உண்மையா?

பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை இன்னொரு முறை படியுங்கள். அவர் குறிப்பிட்ட வசன எண்கள்: மத்தேயு 26:7-10 இவைகள் ஆகும்.


27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?


ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10)



1. இயேசு சீமோன் என்பவனுடைய வீட்டில் இருந்தார்.

2. அந்த சமயத்தில் ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த தைலத்தை(நறுமணத்தை) கொண்டு வந்து இயேசுவின் தலையிலே ஊற்றுகிறாள்.

3. இதைக்கண்டு இயேசுவின் சீடர்கள் இந்த வீண் செலவு எதற்கு, அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லவா? என்று கேட்கிறார்கள்.

4. இயேசு அப்போது அவர்களுக்கு பதில் தருகிறார்.



3. இயேசு பேசிய வசனங்களில் பாதியை மட்டும் குறிப்பிட்ட பிஜே அவர்கள்

பிஜே அவர்கள் உண்மையில் நேர்மையாக பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறுவதாக இருந்தால், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தன் சீடர்களுக்கு இயேசு என்ன பதில் சொன்னாரோ அதை முழுவதுமாக குறிப்பிட்டு இருக்கவேண்டும். ஆனால், பிஜே அவர்கள் இயேசு பேசிய நான்கு வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்வது ஏமாற்றுவேலை ஆகுமா? அல்லது நேர்மையாக நடந்துக்கொண்டு செயல்படுவது ஆகுமா? என்பதை இக்கட்டுரையை படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு மிகப்பெரிய புகழ்பெற்ற இஸ்லாமிய ஊழியரிடம் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.

சரி பிஜே அவர்கள் குறிப்பிடாமல் விட்ட அந்த வசனங்கள் என்னவென்று பாருங்கள்.



மத்தேயு 26:10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

மத்தேயு 26:11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

மத்தேயு 26:12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.

மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.



இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள்.

4. சரி, பிஜே அவர்கள் மறைத்த வசனங்களில் இயேசு என்ன சொல்கின்றார்?

முதலாவது நறுமணத்தைப் பற்றிய சில விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

அ) நறுமணத்தை எப்போது பயன்படுத்துவார்கள்?

முக்கியமாக இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நறுமணத்தை கீழ் கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தினார்கள்:
1) தேவனுடைய வேலைக்காக ஒரு ஆசாரியனை அல்லது அரசனை பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவார்கள் ( 1 சாமுவேல் 16:1 , 2 இராஜாக்கள் 9:6 சங்கீதம் 89:20)

2) மகிழ்ச்சியான நேரங்களில் பயன்படுத்துவார்கள் (நீதிமொழிகள் 27:9, ஏசாயா 61:3)

3) அரசர்களை, பெரியவர்களை சந்திக்கப்போகும் பொது மரியாதைக்காக விலை உயர்ந்த தைலத்தை நறுமணங்களைக் கொண்டுச்செல்வார்கள் (ஆதியாகமம் 43:11, மத்தேயு 2:11)

4) இறைவனுடைய ஆலய வேலைகளில் நறுமணமுள்ள தைலத்தை பயன்படுத்துவார்கள் (யாத்திராகமம் 30:25-32).

5) ஒருவர் மரித்துவிட்டால், அவரை அடக்கம் செய்யும் போது நறுமண தைலத்தை பூசி துணிகளால் சுற்றி அடக்கம் செய்வார்கள் (மத்தேயு 26:12, லூக்கா 23:55, 56, லூக்கா 24:1).



ஆ) தன் மரண அடக்க சடங்கிற்காக இயேசு இந்த நறுமணம் பூசப்பட்டது என்றார்

ஏன் பிஜே அவர்கள் இயேசு சொன்ன மற்ற வசனங்களை குறிப்பிடவில்லை? என்பது இப்போது புரிந்திருக்கும். அதாவது, அந்தப்பெண் தன் பாவங்களை இயேசு மன்னிக்கவேண்டும் என்பதற்காகவும், மதிப்பின் அடிப்படையிலும் அந்த தைலத்தை அவர் மீது ஊற்றினாலும், இயேசு அதை தன் மரணத்தின் பின்பு அடக்கத்தின் போது பயன்படுத்தும் நறுமணமாகவே எடுத்துக்கொண்டார் , அதையே அவர்கள் எல்லாருக்கும் முன்பாக அறிக்கையும் செய்தார். அதாவது இயேசு, தன் மீது ஊற்றப்பட்ட நறுமணத்தை கல்யாண வீட்டு சந்தோஷ நறுமணமாகக் கருதாமல், சாவு வீட்டில் வரும் நறுமணமாகவே அவர் கருதினார். ஆனால், பிஜே அவர்களுக்கு மட்டும், இயேசு அழகாக மேக் அப் (Make Up) செய்துக்கொண்டு, பணம் கொடுத்து நறுமணம் வாங்கி உடலெல்லாம் பூசிக்கொண்டது போல் இந்நிகழ்ச்சி தெரிந்து இருக்கிறது. எப்படி மற்றவர்களின் வேதங்களை இஸ்லாமிய அறிஞர்கள் வியாக்கீனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?

சாவு வீட்டில் கூட வாசனைக்கு சில நறுமணங்களை தெளிப்பார்கள், அது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவில் ஒரு பிணத்தின் மீது தெளிக்கும் ரோஸ் வாடர் (Rose Water) என்று சொல்லக்கூடிய நறுமணத்திற்கு நிகராக இயேசு பேசியுள்ளார். ஆனால், அதை மறைப்பதற்காக பிஜே அவர்கள் வசனத்தை மறைத்தார்கள்.

மத்தேயு 26:11-13 வசனங்களை தன் புத்தகத்தில் குறிப்பிட்டால், தான் சொன்னவந்த செய்திக்கு அது எதிராக இருக்கும் என்பதற்க்காகவே, பிஜே அவர்கள் அதை குறிப்பிடவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும். இப்படித்தான் இஸ்லாமிய அறிஞர்கள் தவறான விவரங்களை சொல்லிக்கொண்டு முஸ்லீம்களையும், மற்றவர்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டு வருகிறார்கள் .

தன் மரணத்தைப் பற்றித் தான் இயேசு பேசினார் என்பதற்கு பிஜே அவர்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்திலிருந்து(26) இன்னும் சில விவரங்கள்:

1. மத்தேயு 26ம் அதிகாரம் 1-2ம் வசனங்களில், தன்னை சிலுவையில் யூதர்கள் அறைவார்கள் என்று இயேசு முன்னுரைக்கிறார்.

2. அப்படியே ஆசாரியர்களும் இயேசுவை பிடித்துகொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் (மத்தேயு 26:3-5).

3. பிறகு தான் இந்த நறுமணம் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது (மத்தேயு 26:7-13) இதில் வசனங்கள் 11லிருந்து 13 வரை பிஜே அவர்கள் வேண்டுமென்றே குறிப்பிடாமல் மறைத்தார்.

4. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயேசு மறுபடியும் தன் மரணத்தைப்பற்றி முன்னுரைக்கிறார். ஏழைகள் உங்களிடத்தில் எப்போதும் இருப்பார்கள், ஆனால், நான் இருக்கமாட்டேன் என்று இயேசு சொல்கிறார்.

5. பிற்கு யூதாஸ் காரியோத்து என்ற சீடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதர்களிடம் பேசுகிறான் (மத்தேயு 26:14-16)

இப்படி ஆதாரங்களை அடுக்கிக்கொண்டுப் போகலாம்.

பிஜே அவர்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் சிந்திக்க சில கேள்விகள்:

1. எந்த சூழ்நிலையிலாவது இயேசு சீடர்களை அனுப்பி நறுமணங்களை கொண்டுவரும்படிச் சொல்லி, தினமும் பூசிக்கொண்டார் என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா?

2. இயேசுவின் சீடர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "ஏன் இந்த வீண் செலவு ?" என்று விசனப்பட காரணமென்ன? காரணத்தை நான் சொல்கிறேன், இயேசு ஒரு முறை கூட இப்படி அதிக விலை உயர்ந்த தைலத்தை பணம் செலவு செய்து வாங்கிக்கொண்டு வரும்படி தன் சீடர்களுக்கு சொல்லவில்லை என்பதும், இயேசு இப்படி வீணான செலவுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் சீடர்கள் அறிந்திருந்தனர்.

3. மட்டுமல்ல, இந்த சீடர்கள் அந்த பெண்ணின் மீது கோபப்பட்டார்களே தவிர இயேசுவின் மீதல்ல? காரணம் இயேசு அவராகவே ஏற்பாடு செய்துக்கொண்டு தைலத்தை தன் உடலில் பூசிக்கொள்ளவில்லை என்பதும், அந்தப்பெண் தானாகவே வந்து இப்படி செய்தாள் என்பதும் சீடர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் இயேசு அந்தப் பெண்ணின் மீது கோபப்படாதீர்கள், இது என் மரண சடலத்தின் மிது பூசப்படப்போகும் நறுமணம் என்று சீடர்களுக்குச் சொன்னார்.

4. எல்லாரும் இயேசுவோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, மரணத்தைப் பற்றியும், அடக்க ஆராதனைப் பற்றியும் யாராவது பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஆனால், இயேசு பேசினார். காரணம் பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசு விரும்பி நறுமணங்களை பூசிக்கொள்ள ஆசைப்படவில்லை. எல்லா சூழ்நிலைகளையும் தன் மரணத்தைப்பற்றிப் பேச இயேசு பயன்படுத்திக்கொண்டார் என்பது தான் உணமை.

5. அரசாங்கத்திற்கு வரி கட்ட, தூண்டில் போட்டு அதில் முதலாவது பிடிக்கும் மீனின் வயிற்றில் இருக்கும் நாணயத்தை எடுத்து கட்டும் படி இயேசு பேதுருவிடம் சொன்னார்(மத்தேயு 17:24-27). ஒருவேளை இயேசு அதிக விலையுள்ள நறுமணங்களை பூசிக்கொண்டு, பணத்தை வீண் செலவு செய்துக்கொண்டு இருந்து, ஆனால், அரசாங்கத்திற்கு வரிகட்ட மட்டும் பேதுருவிற்கு மீன்பிடித்து கட்டுங்கள் என்று சொல்லியிருந்தால், சீடர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். "இவர் மட்டும் வீண்செலவு செய்துக்கொண்டு விலை உயர்ந்த நறுமணத்தை பூசிக்கொள்வார், ஆனால், வரி கட்ட மட்டும், நாங்கள் உழைத்து கட்டவேண்டுமா?" என்று கேட்டு இருப்பார்கள். அவரை யாரும் பின்பற்றி இருக்கமாட்டார்கள்.

முடிவுரை:

முடிவாக பிஜே அவர்களே, முதலாவது நேர்மையான முறையில் எல்லா வசனங்களையும் படித்து கேள்வி கேளுங்கள். உண்மை பாதி பொய் பாதி என்பது உம்மைப்போன்ற மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு அழகல்ல என்பது என் கருத்து.

நீங்கள் கேட்ட கேள்வி தவறானது, அதற்கு நீங்கள் காட்டிய வசனங்களும் முழுமையாக காட்டப்படவில்லை. உங்கள் அல்லா போல, பாதி விவரங்கள் குர்ஆனில் சொல்லிவிட்டு, மீதி விவரங்கள் ஹதீஸ்களில் சொல்வது போல பைபிள் இல்லை. எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டிருக்கும், இந்த வசனத்திற்கு ஏற்ற ஹதீஸ் எது என்று மற்ற புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டம் இல்லை. எனவே, முழுவதுமாக படித்து கேள்விகள் கேளுங்கள்.

ஒரு வேளை இயேசு நறுமணம் விருப்பமாக பூசிக்கொண்டாலும் சரி, அது உங்கள் "அல்லா" உண்மையான இறைவன் என்பதையும், "குர்ஆன் " என்பது இறைவேதம் என்பதையும் நிருபிக்க உதவாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

எங்களுக்கு அல்லாவைப்பற்றியும், முகமதுவைப்பற்றியும் சொல்வதற்கு முன்பாக உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது நேர்மையும், உண்மையையும் தான் என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மார்கத்திற்காக மற்றவர்களின் வேதங்களில் (நாங்கள் தினமும் படிக்கும், தியானிக்கும் வேதத்தில்) இல்லாததை கற்பனை செய்துக்கொண்டுச் சொல்லும் நீங்கள், உங்கள் வேதத்தைப் பற்றி(நாங்கள் தினமும் படிக்காத, தியானிக்காத குர்ஆன் பற்றி) எங்களுக்கு விவரிக்கும் போது எவ்வளவு பொய்யான தகவல்களை சொல்லுவீர்கள் என்பதை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjPerfume.htm

Monday, January 21, 2008

இஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)

அருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.


ஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .

தொடுப்பு;http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8694#8694
அதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்
"அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா? என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டு "முகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு னாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்"என்றெல்லாம் சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.
அதன் தொடுப்பு;http://www.iiponline.org/
ஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது
.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .
அந்த ஹதீஸ்:

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).




அதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.

ஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை

,ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்.....?

அருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு

,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.

நாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்
.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.
ஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.அதன் தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html

ஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,


விளக்கம் உமர்

நான் ஏற்கனவே "ஈஸா குர்‍ ஆன் தளத்தின்" சார்ப்பில் "ஒரு எழுத்து" விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.

ஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக "உண்மையடியானுக்கு" விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

இவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர்‍ ஆனின் பதில்:

நான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.


நேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்‍ஆன் வராததிற்கு காரணங்கள்:

1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.

2. மேடை விவாதத்தில் "முஸ்லீம்கள்" முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.

(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள்? என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும்? நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)

3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.


எனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.

எப்போது ஆரம்பிக்கலாம்? ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):

அருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:

1. நோயாளிகள்
2. தொடை நடுங்கிகள்.
3. பேடிகள்


என்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.

யாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.

உங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ?

உங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று.ச் அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

இஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?


நீங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,
நீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,


என்னோடு "எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்".

நான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

உங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்?

இஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,
முகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், "நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை" என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.

"இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ? தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் "பணம்" கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே?


"நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி" அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.

எழுத்து விவாதத்திற்கு தயாரா? நான் ரெடி அப்ப நீங்க?


=================================
Joke of the year 2008:
ஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா?

நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

=================================
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8736#8736

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்