இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Wednesday, September 22, 2010

குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

 

குர்‍ஆன் முரண்பாடு: 

குர்‍ஆன் இறங்கிய விதம்

சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?

சாம் ஷமான்

குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இரவில் மொத்தமாக இறங்கியது என்று அனேக இடங்களில் குர்‍ஆன் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (குர்‍ஆன் 2:185) 

ஹா, மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). (குர்‍ஆன் 44:1-7) 

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (குர்‍ஆன் 97:1-5)

நாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்‍ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்‍ஆன் இறங்கியதாக சொல்கிறது. இந்த குர்‍ஆன் வசனமாகிய 97:1ம் வசனம் பற்றி விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நாம் காண்போம். இப்படி விரிவிரையாளர்களின் விளக்கங்களை நாம் பார்க்கவில்லையானால், வசனங்களின் பொருளை மாற்றி இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்துவார்கள்.

இதோ! நாம் அதை வெளிப்படுத்தினோம், குர்‍ஆனை முழுவதுமாகபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து வானத்திலிருந்து இறக்கினோம், கன்னியமிக்க இரவில், சிறப்புமிக்க இரவில் இறக்கினோம். (த‌ஃப்ஸீர் அல் ஜலலைன்) 

Lo! We revealed it, that is, the Qur'an, IN ITS ENTIRETY, [sending it down] from the Preserved Tablet to the heaven of this world, on the Night of Ordainment, that is, [the Night] of great eminence. (Tafsir al-Jalalayn; source; capital emphasis ours)

இப்படி இருந்தும், கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு மேலே கண்ட குர்‍ஆன் வசனங்கள் முரண்படுகின்றன:

இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். (குர்‍ஆன் 17:105-106) 

இன்னும்; "இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (குர்‍ஆன் 25:32) 

And those who disbelieve say: "Why is not the Qur'an revealed (nuzzila) to him all at once?" Thus (it is sent down in parts), that We may strengthen your heart thereby. And We have revealed it to you gradually, in stages. (It was revealed to the Prophet in 23 years.). S. 25:32 Hilali-Khan

இந்த முரண்பட்ட நேரெதிர் வசனங்கள், இஸ்லாமிய அறிஞர்களை ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கும்படி செய்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, முழு குர்‍ஆனும் ஒரே முறை அல்லாஹ்வினால் கீழ் வானத்திற்கு கொண்டுவரப்பட்டது, அங்கு அது இருந்தது. அதன் பிறகு காபிரியேல் (ஜிப்ராயீல்) தூதன் மூலமாக சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு அல்லாஹ் குர்‍ஆனை இறக்கினான், அதாவது 23 ஆண்டுகள் முழு குர்‍ஆனும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று பொருள் கூறுகிறார்கள். 

நவீன காலத்தின் சலபி இஸ்லாமிய அறிஞராகிய டாக்டர் அபூ அமீனா பிலால் பிலிப்ஸ், இதைப் பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அல்லாஹ்வின் வேதத்தில் கூறியிருக்கிறபடி, குர்‍ஆன் இரண்டு தனிப்பட்ட விதங்களில் இறக்கப்பட்டது. குர்‍ஆனின் வெளிப்பாடு குறித்து குர்‍ஆனில் மற்றும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட விவரங்களில் உள்ள முரண்பாட்டை சரி செய்வதற்கு, இந்த இரண்டு வகையாக குர்‍ஆன் இறக்கப்பட்ட முறையை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது முதல் வகையில் பார்த்தால், முழு குர்‍ஆனும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது அல்லது லைலத்துல் கதிர், என் கன்னியமிக்க இரவில் இறக்கப்பட்டது. இரண்டாவது வகையில் பார்த்தால், குர்‍ஆன் சிறிது சிறிதாக இறைத்தூதர் மரிக்கும் வரையில் இறக்கப்பட்டது.

முதல் வெளிப்பாடு: 

பாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்த (அல் லாஹ் அல் மஹ்பூத்) குர்‍ஆனை அல்லாஹ் இறங்கச் செய்தான், கீழ் வானத்தில் இந்த குர்‍ஆன் இறக்கப்பட்டது. இந்த முதல் வெளிப்பாட்டில், முழு குர்‍ஆனும் ஒரே முறை கீழ்வானத்தில் இறக்கப்பட்டது, இந்த இடத்திற்கு "பைத் அல் இஜ்ஜாஹ்" என்று அழைப்பார்கள்(கன்னியம் மற்றும் வல்லமையுள்ள வீடு என அழைக்கப்படுகிறது). குர்‍ஆன் இறக்கப்பட்ட அந்த பாக்கியமான இரவை "லைலத்துல் கதிர் (The Night of Decree)" என்று அழைப்பார்கள். இது ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் வரும் ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட நாளாகும். இந்த முதல் வெளிப்பாட்டை அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான் (மேற்கோள்கள் : குர்‍ஆன் 44:1-3, 97:1, 2:185) 

இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட முதல் வெளிப்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன, ஏனென்றால், குர்‍ஆன் முழுவதும் ஒரே முறை ரமலான் மாதத்தின் ஒரே இரவில் முஹம்மது நபிக்கு இறக்கப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விவரமாகும்.

இபின் அப்பாஸ் கூறுகையில், குர்‍ஆன் மேல் வானத்திலிருந்து எடுக்கப்பட்டு கீழ்வானமாகிய பைத் அல் இஜ்ஜாஹ் என்ற இடத்தில் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தின் லைலத்துல் கதிர் என்ற இரவில் (The Night of Decree) இறக்கப்பட்டது என்று ஒரு தொகுப்புச் சொல்கிறது. அல்லாஹ் விரும்பியிருந்தால், முழு குர்‍ஆனையும் ஒரே இரவில் ஒரே முறை வெளிப்படுத்தியிருப்பான். இந்த வகையில் தான் முந்தைய வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் தன் வெளிப்பாட்ட இரண்டு வகையாக பிரித்தான். முதலாவதாக, மேல் வானங்களிலிருந்து குர்‍ஆன் தன் கடைசி தூதருக்கு இறக்கப்படுகிறது என்ற விவரத்தை "மேல் வானங்களில்" இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. (Philips, Usool at-Tafseer, 6. The Revelations of the Qur'aan, pp. 94-96; sources 1, 2; comments within brackets and underline emphasis ours)

இன்னொரு இஸ்லாமிய மூலம் கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

ரமலான் மாதத்தில் தான் குர்‍ஆன் வெளிப்பட்டது, அதாவது ஜிப்ராயீல் தூதன் முழு குர்‍ஆனையும் முதல் வானத்திற்கு கொண்டு வந்தார், தேவதூதர்களில் எழுதுபவர்களுக்கு குர்‍ஆன் ஓதி காண்பிக்கப்பட்டது மற்றும் முஹம்மதுவிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது. சில நேரங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வசனங்கள் மட்டும் இறங்கின, சில நேரங்களில் ஒரு முழு அதிகாரமும் இறக்கப்பட்டது. … (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; capital and underline emphasis ours)

மற்றும் இன்னொரு இஸ்லாமிய விரிவுரை கீழ்கண்ட விதமாக கூறுகிறது:

இபின் அப்பாஸ் அவர்களின் அதிகாரபூர்வமான அறிப்பு கூறுகிறது: "இதோ நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்பதைக் குறித்து அறிவித்ததாவது: "நாம் இதனை வெளிப்படுத்தினோம்" என்று கூறினார். இதில் அவர் சொல்லவருவது என்னவென்றால் "நாம் முழு குர்‍ஆனோடு ஜிப்ராயீலை கீழ் வானத்திற்கு அனுப்பினோம் (அது வல்லமையின் இரவாகும்) அது நியாயத்தீர்ப்பின் சட்டத்தின் இரவாகும். அந்த இரவு மன்னிப்பு மற்றும் பாக்கியம் பொருந்திய இரவாகும். அதன் பிறகு அந்த குர்‍ஆன் பகுதி பகுதியாக நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)க்கு இறக்கப்பட்டது. (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source)

இஸ்லாமியர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உள்ள பிரச்சனையை வாசகர்கள் உடனே கண்டுக்கொள்ளலாம். இரண்டு வகைகளில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக குர்‍ஆன் எங்கும் சொல்வதில்லை. அதாவது, முதலாவதாக‌ ஒரு முறை முழு குர்‍ஆனும் கீழ் வானம் வரைக்கும் இறக்கப்பட்டது என்றும், இரண்டாவதாக, பகுதி பகுதியாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இஸ்லாமியர்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களெல்லாம் தங்கள் வேதத்தில் உள்ள பெரிய தவறை சரி செய்ய கொடுக்கப்படும் விளக்கங்களே. அதாவது ஒரு குறிப்பிட்ட இரவில் முழு குர்‍ஆனும் இறங்கியதாக குர்‍ஆன் சொல்வது, பிறகு அதற்கு முரண்பட்ட விதத்தில் முஹம்மதுவிற்கு பகுதி பகுதியாக வெளிப்பாடு வந்தது என்று அதே குர்‍ஆன் சொல்வதும் முரண்பட்ட விவரமாகும். 

உண்மையில் சொல்லப்போனால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமலான் மாதத்தில் குர்‍ஆன் இறங்கியதாக ஒரு குர்‍ஆன் வசனம் சொல்கிறது:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது....(குர்‍ஆன் 2:185)

ரமளான் மாதத்தில் தேவதூதர்களுக்கு கீழ்வானத்தில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது என்று இந்த வசனம் சொல்லாமல், இந்த புத்தகம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்டது என்றுச் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமளான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பதாகும், இது இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கியிருக்கும் சொந்த கருத்திற்கு விளக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் உள்ளது. 

மேற்கொண்டு படிக்க:

இந்த விவரங்கள் பற்றி குர்‍ஆனில் உள்ள சில வசனங்கள் மறைமுகமாக பிரச்சனையை உருவாக்கின்றன. இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசவில்லையானாலும், குர்‍ஆன் 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று நாம் கருதினால், அது இவ்வசனங்களுக்கு ஒவ்வாத முரண்பட்ட விவரங்களாக உள்ளன. இவ்வசனங்கள் நமக்கு எதை சொல்கின்றன என்று கவனித்தால், குர்‍ஆன் ஒரே முறை முழுவதுமாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்ற தோரணையில் அவைகள் விளக்கமளிக்கின்றன. இந்த விவரங்கள் ஆங்கிய இந்த விவாத மறுப்புக் கட்டுரையை படிக்கவும்: குறைந்த பட்சம் குர்‍ஆனில் பாதியாவது தெளிவாக உள்ளதா? 

இன்னொரு வகையில் பார்த்தால், குர்‍ஆன் ஒரு முழு புத்தகமாக ஒரே முறை இறக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குர்‍ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. இந்த விவரங்கள் அடங்கிய கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய ஆய்வு. 

இப்போது நாம் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரையைப் பற்றி ஒரு இஸ்லாமிய விவாதம் புரிபவர் கொடுத்த பதிலுக்கு மறுப்பை சாம் ஷமான் கொடுத்துள்ளார். அதனை இங்கு படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதம் பற்றிய மறு ஆய்வு - ஒரே முறை இறங்கியதா அல்லது சிறிது சிறிதாக இறங்கியதா? 

ஆங்கில மூலம்: Quran Contradiction: The descent of the Quran Piecemeal or all at once? 

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை இங்கு படிக்கலாம்


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.






--
8/25/2010 12:11:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Wednesday, August 25, 2010

முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி

 


முஹம்மது ஒரு பாவியா? பாகம் 2: ஹதீஸ்களின் சாட்சி

("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)

WAS MUHAMMAD A SINNER - PART 2

ஆசிரியர்: சைலஸ்

முஹம்மது ஒரு பாவி தான் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை இங்கு முதல் பாகத்தை சொடுக்கி படிக்கவும்.

ஹதீஸ்களிலிருந்து ஆதாரங்கள்: 

புகாரி ஹதீஸ்களில் உள்ள முஹம்மதுவின் வேண்டுதல்களின் சுருக்கத்தை இந்த கட்டுரையின் முதல் பாகத்தின் ஆரம்பத்தில் நான் கொடுத்து இருந்தேன். இப்போது, அந்த நான்கு ஹதீஸ்களை முழுவதுமாக இங்கு படிப்போம்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். 

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) …. 

என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார் 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368 

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' … 

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக) 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர். 

(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். 

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399 

அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்: 

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ.

(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

இந்த பாவமன்னிப்பின் ஜெபத்தில் அவர் "பாவம்" என்பதற்கு வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அவர் "தன்ப்" என்ற வார்த்தைக்கு பதிலாக"க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். 

இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (The Encyclopedia of Islam [9]) "க்ஹடிய – khati'a" என்ற வார்த்தையின் பொருளை கீழ்கண்டவாறு விவரிக்கிறது:

"Moral lapse, sin, a synonym of dhanb. The root means "to fail, stumble", "make a mistake", "of an archer whose arrow misses the target". 

"நற்குண குறைபாடு, பாவம், 'தன்ப்' என்ற வார்த்தைக்கு சுமமானது". இதன் மூல வார்த்தையின் பொருள் "தவறுவது, தடுமாறுவது", "தவறு செய்வது", "குறி தவறிய அம்பை எய்தவன்" என்பவைகளாகும்.

முஹம்மது தன்னுடைய விண்ணப்பத்தில் (ஜெபத்தில்), பாவத்தின் அனைத்து விதங்களையும் அங்கீகரிக்கிறார்:

அதாவது: 

• தீய செயல்கள், 

• தவறுகள், 

• தெரியாமல் செய்த தவறுகள், 

• பிழைகள், 

• தற்செயலாக செய்த பிழைகள், 

• வேண்டுமென்றே தெரிந்தே செய்த பாவங்கள், 

• கடந்த கால பாவங்கள், 

• எதிர்கால பாவங்கள் மற்றும் 

• பெரிய பாவங்கள் 

என்று அனைத்து விதமான பாவங்கள் பற்றியும் கூறுகிறார். இந்த செயல்கள் அனைத்தும் வெறும் சிறிய "தவறுகள்" அல்ல, அதற்கு பதிலாக இவைகள் அனைத்தும் "தண்டனைக்கு உகந்த பாவங்கள்" ஆகும், இதனை முஹம்மதுவின் விண்ணப்பத்தை கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம். 

முஹம்மது ஒரு பாவி என்று அவரே அங்கீகரித்து விட்டார். அவர் செய்த பாவ மன்னிப்பின் விண்ணமானது, அவர் தன்னுடைய பாவத்தின் தீவிரத்தை அறிந்திருக்கிறார் என்பதை நமக்கு காட்டவில்லையா? அல்லாஹ் பாவங்கள் செய்யும் மனிதர்களை தண்டிக்கிறார் என்பதை அறிந்திருந்தார், அதனால் தான் அவர் பாவமன்னிப்பிற்காக அல்லாஹ்விடம் வேண்டினார். தன்னுடைய குற்றங்களுக்காக நரகத்தில் எரிய முஹம்மது விரும்பவில்லை. 

கடைசியாக, தான் தண்டிக்கப்பட்டு வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என்ற பயம் முஹம்மதுவிற்கு இருந்துக்கொண்டே இருந்தது.

சஹீ முஸ்லிம், [10], தொகுப்பு 4, எண் 1212 

ஆயிஷா அறிவித்ததாவது: 

ஒரு யூத பெண் என்னோடு இருக்கும் போது, இறைத்தூதர் என் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அந்த யூதப்பெண் இறைத்தூதரிடம்: "நீங்கள் கல்லரையில் இருக்கும் போது, உங்களுக்கு சித்திரவதை உண்டு என்பதை அறிவீர்களா?" என்று கேட்டாள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் நடுங்கிவிட்டார் மற்றும் சித்தரவதையை அனுபவிப்பது யூதர்களாவார்கள் என்று கூறினார். ஆயிஷா அறிவித்ததாவது: சில இரவுகளை நாம் கழித்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் கூறினார், "அல்லாஹ் எனக்கு என்ன வெளிப்படுத்தினார் என்று உனக்குத் தெரியுமா? ' நீ கல்லரையில் இருக்கும் போது உனக்கு சித்திரவதை உண்டு' என்று எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார். இதன் பிறகு கல்லரையில் கொடுக்கப்பட இருக்கும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பிற்காக அல்லாஹ்வின் தூதர் வேண்டிக்கொள்வதை நான் கேட்டேன். 

Sahih Muslim, [10], Book 4, Number 1212:

Narrated Aisha:

"The Prophet entered my house when a Jewess was with me and she was saying: Do you know that you would be put to trial in the grave? The Messenger of Allah trembled (on hearing this) and said: It is the Jews only who would be put to trial. Aisha said: We passed some nights and then the Messenger of Allah said: Do you know that it has been revealed to me: "You would be put to trial in the grave"? Aisha said: I heard the Messenger of Allah seeking refuge from the torment of the grave after this."

கல்லரைக்குள் முஹம்மதுவிற்கு வேதனை உண்டு என்று அல்லாஹ் அவருக்கு "வெளிப்படுத்தினார்". இதனால், தனக்கு வரவிருக்கும் இந்த கல்லரையின் வேதனையிலிருந்து விடுதலை ஆகவேண்டுமென்று முஹம்மது தொடர்ச்சியாக இறைவனிடம் வேண்டிக்கொண்டார். முஹம்மது ஒரு சிறு குற்றமும் இல்லாத பரிசுத்தராகவும், தூய்மையானவராகவும் இருந்திருந்தால், கல்லரையில் ஏன் அல்லாஹ் அவருக்கு வேதனையை கொடுப்பேன் என்று சொல்லப்போகிறார்? முஹம்மது தன் பாவங்களைப் பற்றி அறிந்திருந்தார், அதனால் அவர் இறைவனிடம் பாவமன்னிப்பிற்காக வேண்டிக்கொண்டு இருந்தார். 

முஹம்மது என்னென்ன பாவங்களை செய்துள்ளார்? அவரது செயல்களை நீங்களே கவனித்து, சோதித்துப் பார்த்து, ஒரு முடிவிற்கு வாருங்கள். நான் இஸ்லாமிய நூல்களை ஆதாரங்களை வாசித்த போது, அதாவது குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா என்று சொல்லக்கூடிய அவரது வாழ்க்கை சரித்திரத்தை படித்த போது அதிர்ச்சியூட்டும் சில செயல்களை அவர் செய்ததாக கண்டேன். சில இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் இந்த செயல்கள் அனைத்தையும் அறிவார்கள். இவைகள் அனைத்தும் இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நூல்களை எழுதியவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீது மிகவும் பக்தியுள்ள தீவிர இஸ்லாமியர்களே, இவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளார்கள்.

முஹம்மது செய்த சில பாவங்களின் பட்டியல்:

முஹம்மது செய்த சில பாவங்களின் விவரங்களை இங்கே காணலாம்.

1) அற்ப பணத்தை பெறுவதற்காக ஒரு மனிதனை கொடுமைப்படுத்தி, கொலை செய்தவர் முஹம்மது.

2) பெண் அடிமைகள் கற்பழிக்கப்பட அனுமதி அளித்தவர் முஹம்மது.

3) தன்னை "எதிர்த்தாள்" என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண்ணை கொலை செய்ய வைத்தவர் முஹம்மது.

4) தன்னை "பரியாசம் செய்தாள்" என்ற காரணத்திற்காக ஒரு அடிமைப் பெண்ணை கொலை செய்தவர் முஹம்மது.

5) சாத்தானின் (இப்லீஷ்) வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாக கூறியவர் முஹம்மது.

மேலே உள்ள அனைத்து பாவங்களையும் செய்தவர் முஹம்மது ஆவார். இப்படிப்பட்டவர் தனக்கு பாவமன்னிப்பு வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது? தான் ஒரு பாவி என்ற உண்மை அவரது உள்ளத்தின் ஆழத்தில் வேறூன்றி இருந்தது. 

இரண்டாம் பாகத்தின் முடிவுரை: முஹம்மது ஒரு பாவியாக இருந்தார் என்பதாகும்

முஹம்மது தான் ஒரு பாவியாக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டார்.தன்னுடைய பாவங்களை அவர் "தீய செயல்கள்" என்று அழைக்கிறார். ஆனால், பிறகு வந்த இஸ்லாமியர்கள், "இஸ்லாமுக்கு எதிரான ஒருகோட்பாட்டை சொல்கிறார்கள்", அதாவது முஹம்மது ஒரு பாவி அல்ல என்று கூறுகிறார்கள். இவர்கள் இப்படி கூறுவதற்கு காரணம், அவர்கள் முஹம்மதுவை இயேசுவிற்கு நிகராக காட்ட முயற்சி எடுக்கிறார்கள். 

முஹம்மதுவின் கூற்றுகளின் படியே முஹம்மது ஒரு பாவி தான். முஹம்மது கொண்டு வந்த கோட்பாடுகளின் படி பார்த்தால், அவர் மன்னிக்கப்படாவிட்டால், நிச்சயமாக அவருக்கு இறை தண்டனை உண்டு. 

முஹம்மது ஒரு பாவியா என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் முற்றுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தில் இயேசு எப்படி பரிசுத்தராக இருந்தார் என்பதை இஸ்லாமிய ஆதாரங்களின் படி நாம் காண்போம்.

ஆதார நூற்ப்பட்டியல்

[1] "Sahih Bukhari", translated into English by Dr. Muhammad Muhsin Khan, at the Islamic University in Medina, published by Kitab Bhavan, New Delhi, India. 

[2] "Muhammad and the Religion of Islam", by John Gilchrist, page 273, published by Jesus to the Muslims, Durban, South Africa. It can be found on the web at: http://answering-islam.org/Gilchrist/Vol1/ 

[3] "The Koran", by N. J. Dawood, published by Penguin, London England 

[4] "The Meaning of the Glorious Koran", by M. Pickthall. published by Mentor, NY, NY. 

[5] "The Koran", by A. J. Arberry, published by Oxford University Press, Oxford, England. 

[6] "The Koran", by J. M. Rodwell, published by Everyman, London, England. 

[7] "The Holy Quran", by Yusef Ali, published by Amana, Beltsville, Maryland. 

[8] The Hughes Encyclopedic Dictionary of Islam" 

[9] "Ency. of Islam", pub. by Brill, Netherlands. 

[10] "Sahih Muslim", translated by A. Siddiqi, published by International Islamic Publishing House, Riyadh, KSA. 

[11] இக்கட்டுரையின் அனைத்து குர்‍ஆன் வசனங்களும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. வேறு மொழியாக்கம் பயன்படுத்தப்பட்டால், அம்மொழியாக்கத்தின் பெயர் அவ்வசனங்களின் கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

mo-sinner.htm
Rev A: 4/26/00

ஆங்கில மூலம்: WAS MUHAMMAD A SINNER? 

இதர கட்டுரைகள்:

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1 

முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது (47:19) 

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) 

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

tamil/authors/green/torture.html


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.





--
8/25/2010 12:13:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்