இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Wednesday, July 29, 2009

தர்மிக்ஷி - என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்

 


என் கேள்விகளுக்கு பதில்களை கண்டுக்கொண்டேன்



என் பெயர் தர்மிக்ஷி. நான் மலேசியாவில் வாழும் மலாய் இனத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன்.


நான் என் சுய விருப்பத்தின் படி கிறிஸ்தவத்தை அறிந்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, எந்த ஒரு மனிதனின் வற்புறுத்தலும் இல்லாமல், சுயமாக‌ கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, தபால் மூலம் அது தொடர்பான பயிற்சியை எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னை சுற்றியிருந்த நண்பர்களும் நான் வாழ்ந்த சூழ்நிலையும், நான் கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள தூண்டுதலாக இருந்தது . ஆனால், என் இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு என்னை தர்ம‌சங்கடமான நிலையில் வைத்தது. ஏனென்றால், இஸ்லாமில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சடங்குகள் இருப்பதாக எனக்குப் பட்டது, உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், நமாஜ் என்றுச் சொல்லக்கூடிய தொழுகையை ஒரு குறிப்பிட்ட வகையில் தான் செய்யவேண்டும், மற்றும் அந்த தொழுகை நேரத்தில் நமக்கு புரியாத மொழியில் தான் சூராக்களை ஓதவேண்டும் போன்றவைகளைச் சொல்லலாம். அப்பயிற்சியின் மூலம் அடிப்படை கிறிஸ்தவ சித்தாந்தத்தையும், இஸ்லாத்துடன் அது கொண்டுள்ள ஒற்றுமையையும் அறிந்து கொண்டேன் (அதாவது நரகம் பற்றிய நம்பிக்கையைப் பற்றிச் சொல்லலாம்). அந்த தபால் வழி கிறிஸ்தவ படிப்பை முடித்ததும் எனக்கு ஒரு சான்றிதழ் அனுப்பினார்கள்.

அதன் பிறகு நான் கோலாலம்பூரில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்குச் சென்றேன். இங்கு நான் என் சுய விருப்பத்தின்படிச் சென்றேன். அங்கு செல்வதற்கு முன்பு, அந்த தேவாலயத்தின் நிர்வாகத்தொடு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, என்னை அறிமுகம் செய்துக்கொண்டு, நான் கிறிஸ்தவத்தை அதிகமாக அறிய விரும்புகிறேன், அதற்காக வரவிரும்புகிறேன் என்றுச் சொன்னேன். நீங்கள் தாராளமாக ஆராதனையில் (தொழுகையில்) கலந்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆராதனையில் கலந்துக்கொண்ட போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த மக்கள் என்னை அன்புடன் வரவேற்று நட்புடன் பழகினார்கள். அந்த தேவாலயத்தில் எந்த ஒரு சிலை அல்லது விக்கிரகத்தை நான் காணவில்லை, இது எனக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த தேவாலயம் (சர்ச்) ஒரு பெரிய அறையாக (ஹால்) இருந்தது, மொத்தத்தில் ஒரு மசூதியைப் போல இருந்தது.


அந்த ஆராதனையில் "இரா போஜனம்" என்றுச் சொல்லக்கூடிய "ஹோலி கம்யூனியன்" இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன். அப்படிப்பட்ட சமயத்தில் இஸ்லாமியர்களை வலையில் சிக்கவைப்பதற்கு, ஒரு ரொட்டித் துண்டைக் கொடுபபர்கள். அந்த ரொட்டித் துண்டை சாப்பிட்டவுடன் நம்முடைய இருதயம் இருளடையும், பிறகு நாம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம் என்று நான் இஸ்லாமியர்களால் போதிக்கப்பட்டு இருந்தேன். ஆனால், அன்று "இரா போஜனம்" நடைப்பெறவில்லை. ஆராதனை முடியும் தருவாயில் எனக்கு ஒரு சிறு புத்தகம் வழங்கப்பட்டு, என்னுடைய எதிர்கால‌ நம்பிக்கையைப் பற்றி சிந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.


உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க வேண்டும் என்று தோன்றினாலும், தீர்வு காணப்படாத பல ஐயங்கள் இருந்தன. நான் என்னையே கேட்டுக்கொண்டேன், "இந்த புதிய நம்பிக்கையினால் எனக்கு என்ன நன்மை உண்டாகப்போகிறது?". நான் ஏன் இப்படி கேட்டுக்கொண்டேன் என்றுச் சொன்னால், அக்காலத்தில் மலேசியாவில், "ஒரு முஸ்லீம் எந்த காரணத்தைக் கொண்டும், இயேசுவை பின்பற்றுகிறவராக மாறமுடியாது". இன்னும் அனேக கேள்விகள் எழும்பி என்னை வாட்டின‌, ஆதாவது, "இந்த புதிய நம்பிக்கைக்காக நான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிவரும்?, நான் எந்தெந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? என்னுடைய இந்த முடிவு சரியானதா?". இப்படிப்பட்ட அனேக கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்தன. இக்கேள்விகள் அனைத்தையும் நான் புறந்தள்ளிவிட்டேன், மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட்டேன் (ஹஜ்ரத் ஈஸாவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டேன்).


இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியனாக மாறினேன். என் குடும்ப அங்கத்தினர்களும், என் நண்பர்களும் தொடர்ந்து தொழுகையை நிலைநாட்ட உற்சாகப்படுத்தினர். அவர்கள் கேட்டுக்கொண்டபோதெல்லாம் அவர்களுடன் இணைந்து நான் தொழுவேன். தொழுகை முடிந்ததும் நிம்மதியாக நான் ஓய்வு எடுத்துக்கொள்வேன். இப்படி பலமுறை நடந்தது. சுமார் ஆறு மாதங்களாக என் இஸ்லாமிய கடமைகளை செய்ய நான் தவறவில்லை. அதன் பிறகு சிறிது அமைதியாகிவிட்டேன். என்னை சுற்றியுள்ள மக்களால் நான் அதிகமாக கவரப்பட்டேன். எனக்கு திருமணமாவதற்கு முன்பே நான் மத கடமைகளை செவ்வனே செய்வதில், அதிக ஆர்வம் காட்டிவந்தேன். தினமும் ஐந்து வேளை தொழுகையை நான் கடைபிடிக்காமல் விட்டுவிட்டதில்லை. இதோடு கூட, நான் திருமணம் செய்ய இருந்த பெண் கூட (இப்போது என் மனைவி) என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினாள். நான் தொலைபேசியில் அப்பெண்ணோடு தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம், "இன்று எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்?" என்று கேட்பாள். நான் தினமும் சிறிது கால தாமதமாக எழுந்திருப்பேன், இதனால் எங்கே நான் என் காலைத் தொழுகையை தவறவிட்டுவிடுவேனோ என்று எண்ணி இப்படி கேள்வி கேட்பாள். ஏன் இன்னும் அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை செய்யக்கூடாது என்று கேட்கத்தொடங்கிவிடுவாள். இப்படிப்பட்ட தொடர்ச்சியான உற்சாகத்தினால், நான் என் ஆன்மீக வாழ்வில் உச்சியை அடைந்திருந்தேன்.


வளர்ந்த பிறகு உம்ரா கடமையை நிறைவேற்ற நான் மெக்காவிற்குச் சென்றேன். பல நாட்டிலிருந்து வந்திருந்த பல இன மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தேன். இஸ்லாத்திலும் கருத்து வேறுபாடும் சபை வேறுபாடும் இருப்பதைக் கண்டேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக தொழுகை நடத்தினார்கள். ஒரே திசையை நோக்கினாலும் வெவ்வேறு விதமாகவே தொழுது கொண்டார்கள். இந்த தொழுகைகளில் கண்ட வித்தியாசம் என்னை சந்தேகத்திற்குள்ளாக்கியது. தொழுகை எப்படி செய்யவேண்டும் என்ற முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இதன் படி மட்டுமே செய்யவேண்டும் என்று நான் போதிக்கப்பட்டேன். ஆனால், இங்கு மக்காவிலேயே தொழுகை பலவகைகளில் செய்யப்படுவதை என்னால் காணமுடிந்தது. இந்த தொழுகை முறைகளில் எது சரியான முறை என்று நான் ஆச்சரியப்பட்டேன். மற்றும் இதுவரை நான் பின் பற்றி செய்த தொழுகை முறை சரியானதா என்ற சந்தேகம் உண்டானது. ஒருவேளை நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை தவறானதாக இருக்குமானால், என் தொழுகைகள், வேண்டுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இப்படியில்லாமல், நான் செய்துக்கொண்டு வந்த தொழுகை முறை சரியானதாக இருந்தால், மக்காவில் நான் என் கண்களுக்கு முன்பாக காணும் தொழுகைகளை அல்லாஹ் அங்கீகரிக்கமாட்டார். இது மிகவும் வேதனையான, தர்மசங்கடமான முடிவாகும்.


தொழுகையை எந்த முறையில் செய்யவேண்டும் என்று குர்‍ஆனில் சொல்லப்படவில்லை, முஹம்மதுவின் செய்கைகள், வார்த்தைகள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. ஒருவர் எந்த முறையில் தொழுகையை செய்கிறாரோ அதன் மீது சார்ந்து தான் அவர் ஹதீஸ்களுக்கு பொருள் கூறுவார். ஒரு குறிப்பிட்ட தொழுகை முறைக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒரு இஸ்லாமியர், மற்றவர்கள் வேறு முறையில் தொழுகையை செய்வதைக் கண்டால், சரமாரியாக கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், தொழுகை நேரத்தில் கைகளை வைத்துக்கொள்ளும் நிலையைப் பற்றிச் சொல்லலாம். அதாவது கைகளை விரித்து வைத்துக்கொள்ளவேண்டுமா, அல்லது இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு மாற்றவேண்டுமா? ஒருமுறைக்கு அடுத்த முறைக்கு இடைவெளி எவ்வளவு நேரம் இருக்கவேண்டும்? அல்லது எவ்வளவு நேரம் இடைவெளி இருக்கக்கூடாது? இப்படிப்பட்ட விவரங்கள் அனைத்தும் குர்‍ஆனில் சொல்லப்படவில்லை அல்லது குர்‍ஆனினால் உறுதியாக்கப்படவில்லை. இறைத்தூதரின் வார்த்தைகளாகிய ஹதீஸ்களுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களை நான் என் கண்களால் கண்டு சாட்சியிடுகிறேன். இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமாக பொருள் கூறுவதினால், அனேக புதிய முறைகளை நான் கண்டிருக்கிறேன். ஒரு சில முறைகளைத் தவிர மலேசியாவில் எல்லாவித தொழுகை முறைகளை பார்க்கமுடிவதில்லை. மலேசியாவில் ஷபியா தொழுகை முறை கற்றுக்கொடுக்கப்படுகிறது. மக்காவில் மலேசிய முறைப்படியான தொழுகை முறையை பின்பற்றி நான் தொழுதுக்கொண்டேன்.


நான் மக்காவில் இருந்த சமயத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அனேக கேள்விகள் எழும்பின. என்னை நானே கேட்க ஆரம்பித்தேன், "ஏன் நாங்கள் இப்போது தொழுதுக்கொள்வதுப் போல தொழுதுக்கொள்ள வேண்டும்?" ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நபி செய்தது போலவே நாம் ஏன் இன்று செய்யவேண்டும்? இப்படி தொழுதுக்கொள்வதில் உள்ள தத்துவம் பற்றி கேள்வி எழுப்பினேன். என் மனதில் நான் போராடினேன். "இவைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக செய்யப்பட்டவைகள், நான் இப்போது செய்துக்கொண்டு இருப்பது சரியானதா?" என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். மக்காவில் உள்ள கருப்புக் கல்லை முத்தமிட நான் எல்லா மக்களுக்கு போட்டியாக‌ முட்டியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் போது, என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன்? ஏன்? ஏன்? இப்படி செய்வது எதற்காக?"


நான் மக்காவிலிருந்து என் தாய் நாட்டிற்கு வந்த பிறகு, என் தொழுகை வாழ்க்கையை சிறிது தளர்த்தினேன். கிறிஸ்தவம் பற்றி மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தேன். இப்படி சிந்தித்ததாலும் எனக்கு எந்த நன்மையும் இல்லை, எனென்றால், யாரும் கிறிஸ்தவம் பற்றி எனக்கு போதிக்கவில்லை. இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்று சரியாக விளங்கவில்லை.


திடீரென்று என் மனதில் ஒரு ஆலோசனை வந்தது. நான் தொலைபேசி புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ சபை விலாசத்தை எடுத்துக்கொண்டு அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் பேசிய நபர் ஒரு இந்திய பெண்மணியாவார், அவர் தன்னை வந்து சந்திக்கும்படிச் சொன்னார். ஆகையால், நான் அவரைக் காணச் சென்றேன். நான் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். இக்கேள்விகளில் ஒரு கேள்வி, "உருவச் சிலைகளைப் பற்றியது". இதற்கு முன்பு ஒரு பிலிப்பினோ நண்பர் எனக்கு ஒரு சிறிய இயேசுவின் சிலையை கொடுத்து இருந்தார். அச்சிலையை நான் என்னுடன் கொண்டு வந்திருந்தேன், அதனை அப்பெண்மணியிடம் காண்பித்தேன். அவர் "இது சரியானது அல்ல" என்றுச் சொன்னார். இது தான் நான் முதல் முறை இப்படிப்பட்ட பதிலை கேட்டது. இந்த பதிலைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த பெண் எனக்கு இன்னும் அதிகமாக விவரித்தார்கள், பிறகு ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து வீட்டிற்குச் சென்று படிக்கும் படிச் சொன்னார்கள். அந்த சிறிய புத்தகத்தை படித்த பிறகு நான் அந்தப் பெண்ணை மறுபடியும் சந்தித்து, "நான் ஹஜ்ரத் ஈஸாவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன், இதற்கு உதவி புரியுங்கள்" என்றுச் சொன்னேன். அந்த நாளில் ஒரு சிறிய‌ ஜெபத்தை சொல்லி, நான் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி புரிந்தார்கள். அந்த சகோதரி ஒரு சிறிய‌ ஜெபத்தைச் சொல்லச் சொல்ல நான் திரும்பச் சொன்னேன், அது ஒரு சிறிய ஜெபம் தான், அதாவது மனந்திரும்புதலுக்கான ஜெபம் மற்றும் ஹஜ்ரத் ஈஸாவிற்கு என்னை ஒப்புவித்ததற்கான சிறிய ஜெபம். பிறகு எனக்கு பைபிளின் ஒரு பிரதி கொடுக்கப்பட்டது.


அந்த பெண்மணி என்னிடம் "உங்களை தொடர்ந்து வழி நடத்த, ஒரு பெண்ணாக என்னால் முடியாது, எனவே, உங்களோடு தொடர்பு கொண்டு வழி நடத்த ஒரு சகோதரனை" நான் காண்பிக்கிறேன் என்றுச் சொன்னார்கள். அவர் சகோதரர் "அ" என்பவரின் விலாசத்தைக் கொடுத்தார்கள், அதன் பிறகு இந்த சகோதரர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள்.


இப்பொழுதெல்லாம், "ஏன்" என்ற கேள்விகளை நான் கேட்பதில்லை, ஏனென்றால், நான் என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கண்டுக்கொண்டேன். நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு ஒரு நண்பர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள், அதினால் என் அனேக சந்தேகங்கள் தீர்ந்தன. அந்த புத்தகத்தில், புதிதாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இது மிகவும் உபயோகமான புத்தகமாகும்.


இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஹஜ்ரத் இயேசுவை பின் பற்றுகிறவனாக நான் மாறியதால், என் நம்பிக்கையை வெளிக்காட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுடன் இஸ்லாமிய சமுதாயம் மிகவும் கொடுமையான முறையில் நடந்துக்கொள்கிறது, அதுவும் காரணமில்லாமலேயே வெறுக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியேறுபவனின் மீது கோபமும், மூர்க்கமும் கொண்டு அவதூறாக பேசுகிறார்கள், ஏனென்றால், இஸ்லாமை விட வேறு ஒரு மார்க்கத்தை தெரிந்தெடுக்க அவன் தைரியம் கொண்டதால், இந்த நிலை. எல்லா விதமாக பயங்கரமான விளைவுகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்கள் சந்திக்க வேண்டி வரும்.


ஈஸா அல் மஸீஹாவை பின் பற்றிய நாள் முதற்கொண்டு என் நம்பிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. நான் முஸ்லீமாக இருந்த போது, கடவுள் பயப்படவைப்பவர் போலவும், தண்டிக்கிறவர் போலவும் கண்டேன். ஆனால், இப்போது அவரை வித்தியாசமாக காண்கிறேன். இப்போதும் அவர் மிகவும் வல்லமைமிக்க உயர்ந்த தேவன் தான், ஆனால், அதே நேரத்தில் நான் அன்போடு அவரோடு பேசி, என் எண்ணங்களை அவரோடு பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவரை அவ்வளவு நெருக்கமாக காண்கிறேன். எனக்கு நெருக்கமாக அவர் இருக்கிறார், நான் சொல்வதை அவர் கேட்கிறார் என்பதை நான் அறிவேன். என்னை பொருத்த மட்டில், ஈஸா மஸீஹா உலக இரட்சகர் ஆவார், அவரே தேவனாவார். நான் ஜெபம் செய்யும் போதெல்லாம், இதனை நான் நினைவில் நிறுத்துகிறேன்.


தேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிகவும் சிறப்பான ஆசீர்வாதம் என்னவென்றால், அவரது இரட்சிப்பை நான் காணும்படிச் செய்ததாகும், என்னை அவர் தெரிந்தெடுத்துக்கொண்டதாகும். தேவன் என்னை தெரிந்தெடுத்துக் கொண்டார் மற்றும் என்னைப் பற்றிய அவரது திட்டம், மலேசிய இஸ்லாமியர்களுக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரிந்ததை பகிர்ந்துக்கொள்வதாகும். சமீபத்தில், ஒரு மலேசிய பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அனேக விஷயங்களை பேசினோம், அதாவது அப்பெண்ணின் கிறிஸ்தவ நண்பர்கள், பைபிள் மற்றும் ஈஸா மஸீஹா போன்ற தலைப்புக்கள் பற்றி பேசினோம். ஆனால், அப்பெண் விசுவாசத்தில் காலெடுத்து வைக்க தயாராக இல்லை. இருந்தபோதிலும், ஒரு மலாய் பெண்ணாக இருந்தால், கட்டாயமாக ஒரு முஸ்லீமாகத் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றுச் சொன்னாள்.


மலேசிய அரசாங்கம், மக்கள் இதர மதங்களுக்கு மாறுவதற்கு தடை விதிக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன் பின்பற்றும் தன் நம்பிக்கைக்காக முடிவுகளுக்காக, எந்த பயமுறுத்தலும் அவனுக்கு எதிராக இருக்கக்கூடாது. மனிதர்கள் சில விஷயங்களில் தீவிரமாகவும், சில விஷயங்களில் லேசான கண்ணோட்டத்தோடும் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவாக இருக்கவேண்டும், ஒரு பக்கமாக சாராமல் இருக்கவேண்டும், மக்கள் தங்களுக்கு பிடித்தபடி தொழுதுக்கொள்ள அனுமதிக்கவேண்டும். ஒரு மனிதன் தனக்கு பிடித்த நம்பிக்கையை பின்பற்றும்படியான சுதந்திரம் அவனுக்கு கிடைக்கும் நாட்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவன் எடுத்த நம்பிக்கையை மதித்து குடும்பமும், நண்பர்களும், சமுதாயமும், வேலை ஸ்தலங்களும் அவன் எடுத்த முடிவிற்காக அவனை மதிக்கும் நாட்கள் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.


ஆங்கில மூலம்: Tarmizi Testimony



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source: http://www.answering-islam.org/tamil/testimonies/tarmizi.html

 


 
 

Monday, July 27, 2009

இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகள் உண்டா?

 

இயேசுவின் சில கட்டளைகள்



இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்


தொகுத்தவர்: தாவுத் ஜபால்


இஸ்லாமிய நண்பர்கள் இப்படியாக கூறுவார்கள், அதாவது "இயேசு ஒரு நபியாக இருந்தார் மற்றும் அவர் இறைவனின் செய்தியையும் கட்டளைகளையும் கொடுத்தார். இன்ஜிலில் இருந்த இயேசுவின் போதனைகள் கட்டளைக‌ள் அனைத்தின் சாராம்சம், அவருக்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்‍ஆனில் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது, எனவே குர்‍ஆனை நாங்கள் படித்தால் போதும் என்பார்கள். பைபிளில் உள்ள‌ இன்ஜிலில் சொல்லப்பட்ட‌ இயேசுவின் கட்டளைகளை படிக்கும் போது, அவைகளின் மேன்மை "இயேசுவின் கட்டளைகள் உள்ளன" என்றுச் சொல்லும் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை என்பதை அறியலாம்.


இயேசுவை ஒரு நபி என்றுச் சொல்லும் எல்லா இஸ்லாமியர்களும் அவரது வார்த்தைகளை படிக்கவேண்டும். இயேசுவின் வசனங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால், இந்த உலகம் வாழுவதற்கு மிகவும் இனிதான இடமாக மாறும். சில இஸ்லாமியர்கள் இயேசு எப்படி தொழுதுக்கொண்டாரோ அதன் படி தொழுதுக்கொள்ள நாங்கள் கடமைப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இதனை கீழ் கண்ட பகுதிகளில் 6:5-8 மற்றும் 6:9-13ல் காணலாம்.


கீழே தரப்பட்டுள்ள கட்டளைகள் அனைத்தும் மத்தேயு எழுதின சுவிசேஷமாகிய இன்ஜிலிலிருந்து எடுக்கப்பட்டது, அவைகளுக்கு அதிகார மற்றும் வசன எண்களும் தரப்பட்டுள்ளது. சில நேரங்களில் இயேசு தன்னை பின்பற்றும் சில சீடர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகமான பொது ஜனங்களுக்கு கொடுத்த கட்டளைகளும் தரப்பட்டுள்ளது, அவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


  • என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (5:11-12)

  • நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (5:17)

  • இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (5:16)

  • ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (5:23-24)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், …... பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….; எருசலேமின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், …... உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (5-34-37)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. (5:39)

  • உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:42)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (5:44).

  • ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல,நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (5:48)

  • மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.(6:1,3)

  • அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (6:5-8)

  • நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (6:9-13)

  • நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். (6:16-18)

  • பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (6:19-21)

  • ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (6:25)

  • முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். (6:33-34)

  • நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (7:1-2)

  • கேளுங்கள், … தேடுங்கள், … தட்டுங்கள், … உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (7:7:11)

  • ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். (7:12)

  • இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:13-14)

  • கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? … பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை … ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். … நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (7:15-27)

  • அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (8:21)

  • பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;… (9:13)

  • ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.(9:38)

  • வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (11:28)

  • நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (11:29-30)

  • ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.. …. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (13:18-23)

  • வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். (13:24-30)

  • …ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (18:21-22)

  • இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார். (19:14-15)

  • …அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (22:15-21)

  • இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். (24:4-5)

  • யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. (24:6)

  • ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (24:26-27)

  • உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். (24:42-44)

ஆங்கில மூலம்: Some of the Commands of Jesus, the Prophet Authoritatively recorded in the Injil



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/dawud/commands.html

 
 

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்