இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Tuesday, March 4, 2014

Fwd: ரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்?


 

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10 ]

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். நீ திறந்த மனதுடன் என் கடிதங்களை படித்து, திறந்த மனதுடன் பதில் எழுதுகிறபடியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

உன் கடிதத்தில் சில முக்கியமான கீழ்கண்ட கேள்விகளை கேட்டு இருந்தாய்:
1)       தேவன் தம் வார்த்தையை தீர்க்கதரிசிகள் மூலம் இறக்கினார், பைபிளில் தேவ‌னுடைய‌ வார்த்தை எபிரேயம், கிரேக்கம் ம‌ற்றும் சிறிது அராமிக் மொழியிலும் உள்ள‌து. தேவன் இறக்கிய வார்த்தைகளில் உள்ள உண்மை அர்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அம்மொழியில் (எபிரேய, கிரேக்க) படித்தால் தானே புரியும். தமிழில் படித்தால் எப்படி புரியும்?
2)       மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 1:3ம் வசனத்தில், " இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் " என்று உள்ளது, அதாவது வாசிப்பவனும், கேட்பவனும், கீழ்படிகிறவனும் பாக்கியவான். இறைவன் எந்த மொழியில் இறக்கினானோ அதே மொழியில் வாசிப்பதும்,கேட்பதும் பாக்கியமாக பைபிள் கருதுகிறது அல்லவா?
3)       ஆக, பைபிளே இப்படி சொல்லும்போது, குர்‍ஆனை அரபியில் படித்தல் எப்படி செல்லாததாக ஆகும். ஏன் நீங்கள் இஸ்லாமை குற்றப்படுத்துகிறீர்கள்?

உன் கேள்விகளை மேலோட்டமாக படித்தால், நீ சொன்ன விவரங்களில் நியாயம் இருக்கிறது என்று சொல்லத்தோன்றும், ஆனால், அவைகளை சிறிது ஆராய்ந்து பார்த்தால், உன் கேள்விகளில் உள்ள அறியாமை வெளிப்படும். இப்போது அவைகளை சுருக்கமாக விளக்குகிறேன்.

பைபிளின் தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசும் போது, அவர்கள் பேசிய மொழியிலேயே பேசினார். அந்த தீர்க்கதரிசிகளுக்கு விவரம் புரிந்தால் தான் அவர்கள் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அவர்கள் எபிரேய, கிரேக்க மற்றும் அராமிக் மொழியில் அதனை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

மூலமொழியில் படித்தால் தான்  உண்மை அர்த்தம் விளங்கும், மொழியாக்கங்களில் படித்தல் அதன் அர்த்தம் பாதிக்கப்படும் என்பது உன் கேள்வி. உன்னுடைய கேள்வி சரியான கேள்வி தான். மேலும் நாம் ஆய்வு செய்வதற்கு முன்பாக,  ஒரு சில உதாரணங்களை உனக்கு நான் காட்ட விரும்புகிறேன்.

கீழ்கண்ட இரண்டு வசனங்களை நான் மூலத்தில் கொடுத்துள்ளேன், அவைகளை படித்துப் பார்த்து, உனக்கு முழுவதுமாக புரிகின்றதா என்று பார்.
ஆங்கிலத்தில் உள்ள Transliterationஐ நீ படிக்கலாம்.

Transliteration:  Houtōs gar ēgapēsen ho Theos ton kosmon, hōste ton Huion ton monogenē edōken, hina pas ho pisteuōn eis Auton mē apolētai all᾽ echē zōēn aiōnion.
Transliteration: Qāla 'Innamā 'Anā Rasūlu Rabbiki Li'haba Laki Ghulāmāan Zakīyāan

உனக்கு இவ்விரு வசனங்களின் பொருள் மிகவும் ஆழமாக புரிந்ததா? ஏனென்றால், இவைகள் மூல மொழிகளில் உள்ளன. உனக்கு தேவையானால், மூல  மொழி எழுத்துக்களிலேயே தருகிறேன், கீழே உள்ளவற்றை படித்துப்பார்.

Greek:  Οὕτως γὰρ ἠγάπησεν ὁ Θεὸς τὸν κόσμον, ὥστε τὸν Υἱὸν τὸν μονογενῆ ἔδωκεν, ἵνα πᾶς ὁ πιστεύων εἰς Αὐτὸν μὴ ἀπόληται ἀλλ᾽ ἔχῃ ζωὴν αἰώνιον.
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّاِ :Arabic

நீ மூலமொழியில் படித்தாலும் உனக்கு புரியாது, அதனுடைய டிரான்ஸ்லிடெரேஷனில் படித்தாலும் புரியாது.

ஆனால், உன்னுடைய முதல் கேள்வி என்னவாக இருந்தது?  இறைவன் இறக்கிய மூல மொழியில் படித்தால் தானே பொருள் சரியாக புரியும்? என்பதாகும். ஆனால், மேலேயுள்ள இரண்டு வசனங்களை நீ மூல மொழியில் படித்தாய் ஆனால், உனக்கு 1% சதவிகிதமும் புரியவில்லை.

மூல மொழியில் படித்தால் உண்மை பொருள் புரியும் என்பது ஒரு புறமிருக்க, முதலாவது நமக்கு அந்த மொழி தெரிந்து இருக்கவேண்டும் என்பது அடிப்படை தேவையாகும். எனக்கு எபிரேய மொழி தெரியாது, கிரேக்க மொழியும் தெரியாது. நான் சங்கீதம் 1 (அ) 23 மற்றும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எபிரேய மற்றும் கிரேக்க மொழியின் டிரான்ஸ்லிடெரஷனில் படித்தல் அதனால் என்ன பயன் கிடைக்கும்?

எனக்கு, கர்த்தர் சொன்ன வசனத்தின் பொருள் 100% புரியவேண்டும் என்பதற்காக நான் இப்போது உட்கார்ந்துக்கொண்டு, எபிரேயம் மற்றும் கிரேக்க மொழியை கற்கமுடியாது, ஒருவேளை எனக்கு நேரமும், திறமை இருந்து கற்றுக்கொண்டாலும், உலகத்தின் எல்லா மக்களும் மூல மொழிகளை கற்றுக்கொண்டு வேதங்களை படித்தால் தான் அந்த வேதங்களை கொடுத்த இறைவன் அங்கீகரிப்பான் என்பது தவறான கோட்பாடாகும்.

சங்கீதம் 1:1,2 வசனங்கள் எனக்கு தமிழ் மொழியிலேயே 100% புரிந்துவிட்டது, இதை புரிந்துக்கொள்ள நான் ஏன் மூல மொழிக்குபோகவேண்டும், அது வீணான காரியமாகும்:

சங்கீதம் 1:1,2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

மேலும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் உள்ள சாராம்சம் எனக்கு தமிழிலேயே நன்றாக புரிந்துவிடுகிறது, நான் ஏன் கிரேக்க மொழியில் அவைகளை படிக்க முயற்சி எடுக்கவேண்டும்?

மத்தேயு 5:7,8 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

வேதபண்டிதர்கள் அல்லது பைபிள் ஆய்வு செய்பவர்கள் தங்களின் ஆய்விற்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக மூல மொழியை கற்று அவர்கள் அதன்  அடிப்படையில் தங்கள் ஆய்வை செய்யலாம். இப்படிப்பட்டவர்களுக்கு  மூல மொழியை கற்பது உபயோகமாக இருக்குமே ஒழிய, சாதாரண மக்களுக்கு மூல மொழியில் படிப்பது அவசியமற்றவது, இது சாத்தியமும் இல்லாதது. இறைவன் மூல மொழியில் படித்தால் தான் அங்கீகரிப்பேன் என்றுச் சொன்னால், அவன் உண்மையான இறைவனே இல்லை.

இரண்டாவதாக, நீ வெளி 1:3ம் வசனத்தை குறிப்பிட்டு, அதில் இருக்கும் வாசிக்கிறவனும், கேட்கிறவனும் பாக்கியான் என்ற சொற்றொடரை குறிப்பிட்டு உன் புரிந்துக்கொள்ளுதலை வெளிப்படுத்தியிருந்தாய்.

நீ புரிந்துக்கொண்டது போல, கிரேக்க அல்லது எபிரேய மொழியில் படித்தால் தான், கேட்டால் தான் பாக்கியவான் என்று தேவன் கூறவில்லை. ஏனென்றால், அப்படி செய்வது உண்மையாக இருந்திருந்தால், கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் பின்பற்றி இருந்திருப்பார்கள், ஆனால், அப்படி யாரும் செய்யவில்லை, அதாவது எல்லாரும் கிரேக்க மற்றும் எபிரேய மொழியை கற்றுக்கொண்டு வந்திருப்பார்கள், வேதபண்டிதர்கள் தவிர மற்ற யாரும் இபப்டி செய்யவில்லை. மேலும், அதே வசனத்தில் "கைக்கொள்கிறவனும்" என்ற சொற்றொடர் இருப்பதையும் காணவும். ஒருவருக்கு புரியவில்லையானால் எப்படி அவன் அவைகளை கைக்கொள்ளமுடியும்? ஒருவன் கீழ்படியவேண்டும் என்றுச் சொன்னால், அவனுக்கு முதலாவது புரியவேண்டும். ஒருவனுக்கு புரியவேண்டுமென்றால், அவனுக்கு புரியும் மொழியில் அவனுக்கு சொல்லவேண்டும்.

ஆக,  வெளி 1:3ல் சொல்லப்பட்ட விவரத்தின் படி, கிறிஸ்தவர்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் இயந்திரங்களைப் போல, படிக்கவேண்டும், கேட்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையில்லை. கேட்பது நமக்கு புரியும் மொழியில் இருக்கவேண்டும், படிப்பது நமக்கு புரியும் மொழியில் இருக்கவேண்டும், அப்போது தான் படித்தவைகளுக்கு கீழ்படியமுடியும். ஆக, உன் புரிதல் தவறாக உள்ளது தம்பி.

நான் அடிக்கடி கேள்விபடுகின்ற விவரம் என்னவென்றால், குர்‍ஆனை அரபியில் படிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவார் என்பதாகும்.  இது மிகவும் தவறான ஒன்றாகும், ஒரு மனிதனுக்கு தான் படிப்பதே தனக்கு புரியாது என்று இருக்கும் போது இறைவன் எப்படி நன்மைகளை தருவான், இது அறிவுடையோருக்கு ஏற்றது அல்ல. ஒருவேளை அரபி தெரிந்தவர்கள் குர்‍ஆனை அரபியில் படிக்கும் போது ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவான் என்று சொன்னால், ஒரு பேச்சுக்காகவாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அரபியே தெரியாமல் ஒரு இயந்திரம் போல படித்துக்கொண்டே போனால், அல்லாஹ் நன்மைகளை தருவான் என்பது ஏமாற்றுவேலையாகும்.
  
மேலும், அரபியில் குர்‍ஆனை புரியாமல் படிப்பதற்கும், அதே குர்‍ஆனை நமக்கு புரியும் மொழியில் படிப்பதற்கும் அல்லாஹ் எப்படி நன்மைகளை தருவான் என்று கேள்வி கேட்டால், இரண்டிற்கும் நன்மைகள் உண்டு, ஆனால், அரபியில் படிப்பதற்கு (புரியாமல் படித்தாலும்) அதிக நன்மையை அல்லாஹ் கொடுப்பான் என்றுச் சொல்வார்கள். தமிழாக்கத்தில் குர்‍ஆனை படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட விளக்கங்கள் தடைக்கற்களாக மாறிவிடுகின்றன.

தம்பி அதிகமாக எழுதிவிட்டேன், உன்னுடைய அடுத்த கடிதத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.


--
7/30/2012 11:43:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: ரமளான் நாள் 10: தாவீது ராஜாவின் அயலான் முஹம்மது ஆகமுடியுமா?

 
 

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9]

அன்புள்ள தம்பிக்கு

உன்மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

நீ எழுதிய கடிதத்திற்காகவும், கேள்விக்காகவும் மிக்க நன்றி.

உன் கடிதத்தில் நீ கீழ்கண்ட குற்றச்சாட்டை வைத்தாய்:

"தீர்க்கதரிசிகள் பாவம் செய்தார்கள் என்று பைபிள் சித்தரிக்கிறது, நபிகள் பாவம் செய்வார்களா? தாவீது பாவம் செய்தார் என்றுச் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. முஹம்மது பாவம் செய்யாத ஒரு மேன்மையான மனிதராக இருக்கிறார் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பைபிள் நபிகளை குற்றப்படுத்துகிறது. இது தவறல்லவா?"

இன்று நான் 2 சாமுவேல் புத்தகத்தில் 11ம் 12ம் அதிகாரங்களை வாசித்தேன். உடனே உன் கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது. இறைவேதத்தில் உனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்றான தாவீது ராஜாவின் (தாவூத் நபி) சம்பவம் அங்கேயிருந்தது. உன் சிறுவயது முதல் நீ நேசித்த கதாபாத்திரம் இந்த தாவீது. இன்றும் உனக்கு 23ம் சங்கீதமும், தாவீது கோலியாத் நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நீ இப்போது முஹம்மதுவை நேசிக்கிறாய். அது உன்னுடைய சுதந்திரம். ஆனால் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உனக்காக இந்த கடிதத்தில் பகிர்ந்து கொள்கிறேன். உன்னுடைய கேள்விக்கும் இது பதிலாக அமையும். முடிவை உன்னுடைய சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

ஒரு நாள் தாவீது ராஜா, தனது படைகளை யோவாபின் தலைமையில் யுத்தத்துக்கு அனுப்பிவிட்டு அரண்மனையில் இருக்கிறான். மொட்டை மாடியில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு அழகிய பெண் குளித்துக்கொண்டிருப்பதை காண்கிறான். அவள் அழகில் மயங்கிய ராஜா அவளை பற்றி விசாரித்து சொல்லுமாறு தனது சேவகர்களுக்கு கட்டளையிடுகிறான். அவள் உரியாவின் மனைவி என்று ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. தாவீது ராஜா அவளை வரவழைத்து அவளுடன் உடலுறவு கொள்கிறான். மீண்டும் அவளை அவள் வீட்டிற்கே அனுப்பி விடுகிறான். இந்த உரியா தன் இராணுவத்தில் வேலை செய்யும் தேச பக்தியுள்ள ஒரு போர் சேவகனாக இருக்கிறான். மேலும் ஒரு சதி செய்து, உரியா போரில் கொல்லப்பட திட்டம் தீட்டுகிறான். ராஜாவின் திட்டப்படியே உரியா மரணிக்கிறான். ஹித்தா (துக்க) காலம் முடிந்தவுடன் உரியாவின் மனைவியாகிய பெத்சேபாலை அழைத்து ராஜா திருமணம் செய்துகொள்கிறான். இந்த பாவத்திற்கு தேவன் தண்டனை கொடுத்தார்.

தம்பி, இந்த நிகழ்ச்சி போதிக்கும் சில படிப்பினைகளை முதலில் உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  • ஒரு இராஜாவின் கடமை போர்காலத்தில் போருக்கு செல்வதாகும். தாவீது தனது கடமையை தவறினான்.
  • அந்த காலத்தில் ஒரு ராஜா விரும்பினால் எத்தனை திருமணங்களையும் செய்யலாம். ஒரு பெண், இன்னொருவனின் மனைவியென்று அறிந்தும் அவளை அழைத்து உடலுறவு கொண்டான்.
  • ராஜா திட்டமிட்டு அவள் கணவரை கொன்றான்.
தம்பி, நாங்கள் செய்யும் பாவங்களை அறியாமல் செய்தோம் என்று சாக்குபோக்கு சொல்லமுடியாது. இறைவன் தீமைகளால் எம்மை சோதிக்கிறவரல்ல என்று இறைவேதம் சொல்கிறது. இங்கு தாவீது ராஜா எல்லாம் தெரிந்தும் தனது இச்சைக்கு கீழ்படிந்தான் என்பது புலனாகின்றது.

சரி தம்பி, இப்பொழுது நீ உயிரிலும் மேலாய் நேசிக்கும் முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

முஹம்மதுவின் (வளர்ப்பு) மகன் தன் தகப்பனிடம் வந்து "நான் என் மனைவியை விவாகரத்து செய்ய போகிறேன், நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறான், இதனை குர்-ஆன் 33:37ல் காணலாம். அந்த வசனத்தை ஒரு முறை படிப்போமா?
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)
எந்த ஒரு மகனாவது தன் தந்தையிடம் வந்து, நான் என் மனைவியை விவாகரத்து செய்கிறேன், அதன் பிறகு நீங்கள் அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று ஒரு காரணமும் இல்லாமல் சொல்லமுடியுமா? கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்தால், அவளை விவாரகரத்து செய்ய விரும்பினால், இது சாதாரணமான விஷயம் தான், ஆனால், நீங்களே அவளை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று தன் தந்தையிடம் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? இதில் ஏதோ மர்மம் அடங்கியிருக்கிறது.

இஸ்லாமிய சரித்திர ஆசிரியரான அல் தபரியின் கூற்றுப்படி, முஹம்மது ஒரு முறை தனது வளர்ப்பு மகனாகிய ஜையத் வீட்டிற்கு சென்றபோது, அப்போது ஜையத் அங்கு இல்லை, அவனது மனைவி ஜைனப் (மருமகள்) மட்டுமே இருந்தாள். நீங்க என் அப்பா அம்மாவை விட அன்பானவர், எனவே உள்ளே வாருங்கள் என்று மருமகள் அழைக்கிறாள். அவர் உள்ளே செல்லவில்லை, ஆனால், அந்த சமயத்தில் ஜைனப் இருந்த நிலையைக் கண்டு (அறைகுறை ஆடை) அந்த ஜைனப்பின் அழகில் மயங்கியவராக முஹம்மது திரும்பி வந்துவிடுகிறார், அப்படி வரும் போது, "உள்ளங்களை மாற்றுகின்ற இறைவனுக்கு நன்றி (Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!")" என்று சொல்லிக்கொண்டு வந்துவிடுகிறார்.

கணவன் வந்தவுடன் "முஹம்மது வந்து அவரை கேட்டவிஷயத்தையும், போகும் போது, மேற்கண்ட விதத்தில் அவர் முனுமுனுத்துக்கொண்டு சென்றதையும், ஜைனப் அறிவிக்கிறாள்". அப்பொது தன் மனைவியை முஹம்மது விரும்புகிறார் என்பதை அறிந்த முஹம்மதுவின் வளர்ப்பு மகன் ஜையத் (இவன் மகன் அல்ல மகான்), முஹம்மதுவிடம் சென்று, நான் விவாகரத்து செய்கிறேன், நீர் அவளை திருமணம் செய்துக்கொள்ளும் என்று சொல்கிறார். ஆரம்பத்தில் முஹம்மது மறுக்கிறார். ஆனால், அல்லாஹ் வசனத்தை வெளிப்படுத்தி, மனிதர்களுக்கு பயந்து உன் உள்ளத்தில் இருந்த ஆசையை வெளியே சொல்ல தயங்கினாய், இதோ விவாகரத்து முடிந்தவுடன், உனக்கு அவளை நான் மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான் (குர்-ஆன் 33:37). (பார்க்க : http://www.answering-islam.org/Shamoun/zaynab.htm)

தனது மருமகள் விதவையாக தத்தளிக்க கூடாது எனும் எண்ணத்தில் முஹம்மது அவளை திருமணம் செய்தார். இது உலகத்தார் அனைவருக்கும் முன்மாதிரியாக செய்துகாட்டினார்கள் என்று உனது இஸ்லாமிய நண்பர்கள் சொல்வார்கள். ஆனால் இதுவல்ல உண்மை காரணம்.
உன் சிந்திக்கும் திறனை நீ இன்னும் இழக்கவில்லையென்று நினைக்கிறேன். அப்படியானால் சிந்தித்துபார். இறைவேதமோ நாங்களோ தாவீது செய்ததை நியாயப்படுத்தவில்லை. அவன் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்கிறோம். ஆனால் முஹம்மது செய்த இந்த இழிவான செயலை இஸ்லாமியர் எப்படி பரிசுத்தமாக பார்க்கிறார்கள் என்று சிந்தித்து பார். மத்தேயு 5:27,28ம் வசனங்களின் படி, முஹம்மது உள்ளத்திலும் பாவம் செய்துள்ளார், அதனை செயலிலும் செய்து காட்டினார்.

இறைவேதத்தின் கதாநாயகன் இறைவன் மட்டுமே! ஆகவே மற்றவர்களின் நன்மை தீமை இரண்டையும் எமது படிப்பினைக்காக இறைவேதத்தில் இறைவன் உள்ளடக்கியிருக்கிறான். ஆனால் இஸ்லாம் முஹம்மது செய்த எல்லா பாவங்களுக்கும் நியாயம் கற்பிப்பதாகவேயிருக்கிறது. உனக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். முஹம்மதுவின் கையிலே அல்லாஹ் பொம்மையாக இருக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தாவீது ராஜா செய்த பாவத்தை இறைவன் உணர்த்தி, தண்டனையும் கொடுத்து, மனந்திரும்பியவுடன் மீண்டும் இறைவனுடைய இருதயத்துக்கு ஏற்றவனாக மாறுகிறான். இது தான் இறைவன் வகுத்த வழி முறை. பாவம் உணர்த்தப்படும். தண்டனையை அனுபவிக்கவேண்டும். மனந்திரும்பியவுடன் இறைவன் மன்னித்துவிடுவான். மீண்டும் பழைய நிலைக்கு வர முடியும்.

முஹம்மது நபி செய்த பாவத்தை சற்று சிந்தித்து பார் எனதன்பு தம்பி. அவர் தன்னை நியாயப்படுத்துவது மட்டுமல்ல. அல்லாஹ்வும் அவர் செய்தது சரியென்று சான்றிதழ் கொடுக்கிறான். மல்கியா 2:13-16ன் படி கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார், ஆனால்,குர்-ஆன் 33:37ம் படி அல்லாஹ்வே அந்த விவாகரத்தை நிறைவேற்றுகிறார். இதில் இன்னொரு வேதனையான விஷயம் என்னவென்றால், ஒரு பெண் இன்னொருவனின் மனைவியாக இருக்கும் நிலையிலேயே, அவளை பிரித்து மற்றொருவனுக்கு தந்தேன் என்று அல்லாஹ் சொல்வது தான். இதிலிருந்து இந்த அல்லாஹ் எப்படிபட்டவன் என்பது உனக்கு புரிந்திருக்கும். பெண்கள் விஷயத்தில் சிறப்பு சலுகைகள் முஹம்மதுவுக்கு மட்டும் கொடுத்திருப்பதையும் குர்ஆனில் காணலாம். இதை குறித்து நான் மேலும் தெளிவுபடுத்த தேவையில்லையென்று நினைக்கிறேன். முஹம்மதுவின் வாழ்க்கையையும் தாவீதின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்து இருவரில் யார் சிறந்தவர் என்பதை நீயே முடிவு செய்துகொள்.

தான் செய்தது பாவம் என்பதை உணர்ந்து மனந்திரும்பியவர் சிறந்தவரா? அல்லது தான் செய்த பாவத்துக்கு நியாயம் கற்பித்து, அதிலிருந்து மனந்திரும்பாமல் இருந்தவர் சிறந்தவரா?

தன் அடியான் செய்த பாவத்தை உணர்த்தி தண்டனை கொடுத்து அவன் மனந்திருந்தியவுடன் பழையபடி அவனை நேசித்த இறைவன் சிறந்தவரா? தன் அடியான் செய்யும் பாவங்களையெல்லாம் நியாயப்படுத்தி வானத்திலிருந்து "வஹி" அனுப்புவதுடன் சிறப்புச் சலுகைகளும் வழங்கும் அல்லாஹ் சிறந்தவரா? முடிவாக, நபிகள் கூட பாவம் செய்பவர்கள் தான் என்பதை இஸ்லாமியர்களின் இறைவேதத்திலிருந்தே நாம் பார்த்தோம், எனவே, இனி பைபிளை குற்றப்படுத்துவதை இஸ்லாமியர்கள் நிறுத்திக்கொள்ளட்டும்.

இவை உன் சிந்தனைக்கு. முடிவு உன் கையில். மீண்டும் அடுத்த கடிதத்தில் தொடர்வோம்.

இப்படிக்கு
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்

முஹம்மதுவின் ஜைனப்புடன் நடந்த திருமணம் பற்றிய இதர கட்டுரைகள்:

1) Muhammad, Zaid and Zaynab Revisited


--
7/29/2012 10:10:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்