இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Tuesday, March 4, 2014

Fwd: ரமளான் நாள் 7 – அல்லாஹ் தன்னை வணங்க இயந்திரங்களை படைத்துள்ளனா?

 


[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6 ]

 

அன்புள்ள தம்பி,

 

உனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

 

எனக்கு நீண்ட நாட்களாக இஸ்லாமியர்களிடம் ஒரு குறிப்பிட்ட கேள்வியை  கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதை எந்த முஸ்லிமிடம் கேட்பது? இன்று அதற்கு எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, ஏனென்றால், என் தம்பி தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லியுள்ளான்.

 

என் கேள்வி இது தான்:

அல்லாஹ் தன்னை வணங்க படைத்தது இயந்திரங்களையா? அல்லது மனிதர்களையா?

 

தம்பி, நான் ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்று உனக்கு புரிகின்றதா? அதாவது உனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு சில இதர மொழிகள் தெரியும். உனக்கு அரபி மொழி தெரியாது என்று எனக்குத் தெரியும்.

ஆனால்,

·         நீ அல்லாஹ்வை எப்படி தொழுதுக்கொள்கிறாய்? எவைகளைச் சொல்லி தொழுதுக்கொள்கிறாய்?

·         உனக்கு புரியும் மொழிகளாகிய தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அல்லாஹ்வை தொழுதுக்கொள்கிறாயா? அல்லது அரபியில் தொழுதுக்கொள்கிறாயா?

·         நீ நமாஜ் செய்யும் போது எந்த மொழியை முக்கியமாக பயன்படுத்துகிறாய்? எந்த மொழியில் கலிமாக்களை சொல்கிறாய்?

·         நீ அரபியில் தான் நமாஜ் செய்கிறாய் என்பது நிச்சயம். அப்படியானால், நீ என்ன சொல்கிறாயோ அது உனக்கு புரிகின்றதா? அல்லது ஒரு டேப்ரிகார்டர் போல, மனப்பாடம் செய்ததை புரியாமல் ஒப்புவிக்கிறாயா?

·         நீ அரபியில் சில வசனங்களை மனப்பாடம் செய்து, அவைகளை ஒப்புவிக்கிறாய் என்றால், நீ மனிதனா அல்லது இயந்திரமா?

 

இயந்திரங்களில் விவரங்களை சேமித்து வைத்துவிட்டால், தேவைப்படும்போதெல்லாம் அவைகள் ஒலிப்பெருக்கியில் வாசித்துத்தள்ளும். ஒரு இலட்சம் முறை அவைகளை அது வாசித்தாலும், அந்த இயந்திரத்திற்கு எந்த ஒரு உணர்வும், சொரணையும் இருக்காது.  தான் வாசித்துத் தள்ளிய வார்த்தைகளில் உள்ள உண்மையும், கருத்துக்களும் அந்த இயந்திரத்திற்கு தெரியாது.

 

தம்பி, இந்த இயந்திரத்தைப் போல நீயும் அரபியில் தான் உன் இறைவனை தொழுதுக்கொள்கிறாயா? ஆம் என்று தான் நீ பதில் அளிக்கவேண்டும்.

 

உனக்கு புரியாத மொழியில் நீ எப்படி மற்றவர்களிடம் பேசுவாய்? உனக்கு புரியாதவற்றை ஒப்புவிப்பதினால், உன் உள்ளத்தில் எந்த ஒரு மாற்றமோ அல்லது பேசப்பட்ட வார்த்தைகளில் இருக்கும் பொருளோ புரியப்போவதில்லை, இதனால் என்ன பயன்? இப்படி செய்வதினால் இயந்திரத்திற்கும், உனக்கும் இடையே எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

 

காது கேளாதவர்கள் செய்திகளை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக செய்திகள் வாசிக்கும் போது, "காது கேளாதவர்கள் புரிந்துக்கொள்ள சைகை மூலமாக" செய்திகளை தெரிவிக்கிறார்கள்.  உலக செய்திகளுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், இறைவனை தொழுதுக்கொள்வதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்திருக்கவேண்டும்? உலக விஷயங்களுக்கே இவ்வளவு முக்கியத்துவம் என்றால், ஆன்மீக விஷயங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்?

 

தம்பி, உனக்கு "பிரைலி" என்று ஒன்று இருப்பது தெரியுமா? அதாவது கண்கள் தெரியாதவர்கள் படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையாகும்.  எனக்கு கண்கள் தெரியாது எனவே நான் படிக்கவில்லை, உலகை புரிந்துக்கொள்ள வில்லை என்று யாரும் இந்த காலத்தில் சொல்லமாட்டார்கள். ஆனால், கண்கள் இருந்தும், காதுகள் இருந்தும், இன்னும் நீ உன் இறைவனை புரியாமலேயே தொழுதுக்கொள்கிறாய். என்ன ஆச்சரியம் பார்த்தாயா? குருடர்கள் பிரைலி முறையை கற்றுக்கொண்டு படித்து தெரிந்துக்கொள்கிறார்கள், காது கேளாதவர்கள் கூட சைகை மொழியை கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் நீ என்ன செய்யப்போகிறாய்?

 

ஒரு உண்மையான இறைவன், தன்னை வணங்கும் மனிதர்கள் வெறும்  மனப்பாடம் செய்த வசனங்களை தலை கால் புரியாமல் மடமடவென்று ஒப்புவிப்பதை விரும்புவானா? அல்லது தன்னை வணங்கும் மனிதன் தன் இருதய ஆழத்திலிருந்து நான்கு வார்த்தைகளைச் சொல்லி, இறைவனை புகழ்ந்து, அவன் செய்த நன்மைகளை நினைத்து, நன்றி சொல்லுவதை விரும்புவானா?  இறைவனை தொழுதுக்கொள்கின்றவர்கள் உண்மையோடும்,  தாம் பேசும் வார்த்தைகளின் பொருளை புரிந்துக்கொண்டும் தொழவேண்டும் என்று பரிசுத்த பைபிளில் இயேசு கூறியுள்ளார். 

 

மனிதனுக்குத் தான் இயந்திரங்கள் தேவை, இறைவனுக்கு மனிதன் தான் தேவை இயந்திரங்கள் அல்ல.

 

ஒரு மனிதன் 50 ஆண்டுகள் இஸ்லாமியனாக வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் 5 வேளை தொழுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இந்த 50 ஆண்டுகளில் அவன் (50*365*5)  91250 முறை தொழுகை செய்வான், ஆனால், தனக்கு புரியாத, மொழியில் இத்தனை முறை தொழுதுக்கொண்டும், எந்த ஒரு பயனும் அவனுக்கு கிட்டுவதில்லை. பெயரளவிற்கு ஒரே பயன் மட்டும் கிட்டும் என்றுச் சொல்லிக்கொள்ளலாம், அது என்ன? "நான் இஸ்லாமிய கடைமையை நிறைவேற்றினேன் (என்ன செய்கிறோம் என்று புரிந்துக்கொள்ளாமலேயே). அதாவது, படிப்பு படிக்காமலேயே பெயருக்கு பின்னால், M.A. MSc. என்று சிலர் எழுதிக்கொள்கிறார்களே, அது போல நானும் இறைவனை தொழுதுக்கொண்டேன் என்ற வரட்டு திருப்தி மட்டும் கிடைக்கும்.  இதனை இறைவன் அங்கீகரிப்பான் என்று நீ நினைக்கிறாயா?

 

"அல்லாஹ் தான் இப்படி சொல்லியுள்ளான்" என்று நீ சொல்லலாம், இப்போது கேள்வி அதுதான், இயந்திரங்களைப் போல  தன்னை வணங்க உண்மையான இறைவன் விரும்புவானா? "ஆம்" என்று நீ சொன்னால் அவன் உண்மையான இறைவன் இல்லை என்பது தான் உண்மை.

 

நீ இவைகளைப் பற்றி சிறிது சிந்துத்துப்பார்க்கவேண்டுமென்று உன்னை உற்சாகப்படுத்துகிறேன்.

 

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

 

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.




Fwd: ரமளான் நாள் 6 – குர்-ஆனின் சிறந்த இலக்கிய நடையழகு?

 

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5 ]

அன்புள்ள தம்பிக்கு,

சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாகட்டும்.

நீ என் கடிதங்களை படித்து, எனக்கு பதில் எழுதுகிறபடியால் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தம்பி, உன் பதில் கடிதத்தில், நான் எழுதும் விவரங்கள் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்வதை விட்டுவிட்டு, அதைக் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு, நீ ஒரு தலைப்பிலிருந்து இன்னொரு தலைப்பிற்கு தாவுகிறாய். குர்-ஆனின் இலக்கிய நடையும், அழகும் உலகில் வேறு எந்த ஒரு நூலிலும், அல்லது வேதத்திலும் இல்லை என்று என்னிடம் சவால் விடுகிறாய். இந்த என்னுடைய கடிதத்தில் நீ குறிப்பிட்டு இருந்த விவரம் பற்றி ஆராய்வோம்.

பல நாட்களுக்கு முன்பு நான் ஒரு சிறிய கட்டுரையை படித்தேன், அது உன்னுடைய கேள்விக்கு பதில் அளிக்கும் என்று நம்புகிறேன். ஒரு மனிதன் கீழ்கண்ட விதத்தில் ஒரு வாதத்தை வைப்பதாக நினைத்துக்கொள்வோம்.
 
1. உலகத்திலேயே என் மனைவி தாம் மிகவும் அழகான பெண்
2. உங்களால் முடிந்தால், இவளைப் போல இன்னொரு பெண்ணை கொண்டுவாருங்கள்!
3. உங்களால் முடியவில்லையானால், இவள் சொல்லும் அனைத்தும் உண்மையானது என்று நீங்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தம்பி, மேற்கண்ட வாதம் சரியான வாதம் இல்லை என்று எண்ணுகின்றாய் அல்லவா? ஆம், நீ நினைப்பது சரியானது தான், அதாவது மேற்கண்ட வாதம் சரியான வாதமன்று. இதைப் போலத்தான் இஸ்லாமியர்கள் கூட "குர்-ஆன் பற்றிய வாதத்தை முன்வைக்கிறார்கள்".  அதாவது, "உங்களால் முடிந்தால் குர்-ஆனை போல உள்ள ஒரு ஸூராவையோ வசனத்தையோ கொண்டுவாருங்கள், உங்களால் முடியவில்லையானால், குர்-ஆனை இறைவன் தான் இறக்கினான் என்று நீங்கள் நம்பவேண்டும், அது சொல்லும் அனைத்தையும் நீங்கள் நம்பவேண்டும்", இது தான் இஸ்லாமியர்களின் வாதம்.

ஒரு பெண்ணைப் பற்றி நாம் கவனித்தோமானால், அவளது அழகிற்கும், அறிவிற்கும் ஒற்றுமை எதுவுமே இல்லை. அதாவது அவள் அழகாக இருக்கிறாள் எனவே, நிச்சயமாக அவள் அறிவுள்ளவளாக ஞானியாக இருப்பாள் என்று எந்த ஒரு மனிதனும் முடிவு செய்யமுடியாது.  இதே போலத்தான், குர்-ஆனின் இலக்கிய நடைக்கும், அதன் தெய்வீகத்திற்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை. உலகத்திலே இலக்கிய நடை அழகாக இருக்கும் நூல் நிச்சயமாக தெய்வீகமானது என்று உன்னால் கூறமுடியுமா?  ஒருவேளை இலக்கிய நடை நன்றாக இருக்கும் புத்தகமெல்லாம் தெய்வீகமானது என்று ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டாலும், அந்த இலக்கிய நடை உலகிலேயே சிறந்தது என்று யார் முடிவு செய்வார்கள்? எந்த தரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த முடிவை எடுப்பது?

ஒரு பெண்ணுடைய அழகும், ஒரு நூலுக்கு இருக்கும் இலக்கிய அழகும் ஒன்று தான். அதாவது பல வகையான மக்கள் பலவகையான விருப்பங்களை, கொண்டு இருப்பார்கள். உலகில் யாராவது வந்து:

• "என் மனைவி தான் உலகத்திலேயே அழகானவள் என்று நான் முடிவு செய்துவிட்டேன், எனவே உலகில் வேறு எந்த பெண்ணின் அழகும் என் மனைவியின் அழகிற்கு குறைவானதாகத் தான் இருக்கும்" என்று கூறினால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா?

• "என் வேதத்தில் உள்ள இலக்கிய அழகு தான் உலகில் சிறந்த இலக்கிய அழகு என்று நான் முடிவு செய்துவிட்டேன், எனவே உலகில் வேறு எந்த புத்தகத்தின் இலக்கிய அழகும் இதைவிட குறைவானதாகத் தான் இருக்கும்" என்று கூறினால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக இருக்குமா?

சிலர் குர்-ஆனின் இலக்கிய நடை சிறந்தது என்பார்கள், வேறு சிலர் அது தவறு என்பார்கள். ஒரு கணவன் தன் மனைவி தான் 'உலக அழகி' என்றுச் சொல்கிறான், ஒரு முஸ்லிம் 'குர்-ஆனின் இலக்கிய அழகு உலகிலேயே சிறந்தது' என்றுச் சொல்கிறான். இவ்விதமாக இவர்கள் சொல்வதற்கு காரணமென்ன? ஒரு மனிதன் தன் மனைவியை உண்மையாக நேசித்தால், தன் மனைவி தான் உலகில் சிறந்தவள் என்று நம்பக்கூடும், ஆனால், மற்ற மனிதன் அந்தப் பெண்ணை அப்படி உலக அழகி என்று நினைக்கமாட்டார், இது உண்மையே.  ஒருவருக்கு உலக அழகியாக தெரியும் பெண், எல்லாருக்கும் உலக அழகியாக தெரியும் என்று நாம் நிச்சயமாகச் சொல்லமுடியாது. காரணம் என்னவென்றால், மற்றவர்கள் அந்த பெண்ணோடு கொண்டு இருக்கும் உறவுமுறை கணவன் கொண்டு இருக்கும் உறவுமுறை போன்றதல்ல. தம் மனைவி மீது கொண்டுள்ள (குருட்டுத்தனமான)
அன்பினிமித்தம் கூட, அவளே உலகில் சிறந்த அழகி என்பான்,
அல்லது மனைவிக்கு பயப்படும் கணவனாக இருந்தால், மற்றவர்கள் முன்பு அவள் அவ்வளவு அழகி இல்லை என்று சொல்லமாட்டான்.

இதே போலத்தான், முஸ்லிம்கள் குர்-ஆனை (குருட்டுத்தனமாக) நேசிக்கிறார்கள், அதைப் பற்றி நல்லதையே பேசுவார்கள். ஒருவேளை குர்-ஆனில் காணப்படும் தீய விஷயங்கள் பற்றி பேச அவர்கள் பயப்படுகிறவர்களாக இருக்கலாம். குர்-ஆனைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை வெளியே சொன்னால் என்ன தண்டனை கிடைக்கும் என்று இஸ்லாமியர்களுக்கு தெரியும்.

எனவே, "உலகத்திலேயே என் மனைவி தாம் மிகவும் அழகான பெண்" என்ற சவாலை யாராளும் சந்திக்கமுடியாது. இந்த மனிதன் தன்னையே "நீதிபதி" என்று கருதிக்கொண்டு தீர்ப்பை கொடுத்துவிட்டான், எனவே, இந்த விஷயத்தில் (அம்மனிதனின் மனைவி விஷயத்தில்) அவனை மிஞ்சி யாரும் தீர்ப்பு அளிக்கமுடியாது. ஒருவேளை இந்த மனிதனிடம் குறுக்குக் கேள்வி கேட்டால், நான் என் மனைவியின் உள்ளான அழகைச் சொன்னேன், இதனை அறிய உங்களால் முடியாது. (இதன் அர்த்தம் என்ன? ஒரு மனிதன் இந்த பெண்ணின் கணவனாக மாறினால் தவிர அந்த உள்ளான அழகு அவனுக்குத் தெரிய வாய்ப்புஇல்லை).

இதே வகையில் இஸ்லாமியர்களிடம், தர்க்க ரீதியான கேள்விகள் குர்-ஆன் பற்றி கேட்கும் போது, அரபியில் படித்தால் தான் குர்ஆனின் அழகு உங்களுக்கு தெரியும் என்பார்கள். சரி, எனக்கு அரபி நன்றாகத் தெரியும், குர்-ஆனை அரபியில் முழுவதுமாக படித்துவிட்டேன். ஆனால், அப்படியொன்றும் குர்-ஆனின் இலக்கிய அழகு சிறந்த அழகாக தெரியவில்லையே என்று அரபி அறிஞர்கள் கூறினால், அதற்கும் முஸ்லிம்களிடம் பதில் இருக்கும், அதாவது நீங்கள் முஸ்லிமாக மாறி அரபியில் படித்தால் தான் உள்ளான அழகு தெரியும், முஸ்லிமல்லாதவர்களுக்கு அதன் அழகு தெரியாது என்றுச் சொல்வார்கள்.

தம்பி, அந்த மனிதனுக்கும், இந்த முஸ்லிம்களுக்கும் இடையே ஏதாவது வித்தியாசம் இருப்பதாக உனக்குத் தெரிகின்றதா?

ஆக, உன்னுடைய சவால் அல்லது கேள்வி பிரயோஜனமற்ற ஒரு சவாலாக உள்ளது. உன் கேள்வி தர்க்க ரீதியாக எவ்வளவு பலவீனமானது என்று உனக்கு இப்போது புரிந்து இருக்கும்.

கடைசியாக முக்கியமான கேள்வியை கேட்கிறேன்:  நீ இஸ்லாமியனாக மாறி ஒரு சில மாதங்களே ஆகியுள்ளது, இன்னும் ஒரு முறை கூட குர்-ஆனை அரபியில் நீ முழுவதுமாக படித்து இருந்திருக்கமாட்டாய். ஒருவேளை அரபியில் படித்து இருந்தாலும், பொருள் தெரியாமல் ஒரு இயந்திரம் போல மூளைக்கு எட்டாமல் படித்து இருந்திருப்பாய். இப்படி இருக்கும் போது, எந்த தைரியத்தில் "குர்-ஆனே உலகில் இலக்கிய நடையில் சிறந்தது என்று சவால் விடுகிறாய்?" அரபி மொழியே தெரியாத உனக்கு அரபி மொழி பற்றிய சவால் விடுவதற்கு உரிமை எங்கே இருந்து வந்தது? ஒரு மொழியை தெரிந்துக்கொள்ளாமல், அந்த மொழியில் இலக்கிய நடைப்பற்றி சவால் விடுவது அறிவுடமையாக உனக்கு தென்படுகின்றதா?

நான் உன் அண்ணன் என்பதால் நான் சொல்வதை அங்கீகரிக்கவேண்டும் என்பதில்லை, நீயே சுயமாக சிந்தித்துப்பார், ஆராய்ந்து பார் உனக்கே உண்மை புரியும்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் அண்ணன்
தமிழ் கிறிஸ்தவன்.



--
7/25/2012 10:13:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்