இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Tuesday, July 23, 2013

Fwd: நச்சென்று நாலு கேள்விகள் - 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?


 நச்சென்று நாலு கேள்விகள் - 1: இஸ்லாமை அதிகமாக அறிந்துக்கொண்டும் ஏன் அதனை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?

[உமரின் சகோதரர் சௌதி அரேபியாவில் வேலை செய்கிறார், அவர் கடந்த வருடம் இஸ்லாமை தழுவினார். கடந்த வருடம் ரமளான் மாதத்தில் உமர் தன் சகோதரனோடு புரிந்த 30 கடித உரையாடல்களை இங்கு படிக்கலாம். உமரின் சகோதரன் சௌதி அரேபியாவிலிருந்து ஒரு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தாய் நாட்டிற்கு திரும்பினார். உமரின் தம்பி, எப்படியாவது தன் குடும்பம் இஸ்லாமை தழுவவேண்டும், இந்த ஒரு மாத காலம், இஸ்லாம் பற்றி தன் குடும்பத்திற்கு அறிவிக்க தனக்கு அல்லாஹ் கொடுத்த ஒரு அருமையான வாய்ப்பு என்று எண்ணி மகிழ்கிறார்.இதே போல, உமரும் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார். உமரின் தம்பி ஊர் திரும்பி, இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. குடும்பத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உமரும் அவரது தம்பியும் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார்கள், இதோ அந்த வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிடைத்துள்ளது. உமரும் அவரது தம்பியும் உரையாடும் அனேக உரையாடல்களை கேள்வி பதில் தொடர்களாக காண்போம். உமரின் தம்பியின் பெயர் அல்துல்லாஹ் என்று மாற்றப்பட்டுள்ளது,]

அப்துல்லாஹ்: அண்ணே, கடந்த இரண்டு நாளா உங்களோடு பேசலாம் என்று நினைத்து காத்திருக்கிறேன்.இன்று நீங்க கொஞ்சம் ஃபிரீயா இருக்கீங்க என்று நினைக்கிறேன்.

உமர்: தம்பி,நீ சொல்லிட்டே நான் சொல்லலே அது தான் வித்தியாசம். சரி, நாம் பேசலாம்.

அப்துல்லாஹ்: அண்ணே நாம் பேசப்போவது கொஞ்சம் அதிகபடியாக இருக்கலாம், இருந்தாலும், நீங்க கோபித்துக் கொள்ளக் கூடாது.

உமர்: இல்லை, நான் கோபம் கொள்ளமாட்டேன். நாம் இருவரும் அண்ணன் தம்பி, நம்மிடையே என்ன விரிசல் உண்டாகப்போகிறது சொல்? நானும் ஏதாவது தர்மசங்கடமான கேள்வி கேட்டுவிட்டால், நீயும் சாந்தமாக இருக்கவேண்டும்,என் மீது கோபம் கொள்ளக்கூடாது.

அப்துல்லாஹ்: அண்ணே, முதலாவது நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 'உங்களுக்கு சத்தியம் எது என்று தெரிந்திருந்தும், இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என தெரிந்திருந்தும், ஏதோ ஒரு காரணத்திற்காக, நீங்கள் இன்னும் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

உமர்: இந்த சந்தேகம் உனக்கு எப்படி வந்தது? ஏன் இப்படி கேட்கிறாய்?

அப்துல்லாஹ்: நீங்க, அனேக இஸ்லாமிய நூல்களை படித்து இருக்கிறீங்க, குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படித்து இருக்கீங்கள். கடந்த வருடம் மெயில் மூலமாக நாம் இருவரும் பேசிய உரையாடல்கள் மூலமாக நான் இதனை அறிந்துக்கொண்டேன். எனவே,வேண்டுமென்றே நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன?

உமர்: தம்பி,வெறும் இஸ்லாமிய நூல்களை படித்துவிட்டால், ஒருவன் நிச்சயமாக இஸ்லாமியனாக மாறிவிடுகிறான் என்பது ஒரு பலவீனமான நம்பிக்கையாகும். அனேகர் இஸ்லாமை அதிகமாக அறிந்ததினாலேயே இஸ்லாமை விட்டு வெளியேறி இருக்கிறார்கள், அனேகர் இஸ்லாமை முழுவதுமாக புரிந்துக்கொண்டதினால் நாத்தீகர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் அனேகர் இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொண்டும், உயிருக்கு பயந்து, கேள்வி கேட்காமல், இஸ்லாமை விட்டு வெளியேறாமல் ஒரு போலியான வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, ஒருவன் குர்-ஆனையும், ஹதீஸ்களையும், இதர இஸ்லாமிய நூல்களை படித்து, புரிந்துக்கொண்டால், அவன் இஸ்லாமுக்கு மாறிவிடமுடியாது.

அப்துல்லாஹ்: நீங்க சொல்வதை ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், உங்களை பொறுத்தமட்டில், நீங்கள் ஏதோ ஒரு உள்காரணத்திற்காக அல்லது உள் நோக்கத்திற்காக உண்மையை ஏற்க மறுப்பதாக நான் உணருகிறேன்.

உமர்: அப்படியா? அது என்ன உள்காரணம் / உள்நோக்கம்? எவைகளை அடிப்படையாக வைத்து இப்படி சொல்லுகிறாய்?

அப்துல்லாஹ்: நான் உள்நோக்கம் என்றுச் சொல்வது, இதைத் தான். அதாவது இப்போது உங்களுக்கு சர்ச்சில் நல்ல பெயர் இருக்கிறது, மதிப்பு மரியாதை இருக்கிறது. நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இந்த பெயர் புகழ் எல்லாம் அழிந்துவிடுமே என்று நினைத்து, நீங்கள் இஸ்லாமை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், நான் இப்போது சொல்வதை கேட்டு நீங்கள் கோபம் கொள்ளக்கூடாது,அதாவது சர்ச்சில் ஒரு சில ஊழியங்கள் செய்யும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதோ என்னவோ, இந்த பணத்தையும் விட்டுவிட மனமில்லாதபடியினால், நீங்கள் அதிகமாக இஸ்லாமை அறிந்திருந்தாலும், அதனை ஏற்க மறுப்பதாக நான் நினைக்கிறேன். என்னடா இவன், நச்சென்று கேள்விகளை கேட்கிறானே என்று நீங்கள் கோபம் கொள்ளவேண்டாம்.

உமர்: ஓ, இது தான் உன் சந்தேகமா? பணமும், பெயர் புகழும் இஸ்லாமை ஏற்க எனக்கு தடைக்கற்களாக இருக்கிறது என்று நீ நினைக்கிறாய். முதலாவதாக, நீ நினைப்பது போல, நான் செய்யும் ஒரு சில சின்ன ஊழியத்திற்காக யாரிடமிருந்தும் பணத்தை பெறவில்லை. நீ இங்கு இருக்கும் போது நாம் இருவரும் சேர்ந்து தான் கடந்த பல ஆண்டுகளாக சபைக்கு உதவியாக இருந்திருக்கிறோம். அந்த காலகட்டத்தில் நாம் ஏதாவது பண உதவியை சபையிடமிருந்து பெற்றோமா? நீ பதில் சொல்லு?

அப்துல்லாஹ்: இல்லை, நாம் பண உதவி எதையும் பெறவில்லை, மட்டுமல்ல, நாம் பணத்தை எதிர்ப்பார்த்து ஊழியமும் செய்யவில்லை.

உமர்: விஷயம் இப்படி இருக்க, இப்போது மட்டும் ஏன் உனக்கு இந்த விதமான பணம் சம்மந்தப்பட்ட சந்தேகம் வந்துள்ளது? உன்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் கேட்ட கேள்விகளை, உன் உள்ளத்தில் போட்ட சந்தேகங்களை, அப்படியே என்னிடம் கேட்கிறாயா என்ன? உன் அண்ணனுடைய குணத்தை நீ அறியமாட்டாயா? மேலும், உனக்கு ஏற்கனவே தெரியும், நம் குடும்பத்தில் நாம் சம்பாதிக்கும் செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அப்படியே சபைக்கு தருகிறோம், மேலும் இந்த பண விஷயத்தில் நம் அப்பா எவ்வளவு கண்டிப்பாக உன்னையும், என்னையும் வளர்த்துள்ளார் என்பதை அறியமாட்டாயா?

அப்துல்லாஹ்: நான் கேட்டதற்கு காரணம், அனேகர் இப்படி செய்வதினால் தான்.

உமர்: ஒன்றும் பிரச்சனை இல்லை தம்பி, குறைந்தபட்சம் உன் சந்தேகத்தை தயங்காமல் என்னிடம் கேட்டாயே இதுவே எனக்கு அதிக மகிழ்ச்சி. மேலும் பெயர் புகழ் என்றெல்லாம் பேசினாய். தம்பி, பெயரும் புகழும் நித்திய ஜீவனை விட பெரியதா என்ன? நிச்சயமாக இல்லை. நமக்கு நித்திய ஜீவன் தான் முக்கியம், எது சத்தியமோ அதனை நாம் பின்பற்றவேண்டும். நாம் இந்த உலகில் வாழும் போது எடுக்கும் முடிவுகள், நம் நித்தியத்தை பாதிக்கும் என்பதால் தான் நீயும் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய், நானும் பேசிக்கொண்டு இருக்கிறேன். எனவே, பெயரும் புகழும் இன்று இருக்கும், நாளைக்கு சென்றுவிடும், நாம் நம்முடைய நித்திய ஜீவனை இழக்கும் எவைகளையும் விட்டுவிடவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில், நமக்கு நித்திய ஜீவனை இயேசு தருகிறார், முஹம்மது அல்ல என்பதாகும்.

அப்துல்லாஹ்: நீங்கள் இஸ்லாமை ஏற்று அல்லாஹ்வோடு சொர்க்கத்திற்கு வரவேண்டும் என்பது தான் என் ஆவள், அதற்காகத் தான் நானும் உங்களோடு பேசிக்கொண்டு இருக்கிறேன்.

உமர்: தம்பி உன் கேள்வி, எதனால் வெளியானது என்பதை என்னால் உணரமுடிகிறது. இதுவரை நீ படித்த இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உனக்கு இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்-ஆன் மற்றும் அல்லாஹ் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதனால், இந்த விஷயங்களை அறிந்த என் அண்ணன் மட்டும் ஏன் இவ்வளவு நல்ல மார்க்கத்தை ஏற்க மறுக்கிறார் என்று நீ ஆச்சரியப்படுகிறாய். அதனால் தான் இந்த கேள்விகளை நீ கேட்கிறாய்.

அப்துல்லாஹ்: அண்ணன் என்றால் இப்படித்தான் இருக்கனும், நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லிட்டீங்களே!

உமர்: டேய், நான் உன் அண்ணனாக்கும். சரி, விஷயத்திற்கு வருகிறேன், நல்லா கவனி. நீ இஸ்லாம் பற்றிய ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்துள்ளாய். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல இஸ்லாமுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தை மட்டும் அறிந்துக்கொண்டு, உலகம் ஏன் இப்படி இஸ்லாமை கறைச்சு குடிக்கிறது, அதனை ஏற்க மறுக்கிறது என்று வேதனை அடைந்தால் எந்த பயனும் இல்லை. இரண்டு பக்கங்களையும் நீ அறியவேண்டும்.

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. நீங்க சொல்வது போல நான் இஸ்லாமில் அறைகுறை அல்ல! எனக்கு இஸ்லாம் முழுவதுமாக தெரியும்!

உமர்: அடப்போடா பைத்தியக்காரா! 50 ஆண்டுகளாக இஸ்லாமியர்களாக இருந்தவர்களுக்கே இன்னும் இஸ்லாம் பற்றி முழுவதுமாக தெரியாது. 20 ஆண்டுகளாக மௌலவிகளாக, இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய அறிஞர்களுக்கே இன்னும் எந்த ஹதீஸ்கள் உண்மை எந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டது என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை. நேத்து பெய்ந்த மழையில் முளைத்த காளான் நீ, ஓரிரு ஆண்டுகள் சௌதி அரேபியாவில் வாழ்ந்துவிட்டால் நீ இஸ்லாமை முழுவதுமாக அறிந்துவிடமுடியுமா? 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் ஒரு சரியான முடிவிற்கு வராமல் இஸ்லாமிய அறிஞர்கள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு டஜன் இஸ்லாமிய புத்தகங்களை படித்த உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா?

அப்துல்லாஹ்: அண்ணே, அத விடுங்க! என் கேள்விக்கு என்ன பதில்?

உமர்: சரி, இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். மறுபடியும் நல்லா கவனி. நான் மூன்று விஷயங்களை உன் முன் வைக்கிறேன்:

1) நபர்கள் – இயேசுக் கிறிஸ்து மற்றும் முஹம்மது

2) கோட்பாடுகள் – பைபிள் மற்றும் குர்-ஆன்

3) மூலங்கள்: யெகோவா தேவன் மற்றும் அல்லாஹ்

தம்பி, நான் முதலாவது முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்தேன், ஹதீஸ்கள் மற்றும் குர்-ஆனில் காணப்படும் முஹம்மதுவின் வாழ்க்கை குறிப்புக்களையும் ஆராய்ந்தேன். ஆனால், இயேசுக் கிறிஸ்துவின் சொல்லும் செயலும் என்னை கவர்ந்ததை போல, முஹம்மதுவின் சுன்னா (முஹம்மதுவின் சொல்லும் செயலும்) என்னை கவரவில்லை. உண்மையைச் சொல்கிறேன், குறைந்த பட்சம் முஹம்மது ஒரு நல்ல ஆன்மீகதலைவர் என்ற நிலையிலும் அவரை நான் ஏற்கமுடியாது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு ஒரு எதிர்மறையான தாக்கத்தை என்னில் உண்டாக்கியுள்ளது. என்னில் மட்டுமல்ல முஹம்மதுவின் உண்மை வாழ்க்கையை படிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இந்த எதிர்மறை தாக்கம் தான் உண்டாக்கும். முஹம்மதுவின் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் படிக்கும் உன்னைப்போல இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இப்படி எதிர்மறை தாக்கம் வர வாய்ப்பு இல்லை.

இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்திருந்தும் ஏன் இஸ்லாமை மக்கள் ஏற்பதில்லை என்று கேள்வி கேட்கிறாயே, இதற்கு இது முதலாவது காரணமாகும்.

அப்துல்லாஹ்: அப்படியானால், முஹம்மது எந்த ஒரு நற்செயலையும் செய்யவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

உமர்: அவர் முழுவதுமாக ஒரு தீய பிம்பம் என்று நான் சொல்லவரவில்லை, மக்களை நல்வழிப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆன்மீக தலைவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் அவரில் காணப்படவில்லை என்றே சொல்கிறேன். இதைப்பற்றி வேண்டுமானால், நாம் அடுத்த முறை எப்போதாவது பேசலாம், இப்போது உன் கேள்விக்கான இரண்டாவது பாயிண்டை நான் சொல்கிறேன்.

இரண்டாவதாக,பைபிள் என்னில் உருவாக்கிய ஒரு நல்ல மாற்றத்தைப் போல, குர்-ஆன் என்னில் மாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதை நான் அறிந்தேன். அதாவது இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நீதி, நியாயத்தீர்ப்பு போன்ற பைபிளின் கோட்பாடுகள் எனக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டாக்குகிறது. ஆனால்,குர்-ஆனின் கோட்பாடுகள் என்னில் அவ்வளவாக மாறுதல்களை உண்டாக்கவில்லை. என்னில் மட்டுமல்ல எந்த மனிதனின் வாழ்விலும், குர்-ஆன் ஒரு நம்பிக்கையை உண்டாக்க முடியாது என்பது என் கருத்தாகும்.

உன்னிடம் ஒரு கேள்வி: நீ அல்லாஹ்வையும் குர்-ஆனையும் நம்புகிறாயா?

அப்துல்லாஹ்: ஆம், நிச்சயமாக அல்லாஹ்வை நம்புகிறேன், குர்-ஆனையும் நம்புகிறேன்.

உமர்: இன்று நீ மரித்தால், உனக்கு அல்லாஹ் சொர்க்கம் தருவாரா? இதன் நிச்சயம் உனக்கு உண்டா?

அப்துல்லாஹ்: அல்லாஹ் சொர்க்கம் தருவார் என்று நிச்சயமாக நான் சொல்லமுடியாது, அதை நான் இப்போது முடிவும் செய்யக்கூடாது. ஆனால், அவரிடமிருந்து நல்லதை எதிர்ப்பார்க்கலாம்.

உமர்: நிச்சயம் இல்லாமல் 'அல்லாஹ் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம், ஆனால் நான் மட்டும் மார்க்கத்தை முழுவதுமாக கடைபிடிக்க முயற்சி எடுப்பேன்" என்றுச் சொல்லி நீ இவ்வுலகில் வாழவேண்டும். ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு உன்னைப்போல சந்தேகம் இல்லை, இன்று மரித்தாலும் அவன் கிறிஸ்துவுடன் வாழும் அந்த நித்திய ஜீவன் அவனுக்கு உண்டு என்ற முழு நிச்சயம் இவ்வுலகில் வாழும் போதே அவனுக்கு பைபிள் கொடுத்துவிடுகிறது. எனவே தான் நான் சொல்கிறேன், குர்-ஆனை முழுவதுமாக அறியும் எந்த ஒரு மனிதனுக்கும், நித்திய ஜீவனின் ஒரு நிச்சயம் இல்லை, ஆதனால் தான், நான் குர்-ஆன் ஒரு இறைவேதம் என ஏற்க மறுக்கிறேன்.

மூன்றாவதாக, யெகோவா தேவன் என்னோடு ஒரு தந்தையைப் போல நல்லுறவு கொண்டுள்ளார். ஆனால், அல்லாஹ்வோ,என்னோடு ஒரு அடிமை எஜமானன் என்ற நிலையில் இருக்க அழைக்கிறார். யாராவது அப்பாவை விட்டுவிட்டு,ஒரு மகா ராஜாவிற்கு மகனாக மகளாக இருப்பதை விட்டுவிட்டு, ஒரு அடிமையைப்போல வாழ தன்னை ஒரு எஜமானனுக்கு விற்றுவிடுவானா? உன் அண்ணன் அவ்வளவு பெரிய அடிமுட்டாள் என்று நீ நினைத்தாயா தம்பி?

கிறிஸ்தவம் என்பது அப்பாவிற்கும் அவன் மகனுக்கும் இடையே இருக்கும் ஒரு உறவுமுறையாகும். இஸ்லாம் என்பது ஒரு எஜமானனுக்கும் அடிமைக்கும் இடையே இருக்கும் ஒரு அக்ரிமெண்டு அதாவது ஒரு நபந்தனைப் பத்திரம் ஆகும்.

எனவே அனேக காரணங்களில் இந்த மூன்று முக்கிய காரணங்கள் தான் என்னை இன்னும் இஸ்லாம் பக்கம் இழுக்காமல் வைத்திருக்கிறது.

இப்போது உன் சந்தேகம் தீர்ந்ததா?

அப்துல்லாஹ்: அப்படியானால் நான் ஒரு அடிமை என்றுச் சொல்கிறீங்களா?

உமர்: அடிமையில்லாமல் நீ என்ன அல்லாஹ்வின் குமாரனா? இஸ்லாம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாமலா நீ இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய்? அல்லாஹ் உன்னை எந்த நாளிலும் ஒரு குமாரனாக ஏற்றுக்கொள்ளமாட்டார். குறைந்த பட்சம் ஒரு மகனாக கூட உன்னை தத்து எடுத்துக்கொள்ளமாட்டார்.

அப்துல்லாஹ்: உங்களை நாளைக்கு பார்த்துக்கொள்கிறேன். இன்னிக்கு உங்களை இப்போதைக்கு போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

அம்மா… எனக்கும் அண்ணாவிற்கு காபி கொண்டு வாங்க.

உமர்: (உமர் மனதுக்குள் நினைக்கிறார்: அடப்பாவமே, என் தம்பி ஒரு முஸ்லீமைப் போலவே நடந்துக்கொள்கிறானே! அவனால் பேசமுடியவில்லையானால், உடனே பிளேட்டை மாத்துரான்… இந்த விஷயத்தில் என் தம்பி கெட்டிக்காரன்…. )

அடுத்த "நச்சென்று நாலு கேள்வி" தொடரில் சந்திப்போம்.



--
3/08/2013 11:35:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: காஷ்மீரை விட்டுக்கொடுத்தால், இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் ஒழியுமா?

 

காஷ்மீரை விட்டுக்கொடுத்தால், இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் ஒழியுமா?

(தீவிரவாதத்தின் ஆணிவேர் எது?)

 

தீவிரவாத வெறிச்செயல்களை கண்டு, கேட்டு சோர்வு வந்துவிட்டது. பன்றிக் காய்ச்சல் போல அவ்வப்போது வந்து சிலரின் உயிரை குடித்து சில மாதங்களில் மறைந்துப்போகிறது இந்த தீவிரவாதம். சில மாதங்களுக்கு பிறகு  மறுபடியும் வந்து முகத்தை காட்டிச் செல்கிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கண்டு இதர மதங்களில் உள்ள சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு விடுகின்றனர். அதாவது பழிக்கு பழி என்ற தோரணையில்  ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

 

ஒரு பேருந்து விபத்து நேரிட்டு, அனேகர் மரித்தார்கள் என்று செய்தியில் காணும் போது, காயப்பட்டவர்கள் மீது பரிதாபம் வருகிறது, அந்த பேருந்தை ஓட்டியர் மீது கோபம் வருகிறது. ஆனால், திட்டமிட்டு மனிதர்களை கொல்லும் இந்த தீவிரவாதிகளை நினைக்கும் போது நெஞ்சுக்குள் ஒரு வகையான வலி பரவுகிறது. மனிதர்களிலும் இப்படி காட்டுமிராண்டிகள் இருப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.

 

கடந்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி அன்று, ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பானது, தீவிரவாதிகளால் அவ்வப்போது தாக்கப்படுகின்ற இந்தியாவிற்கு கிடைத்த இன்னொரு தோல்வியாகும். தீவிரவாதத்தை ஒடுக்கிவிடுவோம், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று வாக்குறுதிகளை அளித்த தலைவர்கள் மறுபடியும் தோல்வி அடைந்தார்கள். பதினைந்துக்கும் அதிகமான அப்பாவிகள் உடல் சிதரி மரித்தனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றனர். இன்னும் இந்த தீவிரவாதத்திற்கு யார் காரணம் என்று முழுவதுமாக கண்டுபிடிக்கப்படவில்லை, அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

 

தீவிரவாதிகள் என்றால் நிச்சயமாக இஸ்லாமிய தீவிரவாதிகளாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும், பெரும்பான்மையான தீவிரவாத செயல்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் மூலமாக நடந்தேறியிருக்கிறது என்ற உண்மையை அனேகரால் ஜீரணித்துக்கொள்ள முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக, உலக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களை கணக்கெடுத்துக்கொண்டால், நிச்சயமாக அவர்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான்முதலிடம் பிடிப்பார்கள், இதில் எந்த சந்தேகமும் இருக்காது.  இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் சிலர் அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை ஒரு புறம் இருந்தாலும், சதவிகிதத்தை கணக்கெடுத்தால், இஸ்லாம் இந்த விஷயத்தில் மற்றவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகின்றது. எனவே, இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பை இப்போது காணலாம்.

 

ஏன் முஸ்லிம்களில் ஒரு சிலர் இப்படி நடந்துக்கொள்கின்றனர்:

 

(இந்த கட்டுரையில் நான் குறிப்பிடும் இந்த முஸ்லிம் தீவிரவாதிகள், இலட்சத்தில் ஒருசிலர் இருப்பார்கள். எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்பதை கவனிக்கவும். விஷ்வரூபம் படம் பற்றிய விஷயத்தில் ஒரு இஸ்லாமிய அறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசும் போது, ஒரு தீவிரவாதி எப்படி இருப்பான் என்று சிறு பிள்ளையிடம் கேட்கும் போது, அவன் தாடி வைத்திருப்பான், தொப்பி அணிந்து இருப்பான் என்றுச் சொல்லும் அளவிற்கு இந்த சினிமா எங்களைப் பற்றி தவறாக சித்தரிக்கிறது என்றுச் சொல்லி வேதனை அடைந்தார். ஆனால், இந்திய முஜாஹிதீன்கள் என்றுச் சொல்லி சில புகைப்படங்களை தொலைக்காட்சி செய்தியில் வெளியிட்டார்கள், அதில் ஒரு சிலர் தாடி வைத்துக்கொண்டும், தொப்பி அணிந்துக்கொண்டும் இருக்கிறார்கள். மேலும் சில நாட்களுக்கு முன்பு தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு என்பவரும் ஒரு சில புகைப்படங்களில் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாகத் தான் காட்சியளித்தார். (பக்தியுள்ள முஸ்லிம் என்றால் பொதுவாக தாடி வைத்திருப்பார் தொப்பி அணிந்திருப்பார் என்று எல்லாரும் நம்புகிறோம், இதனை இஸ்லாமியர்கள் ஆட்சேபிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.) விஸ்வரூபம் படத்தை நாம் தடை செய்யமுடியும், ஆனால், அனுதினமும் நம் வீட்டிலேயே தொலைக்காட்சிகளில் வெளியாகும் தீவிரவாதிகளில் படங்களை எப்படி தடை செய்யப்போகிறோம்?)

 

மனிதனாக பிறந்தவன் எப்படி இப்படி நடந்துக்கொள்ளமுடியும், அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று சிந்திக்கும் போது கீழ்கண்ட விவரங்கள் மனதில் வந்துபோகின்றன, அவைகளை இப்போது பார்ப்போம். இந்த கட்டுரையை வாசிப்பவர் ஒரு வேளை முஸ்லிமாக இருந்தால், நான் இங்கு விவரிப்பது ஒரு சராசரி முஸ்லிமை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். வன்முறையில் ஈடுபட்டு, எப்படியாவது தான் சாதிக்க நினைப்பதை அடைய முற்படும் நபரைப் பற்றியே குறிப்பிடுகிறேன். ஒரு தீவிரவாதிக்கு இருக்கும் சில குண நலன்களை காண்போம்.

 

1) தீவிரவாதத்தில் ஈடுபடும் நபருக்கு, நாட்டுப்பற்று இருப்பதில்லை:

 

பொதுவாக தீவிரவாத செயல்களில், குண்டு வெடிப்புகளில் ஈடுபடும் நபர்களுக்கு தங்கள் நாடு மீது பற்று இருப்பதில்லை.  இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவனுக்கு நாட்டுப்பற்று இருக்கவாய்ப்பு இல்லை.  அதாவது அவன் பைபிளைப் படிக்கும் ஒரு கிறிஸ்தவனாகவும், கீதையை படிக்கும் ஒரு இந்துவாகவும் அல்லது முஹம்மதுவை நபியாக நம்பி, குர்-ஆனை பின்பற்றும் ஒரு முஸ்லிமாகவும் இருக்கலாம். அவன் யாராக இருந்தாலும் தன் சுய இலட்சியத்திற்காக (தவறான நோக்கத்திற்காக) அப்பாவி மனிதர்களை கொல்பவன் மனிதனே அல்ல, அவன் ஒரு மிருகம், இல்லை இல்லை, மிருகம் என்றுச் சொன்னால், தங்களை இப்படிப்பட்டனோடு ஒப்பிட்டதற்கு மிருகங்களுக்கு கோபம் வந்துவிடும், அவன் ஐந்தறிவு படைத்த மிருகங்களை விட கேவலமானவன் ஆவான்.  

 

ஒருவன் தன் நாட்டை நேசித்தால், எந்த காரணத்தைக் கொண்டும், அதற்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யமாட்டான்.

 

2) தீவிரவாதத்தில் ஈடுபடும் நபருக்கு, மனிதர்கள் மீது அன்பு இருப்பதில்லை

 

இப்படிப்பட்ட தீய செயல்களால், "தான் வணங்கும் இறைவன் மகிழுவான்" என்று இவன் நினைத்துக்கொள்கிறான். ஆனால், உண்மை இறைவன் இப்படிப்பட்டவன் முகத்தில் காறிதுப்பிவிடுவார். அப்பாவி மக்களை கொல்பவன் மனிதனே இல்லை. இவன் தன் சொந்த குடும்பத்தை மட்டும் நேசிக்கிறான், சக இந்தியனை நேசிப்பதில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால், இப்படிப்பட்டவன் தன் குடும்ப நபர்களையும் நேசிப்பதில்லை, பெற்றோர்களையும் நேசிப்பதில்லை. தன்னுடைய இந்த தீவிரவாத செயலுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டால், அவர்களை கொல்வது தான் இவனுடைய முதல் வேலையாக இருக்கும்.

 

சில இஸ்லாமிய திவிரவாதிகளிடம் பேட்டி எடுக்கும் போது அவர்கள் சொல்லும் விவரம் என்னவென்றால், தன்னை பெற்ற தாயே தனக்கு தடையாக இருந்தால், அவளையும் கொல்ல தயங்கமாட்டேன் என்பதாக இருக்கும்.

 

மூளைச் சலவை செய்யப்பட்ட இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தை நேசிக்கமாட்டார்கள் என்ற நிலை இருக்கும், போது தன் சக குடிமகன் பற்றி இவனுக்கு என்ன கவலை?

 

ஆனால், இங்கு சிந்திக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரே மண்ணில் வளரும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவ வாலிபர்களில் அதிபடியான தீவிரவாதிகள் ஏன் இஸ்லாமிய பின்னணியிலிருந்து வருகிறார்கள் என்பது தான். இவர்களை தீவிரவாதிகளாக மாற்றுபவர்கள் யார்? இவர்களின்  "மனிதத்தன்மையை" அழித்து விடும் அந்த சக்தி தான் என்ன? வாசகர்களே இதைப் பற்றி சிந்தியுங்கள்.

 

3) தீவிரவாதத்தில் ஈடுபடும் நபருக்கு, தன் மதம் தான் முக்கியம், உண்மையும், நேர்மையும் ஒழுக்கமும் அல்ல:

 

"மதத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் கொடுமைகள் அதிக சேதத்தை விளைவிக்கும்" என்று எங்கேயோ படித்த ஞாபகம் எனக்கு வருகிறது.

 

மதம் பிடித்த யானைப் போல,  மனிதனுக்கு மதம் பிடித்துவிட்டால், அவனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். அதுபோல, இந்த தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களின் மூளைகள் மத அறிஞர்களால் சலவை செய்யப்படுகின்றது. இவர்களுக்கு வேறு ஒன்றும் கண்ணுக்கு தெரிவதில்லை. இவர்கள் தங்களை சுதந்திரத்திற்காக போராடும் தியாகிகளோடு ஒப்பிட்டுக்கொண்டு தாங்களும் தியாகிகள் என்று தவறாக நினைத்துக்கொள்கிறார்கள், ஆனால், இவர்கள் ஒருவகையான மனநோயாளிகள் ஆவார்கள். இவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறியும் அறிவு இருப்பதில்லை. இவர்களின் உள்ளத்தில் இருக்கும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் யாரோ சிலர் சிதைத்துவிடுகின்றனர். எங்கேயோ இருந்துக்கொண்டு ரிமோட் மூலமாக கண்ட்ரோல் செய்யும் பொம்மைகள் போல தங்கள் மத தலைவர்கள் சொல்வதை கேட்டு இந்த தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். மத  தலைவர்களின் பேச்சுக்களை கேட்டு, வன்முறையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மனிதர்களே அல்ல.

 

4) இஸ்லாமியர்களில் இப்படிப்பட்ட சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுவதற்கு காரணம் காஷ்மீராக இருக்குமோ?

 

இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி கேள்வி எழுப்பும் போது அனேக இஸ்லாமியர்கள் அனேக பதில்களை அளிக்கிறார்கள், அதாவது:

 

அ) இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாதிகளாக மாறுவதற்கு, ஏழ்மை தான் காரணம்.

 

ஆ) இஸ்லாமியர்களில் சிலர் தீவிரவாதிகளாக மாறுவதற்கு படிப்பறிவு இல்லாமை காரணம்.

 

இ) இந்தியா காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டால், இந்த தீவிரவாத தாக்குதல்கள் இருக்காது.

 

ஈ) சில இஸ்லாமிய அறிஞர்கள்  குர்-ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து, இஸ்லாமிய வாலிபர்களை வழிகெடுக்கிறார்கள்.

 

மேற்கண்டது போல, அனேகர் இந்த தீவிரவாதத்திற்கு பல காரணங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்த காரணங்கள் தான் இந்திய மண் சிகப்பாக மாறுவதற்கு காரணிகளாக இருக்கின்றனவா?

 

காஷ்மீர் தான் இந்தியாவில் தீவிரவாத செயல்கள் நடப்பதற்கு காரணம் என்றால்? பாகிஸ்தானில் உள்நாட்டிலேயே அனேக தீவிரவாத செயல்கள் ஒவ்வொரு ஆண்டும் நடந்தேறுகிறதே அதற்கு எந்த காஷ்மீர் காரணியாக இருக்கிறது?

 

இதர இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் ஒருவர் மீது ஒருவர் குண்டு மழை பொழிகிறார்களே, இதற்கு எந்த காஷ்மீர் காரணமாக இருக்கிறது?

 

நன்கு படித்தவனும், பணம் படைத்தவனும் இஸ்லாமிய தீவிரவாதியாக இருக்கிறானே இதற்கு ஏழ்மையும், படிப்பின்மையும் காரணம் என்று சொல்லமுடியுமா?

 

ஷியாக்களின் மசூதிகளில் சுன்னி இஸ்லாமியர்கள் குண்டு வைக்கிறார்கள், அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கும் போதே குண்டு வெடிக்கிறது! இதற்கு எந்த காஷ்மீர் காரணம்?

 

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாத செயல்கள் நடைப்பெற காஷ்மீர் ஒரு காரணமே ஒழிய, அது மட்டுமே 100 சதவிகித காரணமல்ல. காஷ்மீரை கொடுத்துவிட்டாலும் தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதம் அரங்கேறிக் கொண்டேஇருக்கும்.

 

ஒருவேளை காஷ்மீர் தான் உண்மை காரணம் என்று சிலர் அடம்பிடித்தால், நேரடியாக இந்தியாவோடு போர் புரிந்து வெற்றி பெறவேண்டியது தானே!  காஷ்மீர் பாகிஸ்தானுக்குத் தான் சொந்தமாகவேண்டும் என்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் நம்பினால், முதலாவது பாகிஸ்தானுக்கு நீங்கள் சென்றுவிடுங்கள், அதன் பிறகு பாகிஸ்தானின் இராணுவத்தில் சேர்ந்து, சண்டையிடுங்கள், இது தான் வீரம் எனப்படும், அதை விட்டுவிட்டு, இந்திய மண்ணில் தீவிரவாத கைவரிசையை காட்டினால், ஆபத்து உங்களுக்கு அதிகம் என்பதை மறந்துவிடக்கூடாது.

 

தீவிரவாதத்திற்கு  ஏழ்மையும் படிப்பறிவின்மையும் காரணமல்ல. இஸ்லாமை விட்டு, இதர மார்க்கங்களை பார்க்கும் போது அவர்களின் மத்தியிலும் ஏழ்மை உண்டு, படிப்பறிவின்மை உண்டு, இதை காரணம் காட்டி யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடுவது இல்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால், ஏழ்மையும், படிப்பறிவின்மையும் சிலரை திருடர்களாக மாற்றுகிறது, ஏமாற்றுகாரர்களாக மாற்றுகிறது, ஆனால் தீவிரவாதிகளாக மாற்றுவதில்லை.

 

சதவிகிதத்தை பார்க்கும் போது, உலகிலே உள்ள எந்த ஒரு மார்க்கத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாமிலே தீவிரவாதிகள் உண்டு. எந்த ஒரு மதத்தின் பெயராலும் செய்யமுடியாத அளவிற்கு இஸ்லாமியர்களால் அனேக குண்டுவெடிப்புகள், தீவிரவாத தாக்குதல்கள் நடந்தேறியுள்ளது.  அப்படியானால், இஸ்லாமியர்களை ஆட்டிப்படைக்கும் அந்த தீய சக்தி என்ன? மற்ற மதங்களில் உள்ளவர்களைக் காட்டிலும், அதிக அளவில் இஸ்லாமில் மட்டும் தீவிரவாதம் இருப்பதற்கு காரணமென்ன? வாசகர்கள் சிந்திக்கட்டும்.

 

கடந்த 10 ஆண்டுகளாக, இஸ்லாமியர்களால உலக அளவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கையை தேதிவாரியாக தெரிந்துக்கொள்ள இந்த தொடுப்பை சொடுக்கி பாருங்கள்:

 

http://www.thereligionofpeace.com/  and http://www.thereligionofpeace.com/index.html#Attacks 

 

இந்திய அரசால் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களே அதிகம் இருக்கின்றன. அதாவது 35 தடை செய்யப்பட்ட இயக்கங்களில், 14 இயக்கங்கள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாகும்.  இந்த பட்டியலில் இஸ்லாம் அல்லாத திவிரவாத குழுக்களும் இடம்பெற்று இருக்கிறார்கள், ஆனால் முதலிடம் வகிப்பது இஸ்லாமிய இயக்கங்களாகவே இருக்கிறது.

 

BANNED ORGANISATIONS

LIST OF ORGANISATIONS DECLARED AS TERRORIST ORGANISATIONS UNDER THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 196

 

 

1.           Al Badr 

2.           Al-Qaida

3.           Al-Umar-Mujahideen

4.           Deendar Anjuman

5.           Dukhtaran-e-Millat (DEM) 

6.           Harkat-ul-Mujahideen / Harkat-ul-Ansar / Harkat-ul-Jehad-e-Islami 

7.           Hizb-ul-Mujahideen / Hizb-ul-Mujahideen Pir Panjal Regiment]]

8.           Indian Mujahideen and all its formations and front organizations

9.           Jaish-e-Mohammad / Tahrik-e-Furqan 

10.        Jamiat-ul-Mujahideen

11.        Jammu and Kashmir Islamic Front

12.        Lashkar-e-Taiba/ Pasban-e-Ahle Hadis 

13.        Students Islamic Movement of India

14.        Organisations listed in the Schedule to the United Nationals Prevention and Suppression of Terrorism (Implementation of Security Council Resolutions) Order, 2007 made under section 2 of the United Nations (Security Council) Act, 1947 (43 of 1947)

மூலம்: http://www.mha.gov.in/uniquepage.asp?Id_Pk=292

 

5) இந்தியாவில் வாழும் சில நம்பிக்கை துரோகிகள்

 

இந்திய குடிமகன்களாக இருந்துக்கொண்டு, இந்தியாவிற்கே குழி வெட்டும் சிலர், தீவிரவாதிகளுக்கு உதவி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வீடுகளில் இடம் கொடுத்து பாதுகாக்கிறார்கள். மேற்கண்ட பட்டியலில் இருக்கும்  தீவிரவாத குழுக்களுக்கு உதவி செய்ய இந்தியாவில் சிலர் இருப்பது தான் வேதனைக்குரிய விஷயம். அந்த தீவிரவாத சண்டாளர்கள்,  இந்த நம்பிக்கை துரோகிகளின் உதவியினால், நாச வேலையில் ஈடுபடுகிறார்கள். அப்பாவிகளின் உயிரை குடிக்கிறார்கள்.

 

இந்திய அரசாங்கம் முதலாவது இந்த நம்பிக்கை துரோகிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்கவேண்டும். மும்பை தாக்குதலில் உயிரோடு சிக்கியவனை தூக்கில் போட்டது போல, இந்த நம்பிக்கை துரோகிகளுக்கும் ஒரு சரியான பாடத்தை புகட்ட வேண்டும். இந்திய மண்ணில் தீவிரவாதத்தை பரப்புபவனுக்கு பயமுண்டாகவேண்டும். இதனை இந்திய அரசாங்கம் சீக்கிரமாக செய்யவேண்டும்.

 

இதுவரை நாம் கண்டது இந்திய அரசாங்கம் தடை செய்த விவரங்கள் தான், ஆனால், உலக அளவில் எடுத்துக்கொண்டால், இஸ்லாமியரல்லாத நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. கணக்கெடுத்து பார்த்தால், ஏதோ ஒரு தவறான கோட்பாட்டினால், சிலர் தாக்கப்பட்டு அதற்கு அடிமைகளாக வாழ்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

 

முடிவுரை:

 

காஷ்மீரை கொடுத்துவிட்டால் இந்தியாவில் தீவிரவாதம் ஒழியுமா? என்று கேள்வி கேட்டால், இல்லை என்பது தான் உண்மையான பதிலாக இருக்கமுடியும். இஸ்லாமிய தீவிரவாதிகள் செயல்பட அவர்களுக்கு காஷ்மீர் தேவையில்லை, இன்னொரு மனிதன் இருந்தாலே போதும்.

 

உலக அளவில் ஏன் இஸ்லாமில் மட்டும் அதிக தீவிரவாத செயல்கள் நடைப்பெறுகிறது, அதிகமான தீவிரவாத இயக்கங்கள் இருக்கிறது என்ற கேள்வி ஒருவருக்கு எழும்பினால் அது நியாயமான கேள்வியாகும். இதற்கான பதிலை தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட நூல்களை படிக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

 

1)       இஸ்லாமிய புனித நூல் – குர்-ஆன் (

2)       இஸ்லாமிய ஸ்தாபவர் முஹம்மது அவர்களின் வாழ்க்கை வரலாறு

 

3)       குர்-ஆனுக்கு அடுத்த இஸ்லாமிய அடிப்படை நூல்கள் (ஹதீஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய, முஹம்மதுவின் சொல்லும் செயலும்)  - http://www.tamililquran.com/bukhariindex.asp and http://www.tamililquran.com/sahih-muslim.asp




--
3/03/2013 09:02:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்