இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Friday, August 6, 2010

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

 

இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு

விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!

இயேசு இறைமகனா என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு மறுப்புக்கள் கொடுத்துக்கொணடு இருக்கிறோம். பீஜே அவர்கள் "கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்" என்ற தலைப்பில் தங்கள் திருத்தல் வேலையை அரங்கேற்றியுள்ளார். இந்த மறுப்புக் கட்டுரை பீஜே அவர்களின் திருத்தல் வேலையை உலகிற்கு வெளிச்சம் காட்டும். பைபிள் சொல்லாத ஒன்றை தானாகவே கற்பனை செய்துக்கொண்டு தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களும் புரிந்துக் கொள்ளலாம்.

பீஜே எழுதியவைகளின் சுருக்கம்:

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்க, விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம். (பீஜேவின் கண்டுபிடிப்பு 1)

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்! (பீஜேவின் கண்டுபிடிப்பு 2)

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (பீஜேவின் கண்டுபிடிப்பு 3).

5) இது தான் கடவுளின் இலக்கணமா? என்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்.

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால், ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்

இதனை படிக்கும் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், இப்படியெல்லாம் நாங்கள் பைபிளில் படிக்கவில்லையே என்று எண்ணுவீர்கள். உங்கள் சந்தேகம் உண்மை தான், ஆனால், பீஜே அவர்கள் மிகப்பெரிய ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இக்கட்டுரையில் அவைகளுக்கு நாம் பதிலைக் காண்போம்.

இக்கட்டுரையின் தலைப்புக்கள்:

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

2) மோசே சொன்னது போல, விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசு ஏன் தண்டிக்கவில்லை?

1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

பீஜே அவர்கள், இயேசு இறைமகனா புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்

12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்

விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள்.

(நீதிமொழிகள் 6:29)

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

இன்னொரு முறை அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்:

1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்க, விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம்.

2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம்.

3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்?

4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (இதனை பீஜே எப்படியோ கண்டுபிடித்து இருக்கிறார்).

5) இது தான் கடவுளின் இலக்கணமா? என்று கேள்வியை பீஜே எழுப்புகிறார்

6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால், ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார்.

பீஜே அவர்களின் வரிகளுக்கு செல்வதற்கு முன்பாக, அவர் மேற்கோள் காட்டிய நிகழ்ச்சி பற்றி சுருக்கமாக நாம் பார்ப்போம்.

இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அக்கால யூதகுருக்கள் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்து,மோசேயின் சட்டத்தின்படி இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று இயேசுவிடம் கேட்டார்கள்.

இது சாதாரண கேள்வி அல்ல, இதில் அனேக பிரச்சனைகள் உள்ளது. அதாவது,அக்காலத்தில் ரோமர்கள் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தார்கள், ரோம சட்டம் அமுலில் இருந்தது.

மோசேயின் சட்டத்தை ஆதரித்து, ரோம சட்டத்தை மீறலாமா அல்லது ரோம சட்டத்திற்கு கீழ்படிந்து மோசேயின் சட்டத்தை மீறலாமா? (இதில் எதை இயேசு செய்வார் என்று அவர்கள் காத்திருந்தார், ஆனால்,இயேசு வேறு ஒன்றை செய்தார்).

மோசேயின் சட்டத்தை ஆதரிக்கலாமா:

ஆம், மோசேயின் சட்டத்தின் படி, இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும் என்று இயேசு சொன்னால், உடனே யூத தலைவர்கள், இவர் "ரோம சட்டத்தை மீறிவிட்டார்" என்றுச் சொல்லி, அரசாங்கத்திடம் இயேசுவை சிக்கவைத்துவிடுவார்கள். ஏனென்றால், ரோமர்களின் ஆட்சியில், மரண தண்டனை விதிக்கும் உரிமை ரோம அரசாங்கத்திற்கே தவிர, தனி மனிதனுக்கு இல்லை.எனவே இயேசு, மக்களிடத்தில் கலகத்தை உண்டாக்கி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்று ரோம அரசாங்கத்திடம் சொல்லிவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ரோம சட்டத்தை ஆதரிக்கலாமா:

ஒருவேளை, இவளுக்கு மோசேயின் சட்டத்தின்படி தண்டனை இல்லை என்றுச் சொல்லிவிட்டால், பொது மக்களிடம் இயேசுவிற்கு இருக்கும் செல்வாக்கை அல்லது நற்பெயரை கெடுப்பதற்கு இந்த பதில் யூத குருக்களுக்கு உதவியாக இருக்கும். அதாவது, நம்முடைய மோசேயின் சட்டத்தை இவர் மீறிவிட்டார்,அல்லது அதனை அவமதித்துவிட்டார் என்றுச் சொல்லி, மக்களிடையே இயேசு பற்றி சொல்லலாம் என்று யூதகுருக்கள் நினைத்தனர்.

இந்த இரண்டு தெரிவுகளையும், இயேசு செய்யாமல், கீழ்கண்டவாறு கூறினார், யூத குருக்கள் தோல்வி அடைந்தார்கள், (இதே போல, பீஜே அவர்களும் தோல்வி அடைந்துவிட்டார்).

யோவான் 8:4 லிருந்து 11 வசனங்கள் வரை:

போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசேநியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்னசொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம்உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல்அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,

அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவதுகல்லெறியக்கடவன் என்று சொல்லி,

அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல்சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசுதனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.

இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்:ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னைஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை,ஆண்டவரே, என்றாள்.

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

இந்த வரிகளை படித்துவிட்டுத் தான் பீஜே அவர்கள் மேலே நாம் படித்தது போல எழுதியுள்ளார்.

மேலேயுள்ள வசனங்களை படித்த நீங்கள், பீஜே அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

பீஜே அவர்கள் எழுதியவைகளை ஒரு முறை படிப்பது நல்லது:

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(யோவான் 8:3-11)

பீஜே அவர்களுக்கு கேள்விகள்:

1) ஆய்வு செய்து புத்தகம் எழுதிய பீஜே அவர்களே, "விபச்சாரம்" செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன் என்று இயேசு சொன்னாரா? அல்லது "பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன்" என்றுச் சொன்னாரா?

2) "பாவம்" என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி "விபச்சாரம்" என்று தெரிந்தது?

3) உங்களுக்கு ஏன் இந்த திருத்திச் சொல்லும் வேலை? உள்ளதை அப்படியே சொல்லி உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் அல்லவா?

4) "பாவம்" என்ற வார்த்தை பொதுவான வார்த்தை, எல்லா வித தீய செயல்களை குறிக்க பொதுவாக "பாவம்" என்று பயன்படுத்தலாம்.அதாவது பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதல், கொலை செய்தல்,விபச்சாரம் செய்தல், தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் என்று அனேக தீய செயல்களை நாம் பொதுவாக பாவம் என்று அழைக்கிறோம். இந்த சாதாரண விஷயம் கூடவா உங்களுக்கு தெரியவில்லை? அல்லது வேண்டுமென்றே பைபிள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் உங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் செயலா? எது எப்படியோ உங்கள் திருத்தல் வேலை உலகிற்கு காட்டப்பட்டுவிட்டது, சாயம் வெளுத்துவிட்டது.

விபச்சாரம் செய்யாதவன் கல்லெரியவேண்டும் என்று இயேசு கூறவில்லை, "பாவம்" செய்யாதவன் கல்லெரியட்டும் என்று தான் கூறினார், இதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.

"பாவம்" என்று இயேசு சொன்னதை ஏன் நாம் "விபச்சாரம்" என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள்:

இந்த கேள்விக்கு இடமே இல்லை, காரணங்களை கீழே படிக்கவும்:

அ) பாவம் என்ற வார்த்தை பைபிள் முழுவதும் "விபச்சாரத்திற்கு" மட்டும் பயன்படுத்தப்படவில்லை, எல்லா வித தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (குர்‍ஆனிலும் இதே நிலைதான், யாராவது மறுக்க தயாரா?)

ஆ) உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும் என்று இயேசு சொன்னதை, அந்த பெண்ணை கொண்டு வந்த எல்லாருக்கும் புரிந்தது (பீஜேவிற்கு மட்டும் புரியாது). நான் எப்படி இதை அவ்வளவு நிச்சயமாக சொல்லமுடியும்?அதாவது, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவராக ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டனர், அதாவது பெரியவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு வந்திருந்த சிறியவர்கள் கூட சென்று விட்டனர். பீஜேவின் கூற்றுப்படி சிறியவர்கள் கூட விபச்சாரம் செய்ததாக நாம் அர்த்தம் கொள்ளவேண்டும், இதுசாத்தியமில்லையல்லவா? ஆனால், சிறுவர்கள் பொய் சொல்வார்கள், இதர சிறிய சிறிய தவறுகளைச் செய்வார்கள், இது சாத்தியம்.

இ) சிறியவர்களும் சென்றுவிட்டார்கள் என்றுச் சொல்வதினால், இயேசு கூறியது,சிறிய சிறிய தவறுகளாகிய பெற்றோர்களிடம் பொய் சொல்லுதல், இன்னும் பல தீய செயல்களை செய்தலை கூட‌ குறிக்கும் என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துக்கொண்டதினால், அவர்கள் சென்றுவிட்டனர்.

ஈ) சரி, இயேசு சொன்னது "பொதுவான தீய செயல்களைக் குறிக்கும் பாவம்" என்பதாக இருந்தாலும், ஏன் ஒரு யூத குருவும், அல்லது பெரியவர்களும், அல்லது சிறியவர்களும் கல்லெரியவில்லை?

பாவமில்லாதவன் ஒருவனுமில்லை, ஏதோ ஒரு சிறிய பாவத்தையாவது செய்து இருப்பார்கள், பொய் சொல்லியிருக்கலாம், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருந்திருக்கலாம், கெட்ட வார்த்தைகளை கோபத்தில் சொல்லியிருக்கலாம், ஒரு சிலர் விபச்சாரமும் செய்து இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்து இருக்கலாம். ஆனால், யாருக்கு தெரியப்போகுது? ஒரு கல்லை எடுத்து அந்த பெண்ணின் மீது வீசிவிட்டால் போதுமே என்று ஏன் யாருமே நினைக்கவில்லை?இதற்கும் வாய்ப்பு இல்லை.

சாதாரண பாவம் செய்து இருந்தாலும் அதனை மறைத்து, அப்பெண்ணின் மீது கல்லெரிய யாருக்கும் தைரியமில்லை ஏன்? ஏனென்றால், அங்கு உட்கார்ந்து தரையில் எழுதிக்கொண்டு இருப்பவர் யார் தெரியுமா? ஏதோ, நான் தான் நபி என்னை நம்புங்கள் என்றுச் சொல்லுகின்ற பொய் தீர்க்கதரிசி அல்ல, தேவைப்படும் போது, தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லி அல்லாஹ்விடமிருந்து வசன பொட்டலங்களை வாங்கித் தருபவர் அல்ல.

இயேசு மிகப்பெரிய அற்புதங்களை அடையாளங்களைச் செய்துள்ளார், யூத தலைவர்களின் மடங்கடிக்கும் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லியுள்ளார்,அவர்கள் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே சொல்லியுள்ளார். எனவே,யாராவது உண்மையாகவே, தான் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லி,இயேசுவை ஏமாற்றலாம் என்று நினைத்து ஒரு கல்லை எரிந்து இருந்தால்,உடனே, இயேசு அந்த கல்லை எரிந்தவனிடம், நீ இந்த நாள் இந்த நாழிகையில் இந்த பாவத்தைச் செய்தாயே என்றுச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரும் கெட்டுவிடுமே, ஊரே சிரிக்குமே! நமக்கு ஏன் வம்பு என்று தலையை தொங்க போட்டுக்கொண்டு மூச்சு விடாமல் சென்றுவிட்டனர். எனவே, யாரும் ஏமாற்றமுடியாது, தான் ஒரு சிறிய பாவமும் செய்யவில்லை என்றுச் சொல்லி கல்லை எடுக்கமுடியாது. ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்றுச் சொல்லி, இயேசு தலை குனிந்து இருந்தார். இது தான் வாய்ப்பு என்று முகத்தில் அசடு வழிந்தவர்களாக‌ ஒவ்வொருவராக சென்றுவிட்டனர்.

ஆக, இயேசு சொன்னது "சிறிய பெரிய பாவங்களை,தவறுகளை உள்ளடக்கிய" பாவம் என்ற வார்த்தையே தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய "விபச்சார பாவத்தை" அல்ல. இனியும்,ஏதாவது விளக்கம் தேவையா?

சரி, இனி பீஜே அவர்களின் அடுத்தடுத்துள்ள வரிகளுக்குச் செல்வோம்:

பீஜே எழுதுகிறார்:

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை.

பீஜ அவர்களே, நீங்கள் முதலாவது கொடுத்த விளக்கமே தவறு, அதாவது "எந்த ஒரு சிறு பாவமும் செய்யாமல் இருப்பவன் கல்லெரியவேண்டும்" என்று இயேசு சொன்னதை, நீங்கள் திருத்தி "விபச்சாரம் செய்யாதவன்" என்று பொருள் கொடுத்து இருக்கிறீர்கள்.

இரண்டாவதாக, அந்த பெண்ணை கொண்டு வந்த கூட்டமக்கள், இயேசு சொன்னதின் பொருளை அறிந்தவர்களாக திரும்பிச் சென்றுவிட்டனர். இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த கூட்டத்தினர் திரும்பிச்சென்று இருக்கும் போது, "அந்த சமுதாயமே" விபச்சாரம் செய்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?

எருசலேமில் இருக்கும் எல்லா யூதர்களும் ஒன்று கூடி வரவில்லை பீஜே அவர்களே, இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வந்தார்கள். ஏன் இப்படி ஒரு சமுதாயமே அப்படி செய்தது என்றுச் சொல்கிறீர்கள்? உலகத்தில் ஒரு கூட்ட இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள், பெண்களை கற்பழிப்பவர்களாக இருக்கிறார்கள், மனைவிகளை கொடுமைபடுத்துபவர்களாக இருக்கிறார்கள், இதனால், உலகில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் அதே போல இருக்கிறார்கள் என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களோ?

எனவே, உங்களின் இப்படிப்பட்ட திருத்தல் வேலை இனி தமிழ் கிறிஸ்தவர்களிடம் பலிக்காது, இனியாவது இப்படி சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,நிறுத்தமாட்டேன் என்றுச் சொல்வீர்களானால், இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, மேலே நீங்கள் சொன்னது மிகப்பெரிய இஸ்லாமிய பொய்யாகும்.

பீஜே எழுதுகிறார்:

இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர்.

பீஜே அவர்களே, இந்த நிகழ்ச்சியின் போது, இயேசுவின் சீடர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் படித்த வசனங்களில் உள்ளதா? பீஜே அவர்களே வேண்டாம், உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இப்படியெல்லாம் கீழ்தரமாக பொய்யைச் சொல்வது தகுதியாக இருக்காது, இது உங்களுக்கு அடுக்காதும் கூட.

ஒரு வேளை சீடர்கள் அங்கு இருந்திருந்தாலும்:

அந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் அப்போது அங்கே இருந்தார்களா இல்லையா என்று வசனங்கள் சொல்லவில்லை. உங்கள் பேச்சுக்கே வருகிறேன், ஒரு வேளை,சீடர்கள் அங்கு இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி அவர்கள் இருந்திருந்தாலும், இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யூத மத தலைவர்கள் மற்றும் அவர்களோடு வந்தவர்களாவார்கள். ஆக, இயேசு சொன்னது தன் மீதுகுற்றம் சுமத்த வந்தவர்களிடமே தவிர, தன் சீடர்களிடமில்லை. இது கூடவா உங்களுக்கு புரியவில்லை. நிச்சயமாக உங்களுக்கு புரிந்து இருக்கும், இருந்தாலும் என்ன செய்வது இஸ்லாமிய அறிஞராயிற்றே, மற்ற மார்க்கங்களின் மீதுபொய்யை சொல்லியாவது இஸ்லாமை காப்பாற்றவேண்டுமே. பீஜே அவர்களே,மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன், எச்சரிக்கையாக எழுதுங்கள்.

எனவே, உங்க லாஜிக் வார்த்தைகளையெல்லாம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற மேடைப்பேச்சில் வைத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தவர்களிடம் வேண்டாம்.

பீஜே எழுதுகிறார்:

ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

ஒரு சமுதாயமே விபச்சாரம் செய்தது என்றுச் சொன்னீர்கள், பிறகு இயேசுவின் சீடர்கள் கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சொன்னீர்கள் (என்னவோ, அவர்கள் விபச்சாரம் புரியும் போது பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதுகிறார் பீஜே அவர்கள்).

கடைசியாக, இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று மறைமுகமாக பைபிள் சொல்கிறது என்று சொன்னதால் பீஜே அவர்கள் "திருத்திச் சொல்வதில் மன்னர்"என்ற பட்டத்தை பெற்றுவிட்டார் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.

ஆனால், பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாமிய நபி முஹம்மது விபச்சாரம் செய்தார், கற்பழித்தார், இது உண்மை - இல்லை என்று மறுப்பவர்கள் எப்படி என்று என்னிடம் கேளுங்கள், நான் பதில் தருகிறேன், உங்கள் இஸ்லாமிய நூல்களாகிய குர்‍ஆன், ஹதீஸ்கள், அவரது வாழ்க்கை வரலாறு, இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகள் இவைகளைக் கொண்டே நான் நிருபிக்கிறேன்.

இயேசு விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதா? எங்கே கண்டுபிடித்தீர்கள்? எப்படி கண்டுபிடித்தீர்கள்?

இயேசு முஹம்மதுவைப் போல ஒரு பாவி அல்ல, அவர் ஒரு பரிசுத்தர்:

முஹம்மது ஒரு பாவியாவார், அவர் பாவ மன்னிப்பு கோரியுள்ளார், அவர் பாவ மன்னிப்பு கேட்கும்படி அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லியுள்ளார், முஹம்மது நம்மைப்போல ஒரு பாவம் செய்யும் மனிதர் தான் என்பதை குர்‍ஆனிலிருந்து விளக்கியுள்ள கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி


ஆனால், இயேசு பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை, "என்னில் பாவமுண்டு என்று உங்களில் யார் கூறமுடியும்?" என்று அவர் யூதர்களிடம் கேட்டபோது ஒருவரும் அவருக்கு எதிராக விரலை நீட்டவில்லை. சரி, இதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் காணலாம். இப்போது நான் பீஜே அவர்களிடம் கேட்க விரும்புவது, நானும் உன்னை தண்டிப்பதில்லை என்று இயேசு சொன்னது,அவரும் விபச்சாரம் செய்துள்ளார் என்று அவருக்கு தெரிந்ததினால் தான் இப்படி சொன்னார் என்று பொருள் கொள்வீர்களா பீஜே அவர்களே?

இதுவரையில் பைபிளை படிக்கும் யாருக்கும் வராத ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துள்ளது, இது போற்றத்தக்கது பீஜே அவர்களே. ஆனால்,

முஹம்மது செய்த விபச்சாரம்,

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளுதல்,

பேத்தி வயதில் இருக்கும் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்ய பேசிவிட்டு, 9வயதில் அந்த சிறுமியை (தாத்தா வயதில்) திருமணம் செய்துக்கொண்டது,

மற்றும், போரில் பிடிபட்ட பெண்ணை அன்றே கற்பழித்தது,

கல் நெஞ்சத்துடன் பெண்ணென்றும் பார்க்காமல் கொலை செய்ய கட்டளை பிறப்பித்தது,

இவைகள் எல்லாம் உங்கள் பார்வையில் எப்படி தெரிகின்றது பீஜே அவர்களே!

இந்த விவரங்கள் எல்லாம் இஸ்லாமிய நூல்களில் மறைமுகமாக அல்ல,நேரடியாகவே சொல்லியுள்ளது பீஜே அவர்களே, இவைகள் எல்லாம் முஹம்மது செய்துவிட்டபோதிலும், அவரே உலக மக்கள் பின்பற்றக்கூடிய நல்ல எடுத்துக்காட்டு, வழிகாட்டி என்றுச் சொல்கிறீர்கள்.

நான் உங்களுக்கு சவால் விடுகின்றேன், முஹம்மதுவின் வாழ்க்கை அனைத்தையும் அறிந்த நீங்கள், இயேசுவின் வாழ்க்கை முழுவதும் படித்துப் பார்த்து, எந்த சூழ்நிலையில் இயேசுவை விட முஹம்மது நல்லவராக நடந்துக்கொண்டுள்ளார் என்று கண்டுபிடியுங்கள்.

ஒரு தந்தை தன் மகன் செய்த தவறை மன்னித்துவிட்டு, இனி இப்படியெல்லாம் செய்யாதே என்று சொன்னால், உடனே "அந்த தந்தையும் அதே தவறை செய்துள்ளதால், தான் தண்டிக்கவில்லை" என்று முடிவு செய்துவிடுவீர்களோ!

இயேசு மனிதர்களை குணமாக்கிவிட்டு, கடைசியாக சொல்லும் வார்த்தை எவைகள் என்று உங்களுக்குத் தெரியுமா? "இனி பாவம் செய்யாதே..." என்பதாகும். அதைத் தான் இந்த நிகழ்ச்சியிலும் அவர் செய்தார்.

உங்களுக்கு தெளிவாக புரியும் படி சொல்கிறேன், பைபிள் மறைமுகமாக இயேசு விபச்சாரம் செய்தார் என்றுச் சொல்லவில்லை நேரடியாகவே அவர் பரிசுத்தர் என்றே சொல்கிறது. உங்கள் இஸ்லாமிய அறிவு தான் அப்படி விளக்கமளிக்கிறது.

அப்படியானால், மோசேயின் சட்டத்தின்படி இயேசு ஏன் அப்பெண்ணை தண்டிக்கவில்லை:

பீஜே அவர்கள் கேட்கிறார்கள்: "இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?".

இந்த கேள்வியை கேட்டதிலிருந்து, இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிகின்றது:

முதலாவதாக, பீஜே அவர்களுக்கு முழு பைபிள் பற்றிய அறிவு இல்லை, அல்லது அவருக்கு பைபிளைப் பற்றி முழுவதுமாக தெரியவில்லை.

இரண்டாவதாக, இயேசு பிறந்ததின் நோக்கத்தைப் பற்றி புதிய ஏற்பாடு சொல்வதை பீஜே அறிந்துக்கொள்ளவில்லை, அல்லது அவர் வேண்டுமென்றே,தெரிந்துக்கொண்டே இப்படி பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் என்பதாகும்.

இயேசு இரட்சிக்க வந்தார், தண்டிக்க அல்ல:

பீஜே அவர்களே, உங்களுக்கு சில விவரங்களை தெளிவாக்க விரும்புகிறேன். இயேசுவின் முதல் வருகை மனிதர்களை தண்டிக்க அல்ல, அவர்களை இரட்சிக்க வந்தார். அவர்களுக்காக தன் உயிரை கொடுக்க வந்தார், எனவே தான் அவர் மனிதர்களை குணமாக்கி "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி, அவர்கள் தீய வழியை விட்டுவிட்டு, நல்ல வழியில் நடக்கும் படி அறிவுறுத்தினார்.

இதனை புரிந்துக்கொள்ள பெரிய பட்டங்கள் தேவையில்லை பீஜே அவர்களே, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களில் ஏதாவது ஒன்றை படித்தாலும் போதும் புரிந்துக்கொள்ளலாம்.

இந்த விவரத்திற்கு அனேக வசனங்களை நான் கொடுக்கவிரும்பவில்லை,ஒரே வசனம் போதும்:

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன்வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10

பீஜே அவர்களே, இயேசு தொலைந்துபோனதை தேடவும், பாவிகளை இரட்சிக்கவுமே வந்தாரே தவிர, கற்களை எடுத்துக்கொண்டு பாவிகள் மீது வீசுவதற்கு அல்ல.

இயேசு அந்த பெண்ணை மன்னித்தது போல, உங்களையும் மன்னிக்க விரும்புகிறார், அவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உமக்காக இனி நீதிமானாக வாழ்வேன் என்று வாக்குறுதி கொடுத்து, இயேசு தரும் சமாதானம் சந்தேஷத்தை பெற்றுக்கொள்ளும்படி உங்களுக்கு இன்று நான் அழைப்பு விடுகிறேன்.

முஹம்மது இஸ்லாமுக்கு வரும்படி கொடுத்த அழைப்பைபோல, இஸ்லாமை ஏற்றுக்கொள், நீ பாதுகாப்பாக இருப்பாய் இல்லையானால், என் இராணுவம் உங்கள் நாட்டை வந்தடையும் என்பது போல அல்லாமல், இயேசு உங்களை நேசிக்கிறார்,அவரின் மீது நம்பிக்கை கொண்டு இறைவனின் குமாரனாக மாற உங்களுக்கு ஒரு வாய்ப்பு இந்த வரிகளை படிக்கும்போது தரப்படுகின்றது. பிறகு இந்த வாய்ப்பு தரப்படுமோ தெரியாது, பயன்படுத்திக்கொள்ளவும்.

இப்போது ஒரு கேள்வியை நான் கேட்கட்டும், இயேசுவிடம் அப்பெண்ணை கொண்டு அந்த பரிசேயர்கள் வேதபாரகர்களாகிய யூத மத தலைவர்கள் அப்பெண்ணை தாங்களாகவே கல்லெரிந்து கொல்லவில்லை, அதற்கு பதிலாக ஏன் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்?

காரணம், ரோம அரசாங்கத்தின்படி, யாரையும் கொல்ல யூதர்களுக்கு அதிகாரமில்லை, யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளமுடியாது, எனவே,இயேசுவின் மீது குற்றம் சுமரவேண்டும் என்று நினைத்து அவர்கள் அந்த பெண்ணை கொண்டு வந்தார்கள்.

இயேசு மறுபடியும் வருவார், மன்னிக்க அல்ல, சிட்சிக்க:

இயேசு இன்னொரு முறை வானத்தில் வருவார், அன்று அவர் மன்னிக்கமாட்டார்,தண்டிப்பார், நியாயந்தீர்ப்பார். அப்போது பீஜே அவர்களாகிய நீங்களும், நானும் அவருக்கு முன்பாக நிற்போம், அப்போது அவர் மன்னிக்கின்றவராக அல்ல,சிட்கிக்கின்றவராக நீதியாக நியாயந்தீர்ப்பார். அதுவரை, மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகின்றது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதும், கொள்ளாததும் தனி மனிதனுக்கு இயேசு கொடுத்த உரிமை.

பீஜே அவர்களே, இயேசு ஏன் அப்பெண்ணை தண்டிக்கவில்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள், அவர் இரட்சிக்க வந்தபடியால் அவர் தண்டிக்கவில்லை, இயேசு (ஜீசஸ்) என்பதின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவும்.

முடிவுரை:

பீஜே அவர்களே, உங்களின் வரிகளில் உள்ள தாறுமாறுகளை நான் சொல்லியுள்ளேன், தெளிவுபடுத்தியுள்ளேன். இனியாவது ஏதோ குற்றம்பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவேண்டாம். இனியும், தமிழ் கிறிஸ்தவர்கள் சும்மா உட்கார்ந்துக்கொண்டு, "ஸ்தோத்திரம்" சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள்.

கற்பனையை அதிகமாக பயன்படுத்தவேண்டுமானால், நல்ல விஷயத்தில் பயன்படுத்தவும், இப்படி குறுக்குவழி வேண்டாம் என்று உங்களை தாழ்மையாக எச்சரிக்கிறேன்.

இயேசுவையும், அவரது சீடர்கள் பற்றியும் பொய்யாக எழுதியதற்காக நான் பதில் கொடுத்துவிட்டேன், ஆனால், முஹம்மது பற்றி இனி நான் சொல்லப் போகும் உண்மைகளுக்கு (கட்டுரைகளுக்கு) பதிலை தயாராக வைத்துக் கொள்ளவும்.

உங்களின் "இயேசு இறைமகனா" என்ற புத்தகத்திற்கு பதில்கள் தொடரும்..


http://isakoran.blogspot.com/2010/08/blog-post.html

Wednesday, August 4, 2010

பீஜேவிற்கு மறுப்பு: இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்

 

இயேசு இறைமகனா? புத்தகத்திற்கு மறுப்பு

முன்னுரை: பீஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு மறுப்பாக இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது. இறைக்குமாரர்கள் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களை விட இயேசு எவ்விதம் விசேஷித்தவர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

இந்த புத்தகத்திற்கு அளிக்கப்பட்ட கடைசி இரண்டு மறுப்புக்களை கீழே தரப்பட்டுள்ள தொடுப்புக்களில் காணலாம்.

1. "இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு:இவைகள் அல்லாஹ்வின் குணங்களா? இல்லையா? பீஜே கூறவேண்டும்

2. இயேசு "மனிதன்" என நிருபிக்க நினைத்து "இறைவன்" என நிருபித்த பீஜே


இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்

JESUS IS THE UNIQUE SON OF GOD

ஆசிரியர்: சைலஸ்

அறிமுகம்:

"தேவ குமாரன் (இறைக்குமாரன்)" என்ற சொற்றொடர் பைபிளில் பல முறை வருகிறது. இவ்வார்த்தை பல நபர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த சொற்றொடர் இயேசுவிற்கு பயன்படுத்தப்படும் போது மட்டும், இதற்கு தனிப்பட்ட பொருள் உண்டு. கிறிஸ்து யார்? அவர் எவ்விதம் மற்றவர்களை விட வித்தியாசமானவர், பிதாவாகிய தேவனோடுள்ள அவரது உறவு எப்படிப்பட்டது என்பதை இந்த சொற்றொடர் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.

பைபிளில் அனேகர் "தேவ குமாரர்கள்" என்று அழைக்கப்பட்டு இருப்பதினாலே, இயேசுவும் தன்னை தேவகுமாரன் என்றுச் சொல்லும் போது, அது மற்றவர்களை குறிப்பது போல பொருள் கொள்ளவேண்டும் என்று இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள். அதாவது மற்றவர்களைப் போல, இயேசுவும் இறைக் குமாரன் என்று அழைப்பதற்கு காரணம், அவர் நல்ல செயல்களைச் செய்தார், இறைவனை மகிமைப்படுத்தினார், மற்றும் தாழ்மையுள்ளவராக இருந்தார் இன்னும் பல நற்செயல்களைச் செய்தார். ஆக, நல்ல செயல்கள் செய்யும் மனிதர்களை எப்படி தேவகுமாரர்கள் என்றுச் சொல்கிறோமோ, அது போலவே, இயேசுவும் இந்த வகையில் "தேவகுமாரன்" என்று அழைக்கப்பட்டார் என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்துக் கொண்டுள்ளார்கள். இஸ்லாமிய போதனையின் படியும், இஸ்லாமியர்களின் படியும், இயேசு தேவனின் தனிச்சிறப்பு மிக்க குமாரன் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இஸ்லாமிய விவாதம் புரியும் ஒரு இஸ்லாமியர், யோவான் 10ம் அதிகாரம் பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"இயேசுவும் 'தேவகுமாரன்' என்பதை ஒரு உருவகமாகவே பேசியுள்ளார், இதனை உருவகமாக எடுத்துக்கொள்ளாததினாலே, கிறிஸ்தவ சபை தங்கள் மத அடிப்படையை தகர்த்து இருக்கிறது" [அலி, த ரெலிஜியன் ஆஃப் இஸ்லாம், பக்கம் 40]

இந்த சொற்றொடர் பற்றி பைபிளில் வரும் வசனங்கள் பற்றி நாம் அலசுவதற்கு முன்பாக, ஒரு விவரத்தை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது, இந்த சொற்றொடர் குறிப்பிடப்படும் இடத்தில் வரும் இதர வசனங்களைப் பொருத்து (Context) இதன் அர்த்தம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, உதாரணத்திற்கு:

"சரி, இப்போது நான் சாலையை அடிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று நான் கூறினால், இதன் பொருள் என்ன?
(If I say, "Okay, it's time for me to hit the road", what does that mean?)

அல்லது

நான் எகிப்து நாட்டில் இருக்கும் போது, "நான் இரும்புத் துண்டு மீது உள்ளேன்" என்றுச் சொன்னால், இதன் அர்த்தம் என்ன?
(Or if I were in Egypt, and I said "I'm on a piece of iron", what would that mean?)

நான் கூடைப்பந்து விளையாட்டைப் பற்றி பேசும் போது, மைகேல் ஜோர்டனிடம் "BAD" என்றுச் சொன்னால் இதன் அர்த்தம் என்ன?

ஆக, அனேக நேரங்களில், அவ்வார்த்தை சொல்லப்பட்ட இடம், சூழல் மற்றும் நேரம் போன்றவற்றைப் பொருத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இயேசு தேவனின் "தனிச் சிறப்பான" குமாரன் என்பதற்கான ஆதாரங்கள்:

புதிய ஏற்பாடு, இயேசு, ஒரு "தனிச் சிறப்பான தேவ குமாரன்" என்றுச் சொல்கிறதா? அல்லது இதர மக்களை உருவகமாக கூறுவது போல இவரும் ஒரு "தேவகுமாரன்" என்ற தோரணையில் சொல்கிறதா?

புதிய ஏற்பாட்டில் மிகவும் முக்கியமான மற்றும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் வசனம் யோவான் 3:16 ஆகும். இந்த வசனத்தில் இயேசு தன்னைத் தானே தேவ குமாரன் என்று குறிப்பிடுகின்றார்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

"For God so loved the world that he gave his one and only Son that whosoever believes in him shall not perish but have eternal life." (John 3:16)

இந்த வசனத்தில் "ஒரே பேரான (one and only)" என்ற தமிழ் வார்த்தை கிரேக்க மூல மொழியில் "monogenes" என்ற வார்த்தையாகும். இதன் பொருள் "ஒருவரே பிறந்தார் (only born)" அல்லது "தனிப்பட்ட (sole)" என்பதாகும். "Vine's Expository Dictionary of N.T." என்ற புதிய ஏற்பாட்டு அகராதி, இதன் பொருளை இவ்விதமாக கூறுகிறது, அதாவது "இது ஒரு புகழ்ச்சிக்குரிய மற்றும் ஒருமையைக் குறிக்கும் வார்த்தையாகும்".

"Strong Concordance" என்ற அகராதி கூறும் போது, "Monogenes" என்ற இந்த வார்த்தையில் இரண்டு வார்த்தைகள் உள்ளன, அதாவது "Monos" மற்றும் "ginomai" என்பதாகும். Monos என்றால், ஒரே பேரான (only) என்பதாகும், "ginomai" என்றால், "உருவாக்குதல், பிறத்தல், ஆகுதல், மனிதனாக வருதல்" என்பதாகும்.

இதே வார்த்தை லூக்கா 7:12ல், ஒரு பையனை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது:

"அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்".

இந்த வசனத்திலும், "மோனோஜினஸ்" என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் பொருள் "ஒரே பேரான (only)" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதே போல, லூக்கா 9:38ம் வசனத்திலும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.

இயேசுவிற்கு கீழ்கண்ட வசனத்திலும் "மோனோஜினஸ்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:

யோவான் 1:14 - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

ஒரு நிமிடம் யோவான் என்ன சொல்கின்றார் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இயேசுவின் மகியையும், மாட்சிமையையும் யோவான் எவ்விதம் குறிப்பிடுகின்றார் என்பதை கவனியுங்கள். இப்படிப்பட்ட ஒரு புகழ்ச்சி ஆதாமுக்கு கிடைக்கவில்லை. தாவீதும் புகழப்பட்டாரே ஒழிய ஆனால், இயேசு புகழப்பட்டது போல இந்த அளவிற்கு அவர் புகழப்படவில்லை. இயேசு மட்டுமே இந்த மகிமையும், புகழ்ச்சியும் பெற்றார். மேலும், "Vine's Expository Dictionary of N.T." இந்த வசனம் பற்றி கூறும் போது, இந்த கிரேக்க வசனம் இயேசுவிற்கு சூட்டிய இந்த மகிமை அவருக்கு தேவனோடுள்ள தனிச்சிறப்பான உறவுமுறையை குறிக்கிறது என்கிறது.

யோவான் 1:18 "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்".

இங்கு, இயேசு தேவனின் தன்னிகரற்ற குமாரராக இருந்து, பிதாவின் மடியில் (Father's side) இருப்பதாக வெளிப்படுத்தப்படுகிறார். தேவனின் குமாரன் என்று அழைக்கப்பட்ட வேறு யாரும் இப்படி பிதாவின் மடியில் இருப்பதாக வெளிப்படுத்தப்படவில்லை.

இதே போல, யோவான் 3:18 மற்றும் 1 யோவான் 4:9ம் வசனங்களிலும் "மோனோஜின்ஸ்" என்ற வார்த்தை இயேசுவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் படி, எப்போதெல்லாம் இயேசு தேவகுமாரன் என்று அழைக்கப்படுகின்றாரோ அப்போதெல்லாம், அவர் தேவனின் தன்னிகரற்ற குமாரன் என்று பொருளாகும். தேவ குமாரன் என்ற முறையில் "மோனோஜின்ஸ்" என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

2) எபிரேயர் முதல் அதிகாரம் உண்மையில் இயேசு யார் என்பதை விளக்குகிறது. இந்த முழு அதிகாரமும் இயேசுவின் தெய்வீகத் தன்மையை விளக்குகிறது, உதாரணத்திற்கு வசனம் 3ஐ கூறலாம்.

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்.

"The Son is the radiance of God's glory and the exact representation of his being, sustaining all things by his powerful word. After he had provided purification for sins, he sat down at the right hand of the Majesty in heaven." (Hebrew 1:3)

3) இயேசு பிலாத்துவிற்கு முன்பு கொண்டு வரப்பட்டபோது, யூதர்கள் இவ்விதமாக கூறினார்கள்:

"யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்." (யோவான் 19:7)

இயேசு வெறும் உருவகமாக தன்னை தேவகுமாரன் என்று கூறியிருந்தால், யூதர்கள் அவரை "தேவதூஷணம் சொன்னான்" என்றுச் சொல்லி குற்றப்படுத்தி இருக்கமாட்டார்கள் [தேவதூஷணத்திற்கு தண்டனை மரணதண்டனையாகும், பார்க்க லேவியராகமம் 24:16]. யூதர்களுக்கு சங்கீதம் 82:6ம் வசனம் பற்றி நன்றாகத் தெரியும். ஒருவன் உருவகமாக தன்னை தேவனின் குமாரன் என்றுச் சொன்னால், யூதர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவனை அவர்கள் தொந்தரவு செய்யமாட்டார்கள். யூதர்கள் ஏன் இயேசு மீது குற்றம் சுமத்தினார்கள் என்று கவனித்தால், அவர் தன்னை தன்னிகரற்ற, நித்திய தேவனின் குமாரன் என்று சொன்னதினால் தான் அவர்கள் அவருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.

4) இயேசு மறுபடியும் தன்னை தேவகுமாரன் என்று கூறுகிறார், மற்றும் இதன் மூலம் தன்னுடைய தன்னிகரற்ற குமாரத்துவத்தை வெளிப்படுத்தினார், மத்தேயு 11:27:

சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

கிறிஸ்து, யோவான் 5:22ல் தன்னை தேவனுடைய குமாரன் என்று மறுபடியும் கூறுகிறார், மற்றும் கீழ்கண்டவாறு விளக்குகிறார்:

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

5) இயேசு, மத்தேயு 21:33-43ம் வசனங்களில், குத்தகைக்காரன் பற்றிய ஒரு உவமையை கூறினார். இந்த உவமையில் அந்த தோட்டத்தின் எஜமான் கடைசியாக தன் மகனை அந்த குத்தகைக்காரனிடம் அனுப்பி, தனக்கு வரவேண்டிய பாகத்தை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்புகிறார். அந்த குத்தகைக்காரனும் அவனது வேலைக்காரர்களும், இந்த எஜமான் அனுப்பிய அனேக வேலைக்காரர்களை தாக்கி சிலரை கொன்று விடுகின்றனர். கடைசியாக, அந்த எஜமானின் மகன் வந்த போது, அவனையும் கொன்றுவிடுகின்றனர்.

இந்த உவமையின் பொருள் என்னவென்றால், தேவன் அனேக தீர்க்கதரிசிகளை இஸ்ரவேல் மக்களிடத்தில் அனுப்பினார், இஸ்ரவேல் மக்கள் நீதியின் கனிகளை தரும்படி அழைக்க வேண்டி தீர்க்கதரிசிகள் வந்தார்கள். ஆனால், வந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் தாக்கி, அவமானப்படுத்தினார்கள். கடைசியாக, தேவன் தன் குமாரராகிய கிறிஸ்துவை அனுப்பினார், அவரையும் யூதர்கள் கொன்றார்கள். இந்த உவமையின் மூலமாக, இயேசு தன் எதிர்கால சிலுவை மரணத்தைப் பற்றி கூறினார்.

இந்த உவமையில் கூறப்பட்ட விவரத்தை கவனமாக பாருங்கள். அந்த எஜமானனுக்கு இருந்த இதர வேலைக்காரர்களை விட வித்தியாசமான உறவை இயேசு கொண்டுள்ளவர் என்பதைக் காட்ட தன்னை "குமாரன்" என்று கூறினார். இந்த உவமையின் படி, அந்த எஜமான அனுப்பிய வேலைக்காரர்கள் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள், ஆனால், கடைசியாக‌ வந்தவர் "மகனாக" இருந்தார்.

இயேசு தன்னிகரற்ற தேவகுமாரன் என்பதை புதிய ஏற்பாட்டில் இன்னும் அனேக வசனங்கள் உண்டு. இயேசு தேவனின் தன்னிகரற்ற குமாரன் என்பதை நிருபிப்பதற்கு மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டு வசனங்களே போதும்.

தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் வசனங்கள்:

இங்கு, இஸ்லாமியர்கள் தங்கள் பொதுவான வாதங்களுக்கு ஆதாரமாக பயன்படுத்தும் வசனங்களை இங்கு பார்ப்போம். [இஸ்லாமியர்களின் கேள்விகளும், எனது பதில்களும் கீழே தரப்படுகிறது].

கேள்வி 1: இயேசு "மனுஷ குமாரன்" என்று அழைக்கப்பட்டார். இதன் பொருள் அவர் ஒரு வெறும் மனிதன் என்பதாகும். இயேசுவும் தன்னை அடிக்கடி "மனுஷ குமாரன்" என்று அழைத்துக்கொண்டார் (உதாரணத்திற்கு மத்தேயு 8:20).

பதில் 1: "மனுஷ குமாரன்" என்ற சொற்றொடர், தானியேல் 7:13ம் வசனத்தில் சுட்டிக்காட்டப்படும் "மனுஷ குமாரன்" என்ற மேசியாவை (மஸிஹாவை) குறிப்பதாகும். குர்‍ஆன் கூட இயேசுவை மஸிஹா என்று அழைக்கிறது (குர்‍ஆன் 3:45 ஐ பார்க்கவும்).

கேள்வி 2: பலர் தேவனின் குமாரர்கள் என்று இயேசு கூட சொல்லியுள்ளார்:

யோவான் 10:34-36ம் வசனங்களில், இயேசு இவ்விதமாக கூறினார்: "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?" (பார்க்க சங்கீதம் 82:6). தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?


ப‌தில் 2: பழைய ஏற்பாடு, மக்களை தேவர்கள் அல்லது தேவ குமாரர்கள் என்றுச் சொல்வது அவர்கள் தேவனுடைய பிரதிநிதியாக இருக்கிறார்கள் என்பதால் தான் என்று இயேசு இங்கு குறிப்பிடுகிறார். இந்த இடத்தில், இயேசு தன்னையும் சேர்த்து தான் இப்படி உருவகமாக "தேவனுடைய குமாரர்" என்றுச் சொல்கிறார் என்று இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். ஆனால், இயேசு தன்னைப் பற்றி பேசும் போது, தனக்கும் பிதாவிற்கும் இடையே இருக்கும் உறவுமுறையைப் பற்றி பேசும் போது, அவரது தனித்தன்மை வாய்ந்த "குமாரத்துவம்", உருவகமாக சொல்லும் குமாரத்துவத்தைக் காட்டிலும் உயர்ந்தது, சிறந்தது என்று கூறுகிறார்.

கேள்வி 3: அனேகர் தேவனின் சேஷ்டபுத்திரர்கள் (மூத்த குமாரர்கள்) என்று அழைப்பட்டுள்ளார்கள். இதே நிலையில் தான் இயேசுவும் அழைக்கப்பட்டார் என்று நாம் கருதலாம் அல்லவா?

பதில் 3: ஒருவரை சேஷ்டபுத்திரன் என்று அழைத்தால், அதில் அனேக விவரங்கள் உள்ளடங்குகின்றன. யூத சட்டத்தின் படி ஒருவர் " சேஷ்டபுத்திரன் (மூத்த மகன்)" என்று அழைத்தால், அவனுக்கு பரம்பரை சொத்தில் சிறப்பான பாகம் கிடைக்கும், அதாவது மற்ற மகன்களுக்கு கிடைக்கும் பாகத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமான சொத்து கிடைக்கும். அதே போல, தன் தந்தை இல்லாத காலங்களில் அல்லது மரணித்த பிறகு, அந்த குடும்பம் அனைத்திற்கும் இந்த மூத்த மகனே ஒரு ஆசாரியனாக (ஆன்மீக தலைவனாக) செயல்படுவான் (இந்த முறை லேவி என்ற வம்சத்திற்கு ஆசாரியத்துவம் (தேவாலய வேலைகள் செய்ய அனுமதி) கொடுத்த பிறகு, நிறுத்தப்பட்டுவிட்டது.)

பழைய ஏற்பாட்டில் "மூத்த குமாரன்" என்பது உருவகமாக கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 14:30ம் வசனத்தில் வரும் "தரித்திரரின் தலைப்பிள்ளைகள்" என்ற சொற்றொடர், யாரை குறிக்கிறது? இது ஏழைகள் எல்லாரிலும் அதிக ஏழையாக இருக்கும் நபர்களைக் குறிக்கிறது. யோபு 18:13ம் வசனத்தில் "மரணத்தின் மூத்தமகன்" என்றுச் சொல்வது, எதனை குறிக்கிறது? அது யோபுவிற்கு வந்த அந்த பயங்கரமான வியாதியைக் குறிக்கிறது. (தமிழாக்கத்தில் இந்த வியாதியை பயங்கரமான மரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது). இந்த இடத்தில், இந்த சொற்றொடர் சொல்லப்பட்ட இடத்தையும், சூழ்நிலையையும் பொருத்து அர்த்தம் மாறுகிறது என்பதை கவனிக்கவும்.

இயேசு "சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் - First born over all creation" என்று அழைக்கப்படுகிறார் (கொலோசெயர் 1:15). இந்த அதிகாரம் அனைத்திலும், இயேசுவின் முக்கியத்தும், அவரின் ஆதிகால மேன்மை மற்றும் எல்லா படைப்பிற்கும் மேலுள்ள சர்வாதிகாரம் போன்றவைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன‌, ஏனென்றால், எல்லா படைப்பும் அவர் மூலமாக உண்டானது (பார்க்க வசனம் 16).

கேள்வி 4: யாத்திராகமம் 4:22,23 - "அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்".

இந்த‌ வ‌சன‌ங்க‌ள், இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் கூட‌ தேவ‌னின் "சேஷ்ட (மூத்த‌) குமார‌ர்க‌ள்" என்று சொல்வ‌தாக‌ தெரிய‌வில்லையா?


ப‌தில் 4: தேவ‌ன் இஸ்ரேல் ம‌க்க‌ளை த‌ன்னுடைய‌ சேஷ்ட‌ புத்திர‌ர்க‌ள் என்று கூறுகிறார், ஏனென்றால், அவ‌ர்க‌ள் தேவ‌னால் தெரிந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஜ‌ன‌ங்க‌ள் என்ப‌தினால் தான். ஆபிரகாமின் சந்ததிகளை குறித்து தேவ‌ன் வாக்கு செய்தார், அந்த‌ ச‌ந்த‌திக‌ளை எகிப்திலிருந்து விடுத‌லை அளிப்ப‌த‌ற்கு அனேக‌ அற்புத‌ங்க‌ளைச் செய்துக்காட்டினார், ம‌ற்றும் இஸ்ர‌வேல் என்ற‌ புதிய‌ நாட்டை உருவாக்கி த‌ன் மூத்த‌ குமார‌னாகிய‌ இஸ்ர‌வேலுக்கு அளித்தார்.

மேலும் விளக்கத்திற்கு ஓசியா 11:1ம் வசனத்தை கவனிக்கவும், "இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்".

இந்த வசனத்தில் இஸ்ரவேல் நாட்டை தன் குமாரன் என்று அழைக்கிறார். இதே போல அனேக வசனங்கள் உண்டு. இந்த இடத்தில், தனக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவுமுறையை உருவகமாக கூறுகிறார்.

கேள்வி 5: 2 சாமுவேல் 7:14 - "நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்;" இந்த வசனத்தில் தேவன், நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இயேசுவும் இதே நிலையில் வருகிறார் அல்லவா? அதாவது ஒருவர் தேவனின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் இருந்தால், அவர் தேவனின் குமாரன் என்று அழைப்படலாம் அல்லவா?

பதில் 5: இந்த வசனம் இடம்பெற்ற அனைத்து வசனங்களையும் படிக்கவும். பதினோராவது வசனத்திலிருந்து பதினேழாவது வசனம் வரை படித்துப்பாருங்கள். தேவன் "நான் பிதாவாக இருப்பேன்" என்றுச் சொல்கிறார், அப்படியானால், குமாரன் யார்? இந்த மொத்த வசனங்களையும் படிக்கும்போது, "குமாரன்" என்பது தாவீதுக்கு வரப்போகும் காலங்களில் பிறக்கும் வம்சத்தைக் குறிக்கிறது. இந்த வார்த்தைகள் சொல்லப்படும் போது, சாலோமோன் இன்னும் பிறக்கவில்லை, அதாவது அவர் கர்ப்பத்திலும் இல்லை. எல்லா வசனங்களையும் பார்க்கும்போது, சாலோமோன் மட்டுமல்ல, தாவீதின் சந்ததியில் பிறக்கும் அனைத்து ஆட்சி செய்யும் நபர்கள் அனைவரும் தேவனின் குமாரர்கள் தான். அதாவது, இந்த வசனங்களில் அவர் கொடுப்பேன் என்றுச் சொன்ன தண்டனைகள் அனைத்தும், சாலொமோனுக்கு மட்டுமல்ல, அவனுக்கு பின்பாக வரும் அனைத்து தாவீதின் வம்ச அரசர்களுக்கும் தான்.

தேவன் தாவீதோடு ஒரு தனிப்பட்ட வாக்குறுதியை செய்தார், இந்த வாக்குறுதியை தாவீதின் வம்சங்களோடு நிலை நிறுத்துவேன் என்று கூறினார். இந்த இடத்திலும்,அவர் உருவகமாக தாவீதின் அனைத்து வம்ச மக்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டதாக, உறவுமுறையை கொண்டுள்ளதாக கூறிகிறார் (இதன் விளக்கத்தை இங்கு படிக்கவும் - சங்கீதம் 89:26-37).

இயேசுவும் தாவீதின் வம்சத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி 6: 1 நாளாகமம் 22:10 - "அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; ..."

இந்த வசனத்தில் கூறப்பட்டது போல, இயேசுவிற்கும் இது பொருந்துமல்லவா? அதாவது தேவனின் பாதுகாப்பு மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் இருப்பவர்கள் தேவனுக்கு குமாரர்களாக தனிப்பட்ட உறவுமுறையை உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? இயேசுவும் இதே போல தனிப்பட்ட உறவுமுறையைக் கொண்ட ஒரு நபி அல்லவா?


பதில் 6: இந்த வசனம் 2 சாமுவேல் 7:14ம் வசனத்தோடு சம்மந்தப்பட்டது. இதில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பிட்டு சாலொமோனுக்கு (தாவீதின் குமாரன்) சொல்லப்பட்டது. ஒன்பதாம் வசனத்தின் கடைசி பாகத்தை பார்க்கும் போது, "அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்" என்று தேவன் குறிப்பிட்டு சாலொமோனின் ஆட்சி காலத்தை குறித்துச் சொல்கிறார்.

இந்த வசனம் குறிப்பிடும் சூழ்நிலையை கவனித்தால், இது சாலொமோனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் உறவுமுறையைக் குறிப்பிடுகிறது. சாலொமோன் தாவீதின் குமாரன், மற்றும் சீக்கிரமாகவே இஸ்ரவேலுக்கு இராஜாவாக மாறப்போகிறார். அடுத்த வசனத்தை (11) பார்க்கும்போது, தாவீது சாலொமோனை குமாரன் என்று அழைக்கிறார். மகன் என்ற சொல்லின் அர்த்தம் புரியவேண்டுமானால், அந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை பார்க்கவேண்டும்.

கேள்வி 7: எரேமியா 31:9 - "...இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்".

இந்த வசனத்தில் யாக்கோபு (இஸ்ரவேல்) மற்றும் எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரன் என்று அழைக்கப்படுகின்றார்கள். இரண்டு பேர் எப்படி சேஷ்ட புத்திரராக இருக்கமுடியும், மற்றும் இயேசு மூன்றாவது சேஷ்டபுத்திரரா?


பதில் 7: முதலில், தேவன் இஸ்ரவேலுக்கு பிதாவாக இருக்கிறேன் என்றார். இந்த இடத்திலே எப்பிராயீம் இஸ்ரவேல் நாட்டை குறிக்கிறது. ஏழாம் வசனத்தை பார்க்கும்போது, "யாக்கோபை" இஸ்ரவேல் நாடு என்கிறார். [எப்பிராயீம் (இஸ்ரவேல் நாடு) தேவனோடுள்ள உறவுமுறைக்காக குறிப்பிடப்படுகிறது].

கேள்வி 8: சங்கீதம் 2:7 - இந்த சங்கீதத்தில் தாவீது தன்னை தேவன் பெற்றார் (ஜெநிப்பித்தார்) என்றுச் சொல்கிறார். தாவீதைப்போல, இயேசுவும் தேவன் ஜெநிப்பிக்கப்பட்ட இன்னொரு குமாரன் என்று ஏன் கருதக்கூடாது.

பதில் 8: இந்த சங்கீதத்தில் அனேக தத்துவங்கள் அடங்கியுள்ளன. தேவன் தாவீதை குமாரன் என்று அழைப்பதை புரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அக்காலத்தில் உருவகம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். அக்கால கிழக்கத்திய உறவு முறைகளில், ஒரு பெரிய அரசன் மற்றும் அவனுக்கு கீழாக இருக்கும் குருநில அரசனுக்கும் இடையே இருக்கும் உறவு முறை என்பது, எஜமான் மற்றும் வேலைக்காரன் என்ற உறவுமுறையோடு மட்டும் நின்றுவிடாமல், தந்தை மகன் என்ற உறவுடனும் அழைக்கப்பட்டது. தாவீது, எஜமானனாகிய தேவனின் ஊழியக்காரன் மற்றும் அதே நேரத்தில் தேவனின் "மகன்" ஆவார். இதனை 2 சாமுவேல் மற்றும் 1 நாளாகத்தில் நாம் காணலாம்.

கேள்வி 9: இயேசுவிற்கு உலகப்படியான தந்தை இல்லை, ஆகையால் அவர் இறைக்குமாரன் என்றுச் சொன்னால், ஏன் ஆதாமையும் நாம் இறைக்குமாரன் என்றுச் சொல்லக்கூடாது?

பதில் 9: லூக்கா 3:38ன் படி, ஆதாம் தேவனின் குமாரன் என்று அழைக்கப்பட்டார். தேவன் படைத்த முதல் மனிதன் ஆதாம் என்று எங்களுக்குத் தெரியும் (ஆதியாகமம் 5:1). ஆதாம் தேவன் படைத்த முதல் மனிதனாக இருந்ததினாலே அவரை உருவகமாக தேவனின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார். உபாகமம் 32:6ம் வசனத்தில் இந்த விவரம் தெளிவாக்கப்பட்டுள்ளது, இந்த இடத்தில் தான் படைத்த தேவன் பிதாவாக சித்தரிக்கப்படுகிறார்.

ஆதாமுக்கும் இயேசுவிற்கும் அனேக வித்தியாசங்கள் உண்டு, அவைகளில் ஒன்று, ஆதாம் பாவியாக இருந்தார், ஆனால், இயேசு பாவம் செய்யவில்லை. ஆதாம் படைக்கப்பட்டார் ஆனால், இயேசு தன்னைப் பற்றி கூறும் போது: "உலகம் உண்டாவதற்கு முன்பே தான் இருப்பதாக கூறினார்" (யோவான் 17:5). இன்னும் அனேக வித்தியாசங்கள் உண்டு. இயேசு ஆதாமைப் போல அல்லாமல் அவர் பலவகைகளில் வித்தியாசமானவர்.

கேள்வி 10: எபிரேயர் 7:3ஐ பற்றி என்ன கூறுகிறீர்கள்? - "இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், ...." என்று மெல்கிசேதேக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், இயேசுவும் மெல்கிசேதேக்கைப் போல ஒரு தேவகுமாரனாக ஏன் இருக்கமுடியாது.

பதில் 10: மெல்கிசேதேக்கு பற்றிய இந்த விவரங்கள் மிகவும் முக்கியமானவைகளாகும். மெல்கிசேதேக்கு என்பவர் யார் என்பதைப் பற்றிய அனேக விளக்கங்கள் உள்ளன, ஆனால், எல்லா விளக்கங்களும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவதில்லை. பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட மெல்கிசேதேக்கு கிறிஸ்து தான் என்று சிலர் கூறுகின்றனர், இன்னும் சிலர் அவர் தேவனால் படைக்கப்பட்ட சிறப்புமிக்க ஒரு நபர் என்று கூறுகிறார்கள். பைபிளில் மெல்கிசேதேக்கு உண்மையில் யார் என்று அறிய அதிகமான விவரங்கள் இல்லை. ஆகையால், நான் கீழ்கண்ட‌ முடிவிற்கு வருகிறேன்.

என்னுடைய கருத்தின் படி, அவர் முழுமையான ஒரு மனிதனாக இருந்தார், பிறந்தார் வாழ்ந்தார் மற்றும் மரித்தார் என்பதாகும். எபிரேய நிருப ஆக்கியோன், "இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்" என்று சொல்லும் போது, மெல்கிசேதேக்கைப் பற்றி இரண்டு வகையான விவரங்களைச் சொல்கிறார்.

1) இவரைப் பற்றிய வம்ச வரலாற்று விவரங்கள் அல்லது பின்னணி விவரங்கள் எதுவும் தரப்படவில்லை.

2) இவரது ஆசாரியத்துவம் நிரந்தரமானது. எபிரேய நிருபம், மெல்கிசேதேக்கு என்பவர் ஒரு தெய்வீக அழிவில்லாத மனிதர்/அரசர்/ஆசாரியர் என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக பழைய ஏற்பாட்டில் வரும் அனேக முக்கியமான் நபர்கள் பற்றிய பின்னணி விவரங்கள், வம்சா வழி விவரங்கள் தரப்படுவது போல, இவருக்கு தரப்படவில்லை என்பதைச் சொல்கிறது.

கடைசியாக, இயேசுவின் ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கைப் போல நிரந்தரமானவது என்பதை எபிரேய நிருபம் சொல்கிறது.

இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், எபிரேய நிருபத்தின் ஆசிரியர், இயேசுவின் தெய்வீகத் தன்மையையும், அவர் உண்மையாக யாராக இருக்கிறார் என்பதை நிருபிப்பதற்காகவே இந்த நிருபத்தை எழுதியுள்ளார். எபிரேய நிருபத்தின் சுருக்கம், இயேசுவின் உன்னத்தன்மை மற்றும் தேவனின் கிருபைக்கு மத்தியஸ்தராக இயேசு வெளிப்படல் போன்றவற்றை சொல்கிறது. இந்த நிருபத்தின் முதல் அதிகாரம் இயேசுவின் தனித்தன்மை வாய்ந்த குமாரத்துவத்தைப் பற்றி விவரிக்கிறது. இந்த எபிரேய நிருபம் மற்ற எல்லா மனிதர்கள் மற்றும் தேவதூதர்கள் அனைவரையும்விட இயேசு எவ்விதம் உயர்ந்தவர் சிறந்தவர் என்பதை காட்டுகிறது.

கேள்வி 11: இயேசு உண்மையாகவே தேவகுமாரனாக இருந்தால், ஏன் பிசாசுக்கள் அதைக் குறித்து சொல்லக்கூடாது என்று கட்டளையிட்டார்(லூக்கா 4:41ஐ பார்க்கவும்). இப்படி அவர் கட்டளையிட்டதினால், அவர் தேவகுமாரன் என்பதை மறுக்கிறார் என்பது விளங்குகிறதல்லவா?

பதில் 11: முதலாவதாக, இயேசு எந்த சமயத்திலும் தான் தேவகுமாரன் இல்லை என்று சொல்லவில்லை, அதனை மறுக்கவும் இல்லை. மத்தேயு 26:63,64ம் வசனங்களில், பிரதான ஆசாரியர் கேள்வி கேட்டபோது, அதற்கு இயேசு பதில் இவ்விதமாக அளித்தார்:

".... அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; ..." என்று கூறினார்.

யோவான் 3:16ல், இயேசு தன்னைத் தானே ஒரு தனிச்சிறப்பு மிக்க குமாரன் என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவதாக, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை பிசாசுக்களும் அறிந்திருந்தன. அவைகள் அவருக்கு கீழ்படிந்தன (மாற்கு 1:25).

மூன்றாவதாக, இந்த நிகழ்ச்சி, இயேசு செய்த ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் நடைபெற்றது. இயேசு தன்னுடைய நற்செயல்கள் மூலமாக தான் உண்மையான மேசியா (மஸிஹா) என்பதை நிலைநாட்ட விரும்பினார். அந்த சமயத்தில் யூதர்கள் தங்களை ரோமர்களின் ஆட்சியிலிருந்து விடுதலையாக்க மேசியா வர காத்திருந்தனர். ஆனால், இதனை இயேசு செய்யப்போவதில்லை (இராணுவத்தின் மூலம் இரட்சிப்பை யூதர்களுக்கு தரப்போவதில்லை). ஆனால், அதற்கு பதிலாக தன்னுடைய நற்செயல்கள் மற்றும் அற்புதங்கள் மூலமாக தான் மேசியா என்பதை சாதாரண மக்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்பினார். நற்செயல்கள் மூலமாகத் தான் மேசியா அறியப்படவேண்டும். இப்படிப்பட்ட ஆரம்பகால ஊழியத்தின் நேரத்தில் பிசாசுக்கள் சத்தமிட்டு, இவர் தான் தேவகுமாரன் என்று அறிக்கையிட அவர் விரும்பவில்லை. ஆனால், இதே நேரத்திலும், இயேசு தன் சீடர்களுடன் தனிமையாக பேசும் போதும், மற்றும் சத்தியத்தை அறியவேண்டும் என்று விரும்புகின்ற தனிமனிதர்களிடத்திலும், தான் தேவகுமாரன் என்பதை அவர் அங்கீகரித்தார், மறுக்கவில்லை (பார்க்க யோவான் 3ம் அதிகாரம்).

அதிகபடியான விவரங்கள்: இயேசு தன்னைத் தானே தேவகுமாரன் என்று சொன்ன வசனங்கள், அல்லது பிதாவினால் "இவர் என் குமாரன்" என்றுச் சொன்ன வசனங்கள்

யோவான் 17:1-5
கவனிக்கவும், இயேசு கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்த விண்ணப்பம் இதுவாகும். உலகம் உண்டாவதற்கு முன்பாக இயேசு தேவனோடு இருந்தார் என்று இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.

யோவான் 5:18-27 இந்த வசனங்களில் இயேசு தான் தேவகுமாரன் என்று 10 முறை கூறுகிறார்.

யோவான் 8:36, யோவான் 10:36 மற்றும் யோவான் 11:4

மத்தேயு 17:5 "இயேசு தன் குமாரன்" என்று தேவன் தாமே இங்கு கூறுகிறார்

மத்தேயு 22:2 இயேசு, தான் "ஒரு இராஜாவின் குமாரன்" என்று உவமையாக கூறுகிறார்.

மத்தேயு 26:63, 64 இயேசு பிலாத்துவிடம் "தான் தேவகுமாரன்" என்று பதில் அளிக்கிறார்.

லூக்கா 3:22 இயேசுவை தேவன் தம்முடைய குமாரன் என்று அழைக்கிறார்.

லூக்கா 1:35 மரியாளிடத்தில் பேசும் போது கூட, தேவ தூதன் "இவர், தேவனுடைய குமாரனாவார்" என்று கூறுகிறார்.

ஒரு எடுத்துக்காட்டு:

நம்முடைய நாடு ஒரு மனிதனால் ஆளப்படுகின்றது, அவரை நாம் ஜனாதிபதி (பிரசிடென்ட்) என்கிறோம். இதே போல, அனேக நிறுவனங்களின் தலைவர்கள் தனி மனிதர்களாக (ஆண்கள் (அ) பெண்கள்) இருக்கிறார்கள், அவர்களையும், நாம் பிரசிடென்ட் என்றே அழைக்கிறோம். இந்த இரண்டு வகையான பிரசிடென்ட்களும் சமமானவர்களா? இல்லை. வெள்ளை மாளிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு நபரைப் பார்த்து பிரசிடென்ட் என்றுச் சொன்னாலும், அதே போல ஒரு நிறுவனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்த்து பிரசிடென்ட் என்றுச் சொன்னாலும் இரண்டும் ஒன்றா? இல்லை. அதாவது எபிசி நிறுவனத்தின் பிரசிடென்ட்க்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரசிடென்ட்க்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதா? ஆம் என்பது தான் பதில்.

இதே போலத்தான், "தேவ குமாரன்" என்று பலருக்கு பைபிள் சூட்டும் போதும், "தேவகுமாரன்" என்று இயேசுவை அழைக்கும் போதும், மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

முடிவுரை:

பைபிள் அனேகரை தேவக்குமாரர்கள் என்று உருவகமாக அழைப்பது உண்மை தான். ஆனால், இதே பொருளில் இயேசுவையும் அழைக்கிறது என்று கருதுவது தவறாகும். வேத வசனங்களின் அடிப்படையில், உருவகமாக தேவகுமாரன் என்று மற்றவர்களை அழைப்பதற்கும், அதே போல இயேசுவை தேவகுமாரன் என்று அழைப்பதற்கும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள உயரத்தின் அளவிற்கு வித்தியாசம் உள்ளது. இயேசுவை தேவகுமாரன் என்று பைபிள் அழைப்பது போல, வேறுஒருவரையும் பைபிள் இப்படி அழைப்பதில்லை.

ஆங்கில மூலம்: JESUS IS THE UNIQUE SON OF GOD

சைலஸ் அவர்களின் இதர கட்டுரைகள்

Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/silas/sonofgod.html


 



--
7/26/2010 11:19:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்