இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Thursday, November 20, 2008

வாலித் சாட்சி - ஒரு எலியைக் கூட கொல்ல கூட மனது வராது,,ஆனால்.. மனிதனை கொல்ல ஆசைப்பட்டேன்.




வாலித் அவர்களின் சாட்சி

 


எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை அதிக‌ மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித் என பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை மௌலத்(Mauled – The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு சூட்டினார். இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு கூறுவதாக அப்பெயர் இருந்தது.

புனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.

அமெரிக்காவின் வாழ்க்கை முறை எங்கே த‌ன‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும் பாதித்துவிடுமோ என‌ அஞ்சிய‌ என‌து த‌ந்தை க‌ருவுற்றிருந்த‌ என‌து தாயாரை அழைத்துக்கொண்டு 1960 ம் ஆண்டு இஸ்ரேல் திரும்பினார். அப்போது அப்ப‌குதி ஜோர்டான் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து பெற்றோர் பெத்ல‌கேம் வந்த‌ போது நான் பிற‌ந்தேன், என‌து த‌ந்தை வேறு வேலைக்கு சென்ற‌தால் குடும்ப‌மாக‌ நாங்க‌ள் ச‌வுதி அரேபியாவுக்குச் சென்றோம். சிறிது கால‌த்துக்குப்பின் புனித‌ பூமிக்கு திரும்பினோம், இம்முறை நாங்க‌ள் சென்ற‌டைந்த‌து பூமியின் தாழ்வான‌ ப‌குதியான‌ ஜெரிக்கோ வாகும்.

 
ஆறு நாள் யுத்தம் நடப்பதற்கு முன்பு ப‌ள்ளிக்கூட‌த்தில் முத‌ன் முத‌லில் நான் ப‌டித்த‌ பாட‌லை என்னால் ம‌ற‌க்க‌ முடியாது. அத‌ன் த‌லைப்பு "அரேபியர் எங்க‌ளுக்கு பிரிய‌மான‌வ‌ர்க‌ள், யூத‌ர்க‌ள் எங்கள் நாய்க‌ள்" என்ப‌தாகும். அப்போதெல்லாம் யூத‌ர்க‌ள் என்றால் யார் என்றெல்லாம் என‌க்கு தெரியாது, ம‌ற்ற‌ பிள்ளைக‌ளோடு சேர்ந்து அத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம் என‌ தெரியாம‌லேயே அப்பாட‌லை ப‌டித்து வ‌ந்தேன்.

 
புனித நகரில் வளர்க்கப்பட்ட நான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த பல யுத்தங்களை கண்டிருக்கிறேன், அதன் மத்தியில் வாழ்ந்தும் வந்திருக்கிறேன். நாங்கள் ஜெரிக்கோவில் வசித்து வந்த போது, முதல் யுத்தமாகிய‌ "ஆறு நாள் யுத்தம் - Six Day War" நடந்தது அந்த யுத்தத்தில் பழைய ஜெருசலேம் நகரையும், மீதமுள்ள பாலஸ்தீனத்தையும் யூதர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு உலகளாவிய அரபியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.
 
 
ஜெருசலேமில் இருந்த அமெரிக்க கவுன்சில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு தான் அப்பகுதியில் வசித்த அமெரிக்கரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்தது. எனது தாயார் அமெரிக்கரானபடியால் எங்களுக்கும் உதவிசெய்ய அவர்கள் முயன்றனர் ஆனால் தேசப்பற்றாளரான எனது தந்தை தனது நாட்டை அதிகமாக நேசித்தபடியால் அந்த உதவியை நிராகரித்து விட்டார். அந்த யுத்தத்தில் நடந்த பல நிகழ்வுகளை எனது நினைவுக்குக் கொண்டுவர இப்போதும் முடிகிறது. இரவு பகலாக ஆறு நாட்கள் பொழிந்த குண்டு மழை, பல வீடுகளையும், கடைகளையும் அரேபியர் கொள்ளையிட்டது, இஸ்ரேலியரின் தாக்குதலுக்கு பயந்து ஜோர்டான் நதியை கடக்க ஓடும் மக்கள் என்று, பல நிகழ்வுகளை கூறலாம்.

 
ஆறு நாட்களில் வெற்றியடைந்த படியால் அந்த யுத்தம் "ஆறு நாள் யுத்தம் - Six Day War" என அழைக்கப்பட்டது, ஏழாவது நாளில் கோரென்(Goren) என்ற யூத ரபி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட பூரிகையை ஜெருசலேமில் உள்ள "கண்ணீரின் சுவர் - Wailing Wall" என்ற சுவரிடம் நின்றுக்கொண்டு முழங்கி வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். ஜெரிக்கோ கோட்டையை யோசுவா(Joshua) என்ற தலைவரின் தலைமையின் கீழ் ஆறு முறை சுற்றி வந்ததையும் ஏழாவது நாள் ஏழுமுறை சுற்றி வந்ததையும், அவ்வாறு சுற்றியபின் ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி பெரிய ஆர்ப்பரிப்போடு ஜெரிக்கோ நகரை கைப்பற்றியதற்கு இணையானது இந்த வெற்றி என யூதர்கள் பெருமைப்பட்டனர். ஜெரிக்கோவில் வாழ்ந்த எனது தந்தைக்கு இது ஜெரிக்கோ சுவர் இடிந்து தன் மேல் விழுந்ததைப் போன்ற அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

 
யுத்த காலத்தில் ஜோர்டான் வானொலி நிலையத்தின் செய்திகளையே எனது தந்தை கேட்டுக் கொண்டிருந்தார், அரேபியர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையே கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அந்தோ பரிதாபம் அவர் தவறான வானொலி நிலையத்தின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். இஸ்ரேலிய வானொலியோ அதற்கு மாறாக தாங்கள் யுத்தத்தில் அடையப்போகும் வெற்றியைப் பற்றி முழங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையோ அரேபியர்களின் செய்தியையே நம்பினார், இஸ்ரேலியர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என நம்பினார்.

 
பின்னர் நாங்கள் பெத்லகேம் நகருக்கு சென்றோம், அங்கு எனது தந்தை எங்களை ஒரு ஆங்கிலிக்கன்‍ லுத்தரன் பள்ளியில்(Anglican-Lutheran school) சேர்த்துவிட்டார். இப்பள்ளியில் ஆங்கிலத்திற்கு நல்ல பாடங்கள் இருக்கின்றன என்பதால் சேர்த்துவிட்டார். நானும் எனது சகோதரன் மற்றும் சகோதரி என மொத்தம் மூன்று பேர் தான் அப்பள்ளியில் இஸ்லாமியராக இருந்தோம். நாங்கள் பாதி அமெரிக்கராக இருந்ததால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை அவ்வப்போது அடிப்பார்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது காரணமாக இருந்தது. பைபிள் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது நான் வகுப்பை விட்டு வெளியே சென்று காத்திருப்பேன். ஒரு நாள் பைபிள் வகுப்புக்கு நான் சென்ற பொது எங்கள் வகுப்பில் இருந்த முரட்டு மாணவன் ஒருவன் என்னோடு சண்டைக்கு வந்தான். இந்த "அரைகுறை அமெரிக்க முஸ்லீம் இங்கு இருக்க வேண்டாம்!" என கத்தினான். இதைக்கண்டு நான் வெளியேற மறுத்தேன். பைபிள் வகுப்பு எடுத்த ஆசிரியை என்னை வகுப்பிலேயே அமருமாறு கூறினார். அப்பள்ளியிலே முதல் முறையாக இஸ்லாமியனான நான் பைபிள் படிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு நான் காரணமானேன். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் நடுவே பைபிளைப் படித்தேன்.

 
அதன் பின்னர் எனது தந்தை என்னை ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்த்துவிட்டார், அங்கு இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றி வளர்ந்தேன். என்றாவது ஒரு நாள் முகமது நபியவர்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின் படி புனித பூமி ஒரு மிக பயங்கரமான யுத்தத்தின் படி மீட்கப்படும் எனவும் யூதர்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்படுவார்கள் என நம்பினேன்.

 
இந்த தீர்க்கதரிசனமானது முகமதுவின் பாரம்பரிய நூலில்(ஹதீஸ்களில்) கூறப்பட்டுள்ளது, அதன்படி :
 
 
"நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்லாமியர்கள் யூத இனத்தை வெற்றி கொள்ளாதவரை சம்பவிக்காது (The day of judgment shall not come to pass until a tribe of Muslims defeat a tribe of Jews.)"

(Narrated by Abu Hurairah, Sahih Muslim, Hadith #6985; Sahih al-Bukhari, Vol. 4, #177)
 
 
எந்த இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என முகமதுவிடம் கேட்டபோது அவர் "ஜெருச‌லேமிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் இது நடைபெறும்" என கூறியுள்ளார்.

 
எனது இளம் பிராயத்தில் எனது தந்தையைப் போலவே நானும் இஸ்லாமிய வாழ்க்கையில் திருப்பப்பட்டு இஸ்லாமிய போதகர்கள் வாயிலாக பயிற்றுவிக்கப்பட்டேன். முகமதுவின் தீர்க்கதரிசனத்தை நம்பி எனது வாழ்க்கையை புனித போர் எனும் ஜிஹாத்துக்கு அர்ப்பணித்தேன், அதாவது ஜிஹாத் மூலமாக வெற்றியடைவது இல்லையேல் உயிர்த்தியாக‌ம் செய்து மரிப்பது. புனிதப்போரின் வாயிலாக உயிர்த்தியாக‌ம் செய்வதன் வாயிலாக மட்டுமே மீட்பை அடைந்து பரலோகம் செல்லமுடியும். ஏனென்றால் அல்லா அவரது தீர்க்கதரிசியான முகமது வாயிலாக குர்‍ஆன் மூலமாக இவ்வாறு அருளியிருக்கிறார்:
 
 
"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்."(குர்‍ஆன் 3:169)
 
 
பள்ளிப் பிராயத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கலகங்களில் ஈடுபடும் போது பெரிய உரைகள், இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்கள் போன்றவற்றை தயாரித்தேன். இதன்மூலமாக கிளர்ச்சி அடையச் செய்யவும் இஸ்ரேலிய படை வீரர்களை கற்களால் தாக்கவும் ஏவப்பட்டனர். "எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை வேண்டாம், எங்கள் ஆன்மாவும், இரத்தமும் விடுதலைக்கே அர்ப்பணிக்கிறோம், அராபத்திற்கே பாலஸ்தீனாவிற்கே அர்ப்பணிக்கிறோம், சியோன்காரர்கள்(இஸ்ரேலியர்கள்) நாசமாய் போகட்டும்" என முழங்கினோம். யூதர்களுக்கு எதிராக போராடுவது இறைவனுக்கு செய்யும் தொண்டு எனவும் இறைவனின் திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றுகிறேன் எனவும் அதிகமாக நம்பினேன். ஏதாவது ஒரு வகையில் இஸ்ரேலிய படையினருக்கு சேதம் வரும்வகையில் திட்டங்களை யோசித்து செயல்படுத்தினேன்.

 
பள்ளிகளிலும் தெருக்களிலும் மற்றும் அரேபியர்கள் அல்-அக்சர்-மசூதி(Al-Masjid Al-Aqsa) என்றுச் சொல்லக்கூடிய‌ ஜெருச‌லேமின் மிகப்புனித இடத்திலும் கூட கலகங்களை தூண்டினேன். எனது பள்ளிப்பிராயத்திலே எந்த ஒரு கலகத்தையும் தூண்டிவிடுவதில் முன்னால் நின்றேன். பலர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் யூதர்களை தாக்கி இஸ்ரேலை விட்டு யூதர்களை துரத்திவிடலாம் என முனைப்போடு செயல்பட்டனர் ஆனால் அவர்களை இஸ்ரேலில் இருந்து வேரறுப்பதற்கு இயலாத காரியமாகவே இருந்தது.

 
எதுவும் என்னை மாற்ற முடியவில்லை, ஒன்று நான் சாக வேண்டும் இல்லையானால் ஏதாவது ஒரு அற்புதம் நடைபெறவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இண்டிஃபடா(Intifada) அல்லது எழுச்சி எனும் போராட்டம் நடக்கும் போது கற்களை கொண்டு தாக்குபவனாகவும், கிள‌ர்ச்சி செய்பவனாகவும் காணப்பட்டேன், உங்களில் பல‌ர் சி என் என்(CNN) போன்ற தொலைக்காட்சியில் என்னைப் போன்றவர்களை பார்த்திருக்கக்கூடும். யூதர்களைப் பொறுத்தவரை நான் ஒரு மோசமான தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டேன். எனது தீவிரவாதத்தின் மூலமாக மற்றவர்களை அச்சுறுத்திய நான் எனது தீவிர மத நம்பிக்கைகளின் மூலமாக நானே அச்சுறுத்தப்பட்டேன் என்பது தான் வியக்கத்தக்க உண்மை.

 
எனது அதி தீவிர செயல்பாடுகள் என்னை பரலோகம் கொண்டுசெல்ல அதிக வாய்ப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இறைவனின் தராசில் எனது நற்செய்கைகள் எனது தீய செய்கைகளை விட அதிகமாக இருந்து எனக்கு பரலோகத்தின் வாசல்களை திறந்துவிடுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. யூதர்களை அழிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்தால் எனது இச்சைகளை பூர்த்தி செய்ய அழகான கண்களையுடைய மகளிர் எனக்கு பரலோகத்தில் கிடைப்பர் என்று உறுதியாக நம்பினேன். எனது தீய செயல்களினால் கோபமடைந்துள்ள அல்லாவை சாந்தப்படுத்த இது உதவும் என எண்ணினேன். எப்படியோ உறுதியாக நான் வெல்லப்போகிறேன் அதற்கு நான் தேர்ந்தெடுத்தது தீவிரவாதமாகும்.

 
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை பெத்லகேமில் உள்ள ஒரு திரையரங்கில் "முனீச் நகரில் 21 நாட்கள் – 21 Days in Munich" என்ற படத்தை அதிக குதூகலத்தோடு ரசித்து பார்த்தோம். அப்படத்தில் முனீச் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனியர் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் ஏறியிருந்த ஹெலிக்காப்டர் மீது வெடிகுண்டுகள் வீசி அவர்களை கொலை செய்தனர். அதைக் கண்டு "அல்லாஹு அக்பர்", அதாவது அல்லா மிகப்பெரியவன் என பொருள்படும்படியாக நாங்கள் முழங்கினோம். வெற்றி பெறும்போது முஸ்லீம்கள் இவ்வாறு சந்தோஷப்படுவர்.

 
இஸ்லாமிய வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து "யூதர்களை வெற்றி கொண்ட பின் அவர்களது பெண்களிடம் முறைகேடாக நடந்து அவர்களைக் கற்பழிக்க‌ எங்களுக்கு உரிமை உள்ளதா?" என்று கேட்பர். அதற்கு ஆசிரியர் "அவர்களுக்கு வேறு வழியில்லை தங்கள் எஜமான்களுக்கு ஆசை நாயகிகளாகவும் (வைப்பாட்டிகளாகவும்) அவர்களது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் தான் அவர்கள் இருக்க முடியும், இது குர்‍ஆனில் விளக்கப்பட்டுள்ளது" என கூறுவார்கள்.
 
 
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்……(குர்‍ஆன் 4:24)
 
 
இன்னுமொரு வசனத்தில் குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:
 
 
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.(குர்‍ஆன் 33:50)
 
 
இந்த வகையில் முகமது பல பெண்களை அதாவது 14 பெண்களை மணம் புரிந்ததும் பல அடிமைப்பெண்களை போரின் வாயிலாக பிடித்துக்கொண்டு தான் வைத்துக்கொண்டதும் எங்களுக்கு பெரிதாகவோ விகற்பமாகவோ தெரியவில்லை. முகமதுவுக்கு எத்தனை மனைவியர் இருந்தனர் என்பது எங்களுக்கு விவாதத்துக்குரிய பொருளாயிருந்தது, எத்தனை மனைவிகள் அவருக்கு இருந்தார்கள் என்று எங்களுக்கு சரியாகத் தெரியாது. தனது வளர்ப்பு மகனின்(Zaid) மனைவியையே அவர் தனக்காக அல்லா சொன்னபடி எடுத்துக்கொண்டார், அதுபோக பல யூதப்பெண்களை அவர்களின் குடும்ப ஆண்களை படுகொலை செய்தபின் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டார்.

 
பாலஸ்தீனர்களின்(எங்களின்) மனதை மாற்ற இஸ்ரேலிய தொலைக்காட்சி இரண்டாம் உலகப்போரின் போது நடந்த யூத படுகொலைகளை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்தது, ஆனால் உணவை கொறித்துக்கொண்டே யூதர்களை படுகொலை செய்யும் ஜெர்மானியரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். யூதர்களை பொறுத்தவரை எனது இதயம் மாறாததாகவும் கடினமாகவுமே இருந்தது, ஏதாவது ஒரு இதய மாற்று சிகிச்சை நடந்தால் தான் மாற முடியும் என்ற நிலை.

 
ஒரு முறை எஷ்தோத்(Eshdod) கடற்கரையில் உள்ள யூத முகாமுக்கு எங்களை அழைத்து சென்றனர், யூத பள்ளி மாணவர்களோடு நாங்கள் கலந்தால் ஒருவேளை எங்கள் மனம் இளகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படிச் செய்தனர். ஆனால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை, யூதர்களோடு பேசிய ஆசிரியர்கள் பரியாசம் செய்யப்பட்டனர்.

 
எனது தாயாரோ வேறு ஒரு கோணத்தில் "தேவ திட்டம்" என்று ஒரு காரியத்தை விளக்கினார்கள். அதாவது பைபிள் தீர்க்கதரிசிகளின் படி யூதர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புதல் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டது அது தான் நிறைவேறியுள்ளது எனவும் கூறினார். "அவரது சித்தத்தின் படி எல்லாம் ஆகும்" என்பது உலகம் பார்க்கும்படியாக நமது சந்ததியில் நடைபெறும் ஒரு நிகழ்வு என விளக்கினார்கள். தற்போது நமது சந்ததியில் நடைபெறும் நிகழ்வுகள் வருங்கால சம்பவங்களுக்கு முன்னோடியாகத்தான் உள்ளன என கூறினார், பல கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றியும் கூறினார்,ஆனால் தீவிர யூத எதிர்ப்பாளனான எனக்கு இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 
ஒரு அமெரிக்க மிஷனரி தம்பதிகளால் ஈர்க்கப்பட்ட எனது தாயார் ரகசியமாக ஞானஸ் நானம் எடுக்க விருப்பினார்கள், பாசி படிந்து இருந்த குளத்தில் ஞானஸ்நானம் எடுக்க எனது தாயார் விரும்பாததால் அந்த மிஷனரி ஜெருசலேம் ஒய்.எம்.சி.ஏ(YMCA) பிரதிநிதிகளிடம் குளம் சுத்தம் செய்யப்பட‌ மன்றாட வேண்டியிருந்தது. அதன் பின்னர் எனது தாயார் ஞானஸ் நானம் எடுத்தார்கள், எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இத்தகவல் தெரியாது.
 
 
பல முறை எனது தாயார் என்னை இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு அழைத்து சென்றார்கள். நான் அகழ்வாராய்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டது அப்போது தான். எனது தாயாரோடு வாதம் செய்யும் போது பலமுறை யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதாகமத்தை திரித்து பாழ்படுத்திவிட்டனர் என கூறுவேன். ஜெருசலேமில் உள்ள வேதாகம சுருள்கள் இருக்கும் இடத்துக்கு(Museum) அழைத்துச்சென்று அங்குள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை எடுத்து அது எவ்வாறு மாறாமல் இருக்கிறது என விளங்கி காட்டினார்கள். வேதாகமம் திரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என கூறினார்கள். இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை.

 
எனது தாயாரை காபிர்(Infidel) என்று இழித்துரைத்ததையும் ஆதிக்க வெறிபிடித்த அமெரிக்கர் எனவும் இயேசுவை இறை மகன் என கூறுகிறார்கள் எனவும் கேவலமாக பேசியிருக்கிறேன். தாக்குதல்களில் உயிரிழக்கும் எண்ணற்ற வாலிபரின் புகைப்படங்களை செய்தித் தாள்களிலிருந்து எடுத்துக்காட்டி, இதற்கு என்ன பதில் என அறை கூவல் விடுத்துள்ளேன். இதற்கும் மேலாக எனது தாயாரை நான் மிகவும் வெறுத்து எனது தந்தையிடம் அவரை விவாகரத்து செய்துவிடுமாறும் வேறு ஒரு நல்ல இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும் பரிந்துரை செய்திருக்கிறேன்.

 
பலமுறை போராட்டங்களில் பங்கு கொள்ளும்போது இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயத்துக்கு உட்பட்டிருக்கிறேன், அந்நேரங்களில் மறுநாள் செய்தித்தாள்களில் நான் உயிர்த்தியாகம் செய்த செய்தி வரும் என்று நான் நினைப்பதுண்டு. ஆறு நாள் யுத்தம், பி.எல்.ஓ கிளர்ச்சி, ஜோர்டானிய கறுப்பு செப்டம்பர் உள் நாட்டு போர், லெபனான் போர்கள், யோம் கிப்புர் யுத்தம் என பல யுத்தங்கள் நடைபெற்ற போது இஸ்ரேலில் இருந்திருக்கிறேன், இவ்வளவு யுத்தங்கள் நடந்தும் இஸ்ரேலை அழிக்க முடியவில்லை ஆனால் அவர்களை ஒரே ஒரு பெரிய யுத்தத்தின் மூலம் அழித்து நிர்மூலமாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

 
இஸ்ரேலிய துருப்புக்களால் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது பெற்றோர் அதிக துக்கமடைந்தனர். எனது தாயார் ஜெருசலேமிலிருந்த அமெரிக்க கவுன்சில் மூலமாக என்னை வெளிக்கொணர முயன்றார்கள். அதிக மன அழுத்தத்தால் அவர்களுக்கு தலை முடி கொட்டத்துவங்கியது. சிறையில் தீவிரவாதம் குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன், வெளியே வந்த போது முன்பைவிட அதிக வெறிபிடித்த அடிப்படைவாதியாக மாறினேன்.

 
உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்த பின் எனது பெற்றோர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பினர். அங்கும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழுக்களின் அரசியல் நடவடிக்கைகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நண்பர்களிடம் நான் விளையாட்டாக இவ்வாறு கூறுவது உண்டு "ஹிட்லரை நான் வெறுக்கிறேன் ஏனென்றால் அவர் வேலையை முழுமையாகச் செய்யவில்லை, இந்த யூத அழிப்பை முழுவதுமாக செய்து முடிக்கவில்லை" என்பேன்.
 
 
ஹிட்லரை கதா நாயகனாகவும் முகமதுவை தீர்க்கதரிசியாகவும் மனதில் வரித்துக்கொண்ட நான் முஸ்லீம் அல்லாதோர் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர், யூதரை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. என்றாவது ஒரு நாள் இஸ்லாமுக்கு இந்த உலகம் முழுவதுமாக அடிபணியும், பல போர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு பெரிய இழப்புகளை சந்தித்த பாலஸ்தீனுக்கு இந்த உலகம் பெரிய அளவில் கடன்பட்டுள்ளது எனவும் நம்பினேன். யூதர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளை கொல்பவர்கள் எனவும் தங்களது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக வேதாகமத்தை கறைபடுத்தி கெடுத்துவிட்டனர் என்று நம்பினேன், இது தான் முஸ்லீம்கள் போதிக்கும் போதனை.

 
எல்லாவற்றுக்கும் மேலாக முகமது தான் உண்மையான தீர்க்கதரிசி எனவும் அவர் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவர் என்று போதித்தார்கள்.

 
நான் அமெரிக்காவில் வசித்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான், ஈராக், குவைத், சிரியா, ஜோர்டான், லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லீம் நாடுகளில் கொல்லப்பட்ட பல முஸ்லீம்களை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை. இது அனைத்துக்கும் யூதர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் ஏதாவது திரித்து கடைசியில் யூதர்களை குற்றவாளிகளாக நிறுத்துவது எங்கள் கடமையாக இருந்தது.

 
ஒரு நாள் ஒரு மனிதனோடு சண்டை யிட்டதில் அவர் கண் பறி போனது அவர் யூதராயிருந்த படியால் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இஸ்லாமிய வரலாற்றை அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. முகமது ஒருமுறை ஒரு யூத கோத்திரத்தை சவுதி அரேபியாவில் இருந்து பிரித்து எடுத்து சிறைப்படுத்தி அவர்களது ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்தார் எனவும் பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டார் என்பதை அறிந்தேன். இஸ்லாமின் போதனைப்படி இந்த உலகம் இஸ்லாமியரான ஒரு கலீஃப் பால் தான் ஆட்சி செய்யப்படவேண்டும் எனவும் இஸ்லாம் என்பது தனி நபரின் நம்பிக்கை மட்டுமல்ல இந்த உலகை சரியான முறையில் ஆட்சிசெய்யும் ஒரு சமூக ஒழுங்குமுறை எனவும் சமாதான முறையில் இவ்வாட்சிமுறையை அமல்படுத்த முடியாவிட்டால் போர் செய்தாவது அனைவரையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதே எனது ஆவலாக இருந்தது. சுமார் ஒரு பில்லியன் இஸ்லாமியர் இந்த உலகத்தில் இருந்ததால் எப்படியாவது இதை அடைந்து விடலாம் என்பது எனது திடமான நம்பிக்கை.

 
நான் உண்மையைச் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் குர்‍ஆனை வாசிக்கும் போதும் பாவங்களுக்காக நரகத்தில் அனுபவிக்கவிருக்கும் தண்டனைகளை எண்ணி நடுங்குவேன். என்னை படைத்தவரை எப்படியாவது அடைந்து எனது தவறுகளுக்காக என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்ச வேண்டும் என்பது எனது ஆவலாக இருந்தது. ஆனால், நான் இதில் தோல்வி அடைந்தேன், என்னால் என் எல்லா தீய மற்றும் நல்ல செயல்களை நியாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரியும், அதாவது என் பாவங்கள் என் நல்ல செயல்களை விட அதிகமாக இருக்கும். எனவே, என் பாவப்பட்ட வாழ்க்கையை என்னை படைத்தவனின் தயவின் மிதும், அன்பின் மீதும் ஆதாரப்பட்டு வாழ்ந்துவந்தேன். என் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வியப்படைவேன். என் மோட்சத்திற்காக மற்றவர்களை கொல்வதை வெறுத்தேன். உண்மையைச் சொன்னால், ஒரு எலியைக் கூட கொல்ல எனக்கு மனது வராது, அப்படியானால், ஒரு யூதனைக் கொள்ள என்னால் எப்படி முடியும்?

 
1992 ம் ஆண்டு கிரான்ட் ஜெப்ரி(Grant R. Jeffrey) எழுதிய‌ "Armageddon, Appointment with Destiny" என்ற‌ புத்த‌க‌த்தை வாசித்து வியந்தேன். அந்த‌ புத்த‌க‌த்தில் இயேசுவை குறித்தும் அவ‌ர‌து பிற‌ப்பு, வாழ்வு, ம‌ர‌ண‌ம், உயிர்த்தெழுத‌ல், இஸ்ரேல் தேசம் நிறுவப்படுதல் போன்ற‌ காரிய‌ங்க‌ளை குறித்து அழ‌காக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ப‌ல‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் பைபிளில் தேவ‌ன் கூறியிருந்த‌ப‌டி நிறைவேறியிருந்த‌ன‌!

 
என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் கோடா கோடியில் ஒருவ‌ரால் தான் வ‌ர‌லாற்றில் 100 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு எதிர்கால‌த்தில் ந‌டைபெற‌ப் போகும் காரிய‌ங்க‌ளை குறித்து தெளிவாக‌ கூற‌முடியும்(What also amazed me was to find out that the chances for a man to predict hundreds of historic events written hundreds and thousands of years before their occurrences are one in zillions ). மேலும் அதில் த‌வ‌றுக‌ளுக்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் அனேக‌மாக‌ இல்லை ஏனெனில் தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ உரைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல காரிய‌ங்க‌ள் என‌து கால‌த்திலேயே நிறைவேறியிருந்த‌ன‌. இது போன்ற‌ உண்மையான‌ காரிய‌ங்க‌ள் தேவ‌னிட‌த்தில் இருந்து மாத்திர‌ம் தான் வ‌ர‌ முடியும்.

 
என‌க்குள் ஒரு போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌து, நான் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ நாட்டில் ப‌ல அக‌ழ்வாராய்ச்சிக‌ள் வாயிலாக‌ பைபிளை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்து வ‌ரும் நிலையில் அது எப்ப‌டி யூத‌ர்க‌ளால் க‌றைப்ப‌டுத்தப்பட்டிருக்க‌ முடியும் என‌ குழ‌ம்பினேன். கும்ரான் என்ற‌ குகையில் முக‌ம‌து தேய்ப் என்ற‌ ஆடு மேய்ப்ப‌வ‌ரால் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஏசாயா தீர்க்க‌த‌ரிசியின் புத்த‌க‌ சுருள் நாம் இன்றைக்கு வைத்திருக்கும் வேத‌ம் போல‌ அப்ப‌டியே அல்ல‌வா இருக்கிற‌து, அதில் இயேசுவின் வ‌ருகையை குறித்து ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பழைய ஏற்பாட்டிற்கு ஒத்திருக்கின்ற‌ன‌வே என‌ விய‌ந்தேன். இயேசு யார் என்ப‌தை இந்த‌ பைபிளை நானே ப‌டித்து தெரிந்துகொள்ள‌ விரும்பினேன். தேவ‌னாகிய‌ கிறிஸ்து இவ்வாறு விள‌ம்பினார்.
 
 
"இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர், நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்" வெளி 1:8
 
 
யூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:
 
 
அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.
 
 
இந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும் இதை போல "நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக இருக்கிறேன் (I am the beginning of all creation and the last prophet)." என்று கூறியிருந்தார்.

 
மேலும் "ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக இருந்தேன்(I was a prophet of Allah while Adam was still being molded in clay)." என‌ கூறுகிறார்.

 
எல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.

 
இந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும் தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள் இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான் மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில் ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும். பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது?

 
உண்மையை க‌ண்டுகொள்ள‌ ஆவ‌லாயிருந்த‌ப‌டியால் ப‌ல‌ இர‌வுக‌ள் குர்‍ஆன் ம‌ற்றும் பைபிள் கூறும் காரிய‌ங்க‌ளை ஒப்பிட்டுப்பார்த்தேன். அப்போது இறைவ‌னிட‌ம் இவ்வாறு பிரார்த்தித்தேன் "இறைவா இந்த‌ பூமி வான‌ம் அனைத்தையும் ப‌டைத்தாய், ஆபிர‌காம், மோசே ம‌ற்றும் யாக்கோபின் தேவ‌னே நீர் தொட‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர், நீர் ஒருவரே உண்மையுள்ளவர், நீர் ஒருவரே சத்தியமுள்ளவர் , நீரே ஒரே ஒரு மெய்யான‌ வேத‌த்தை உருவாக்கினீர். உம‌து ச‌த்திய‌த்தை அறிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருக்கிறேன், என‌து வாழ்வில் உம‌து நோக்க‌த்தை நிறைவேற்ற‌ ஆவ‌லாய் இருக்கிறேன், உம‌து அன்பைப் பெற‌ வாஞ்சிக்கிறேன், ச‌த்திய‌த்தின் பெய‌ராலே ஆமேன்" என‌ பிரார்த்தனை செய்தேன்.

 
என‌க்கு போலியான‌தை வைத்துக்கொள்ள‌ விருப்ப‌மில்லை அத‌னால் பிளாஸ்டிக் போன்ற‌ உல‌க‌ ம‌த‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு உண்மை என‌க்க‌ண்டு கொள்ள‌ எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ உர‌சிப்பார்க்க‌ நினைத்தேன்.

 
குர்‍ஆன் தான் உண்மையான வேதம் என நம்பினேன் ஏனெனில் குர்‍ஆனில் பல விஞ்ஞான தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன எனவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே தேவனால் அருளப்பட்டது என நினைத்தேன். ஒரு மென்பொருளின் வாயிலாக சுமார் ஒரு மாதம் பைபிளில் உள்ள விஞ்ஞான தத்துவங்களை அறிந்து கொள்ள விழைந்தேன். பல இஸ்லாமியரால் குர்‍ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில் இருக்கிறது என கண்டு கொண்டேன். எனது அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று அறிவின் துணையால் குர்‍ஆனில் எவ்வளவு தவறுகள் நிறைந்திருக்கின்றன என கண்டுகொண்டேன். பல உண்மைகளை அறிந்துகொண்ட நான் குர்‍ஆன் ஒரு அற்புதம் என்ற எனது எண்ணம் கேள்விக்குறியானது. பைபிளில் உள்ள அற்புதங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. எசேக்கியல் தீர்க்கனின் 38 ம் அதிகாரத்தை வாசித்த போது எனது அஸ்திபாரமே ஆட்டம் கண்டது. அந்த அதிகாரத்தில் தேவன் அழிக்கப்போவதாக சொன்ன அனைத்து நாடுகளும் இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத்தை அஸ்திபாரமாகக் கொண்டு வளர்ந்து வருபவை என அறிந்தேன்.

 
ஒரு எழுத்து கூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவந்துள்ளன என்பதை தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்‍ஆன் அல்ல ஏன் என்றால் மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்‍ஆன் விளக்குவது இல்லை. அப்போது தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி வந்திருக்கிறேன் என அறிந்து கொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை குர்‍ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன் ஆனால் அது வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன்.

 
இறைவன் பைபிளில் இவ்வாறு கூறுகிறார்:
 
 
"முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம் செய்வேன் என்று சொல்லி," (ஏசாயா 46:9,10)
 
 
தேவன் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தது மட்டுமல்ல அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார் மாறாக குர்‍ஆனில் வன்முறை வாயிலாகத்தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள் நிலை நிறுத்தப்படுகின்றன. பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என நான் கண்டுகொண்டபடியால் பல நாட்கள் பைபிளை ஆராய்ந்தேன். பைபிளில் முகமதுவைப் பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என தேடியும் அவரை பைபிளில் கண்டுபிடிக்க முடியவில்லை. பைபிள் கறைப்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் முகமதுவின் வருகைக்குப்பின் தான் நிகழ்ந்து இருக்கவேண்டும் ஏனென்றால் குர்‍ஆன் பைபிளை பற்றி கூறும்போது அது அவரது கரங்களுக்கு இடப்பட்டிருந்தது என்று கூறுகிறதே. அன்று முதல் இன்று வரை ஒரு இஸ்லாமியராலும் கறைப்படுத்தப்பட்ட ஒரு பைபிளையும் உதாரணமாக காட்டமுடியவில்லை. பைபிளை தவறு என நிரூபிக்க ஒரு வரலாற்று உண்மையோ அல்லது அகழ்வாராய்ச்சி உண்மையையோ இஸ்லாமியர்களால் கொண்டுவரமுடியவில்லை.

 
அவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர் நீத்தார் ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில் உயிர் துறந்தார். இதை போன்ற சவாலிடும் சாட்சியை கேள்விப்படாமல் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே என நினைத்த போது எனக்கு மிகுந்த கவலை உண்டானது. இஸ்லாமியரும் உலகமும் மூன்று மதங்களை இறைவனை வணங்கும் வழிகளாக கண்டிருக்கின்றனர் ஆனால் இறைவன் "தான் ஒருவரே, தனது வார்த்தை ஒன்றே" என்றல்லவா கூறியிருக்கிறார் என யோசித்த போது பிரமிப்பாக இருந்தது. நான் முன்பு குருடனாயிருந்தேன் ஆனால் இப்போது பார்வையடைந்தேன், உண்மையில் நான் காண்கிறேன். ஏனெனில் பல பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன, இஸ்ரேல் என்ற நாடு கிட்டத்தட்ட அதன் கல்லறையில் இருந்து வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர் மற்றும் ஏனைய உலகத்தார் யூதர்களை நோக்கும் பார்வை இந்த உலகம் இறுதி காலத்துக்குள் வந்து விட்டதையே காட்டுகிறது.

 
மனிதன் மாறவேயில்லை, காயீன் தன் சகோதரனான ஆபேலை கொலை செய்தது போல் மனிதன் தன் சகோதரனை கொலை செய்கிறான், ஒரே ஒரு வித்தியாசம், பழைய முறைப்படி தலையை வெட்டியோ அல்லது கத்தியால் குத்தியோ கொலை செய்வதில்லை, மாறாக கிருமிகளை அழிப்பது போல இரசாயன ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கிறான், மனித வாழ்வு அற்பமான ஒன்றாக மாறிவிட்டது. பாவம் தான் மனிதனின் பிரச்சனை, பிசாசு தான் மனுக்குலத்தின் எதிரியேயன்றி 50 ஆண்டுகளுக்கு முன் ஹிட்ல‌ரால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ 6 மில்லியன் யூதர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை ஹிட்லரைப் போல அல்லது ஒரு மெஹ்தி அல்லது கலீப்பை போல யாராவது தற்காலத்தில் பதவியில் அமர்ந்தால் என்ன வாகும் என யோசித்தேன். இப்போது உள்ள அணு ஆயுதங்கள் முன்பைவிட 7 மடங்கு உலகத்தை அழிக்கும் தன்மையோடு அல்லவா இருக்கிறது என நினைத்தேன். தேவன் நான் வாழும் உலகை புரிந்துக்கொள்ளும்படிச் செய்தார், மற்றும் என்னிடம் நானே கேட்டுக்கொண்டேன், "யூதர்கள் இவ்விதமாக ஹிட்லரால் கொல்லப்பட்டதற்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும், அதனை மக்கள் நம்ப மறுக்கிறார்கள், இதே போல், இயேசு தான் மேசியா(மஸிஹா) என்றும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும் உலக மக்கள் நம்ப மறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை".

 
தேவன் எனது இதயத்தை திறந்தார், எவ்வாறு மக்கள் தவறான வழிபாட்டு முறைகளால் உண்மையான முறையை நிராகரிக்கிரார்கள் அதுவும் தனது வார்த்தையின் மூலமாக இவ்வளவு ஆதாரங்களை காண்பித்த பிறகும் மக்கள் நிராகரிக்கிறார்கள். எனது சிந்தனைகளை எவ்வாறு பிசாசு ஆக்கிரமித்திருந்தான் எனபதை கண்பித்தார், இஸ்லாமியனாக இருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் இறைவனின் மூலமாக வருகிறது என்று நான் நினைத்திருந்தேன். உலகம், வாழ்க்கை பற்றிய‌ ஒரு புதிய கண்ணோட்டத்தையும், இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்துகொள்ளும்படி ஏவப்பட்டேன். இந்த உலகத்தில் ஒரே உலக அரசாட்சியையும் அதற்கு பிசாசை அதிபதியாக முன்னிறுத்தும் மனிதனின் குறிக்கோளையும் நாம் இந்நாட்களில் காணமுடிகிறது.

 
பாபிலோன் மறுபடியும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து மற்றுமொரு முறை உலகை ஒன்றுபடுத்துகிறது. நாம் இதன் பெயரை மாற்றி "புதிய உலக வழிமுறை அல்லது தரம்" என்று பெயர் வைத்துள்ளோம், ஆனால், நாம் இதனை "புதிய பாபிலோன்" என்று அழைக்கவேண்டும். நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன், சகரியாவின் தீர்க்கதரிசனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன், அதாவது சகரியா ஏன் இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்:
 
 
"ஜெருச‌லேமுக்கு விரோதமக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை." (சகரியா 14:2)
 
 
எனக்கு கற்றுக்கொடுத்த இஸ்லாமின் படி மேசியாவின் இரண்டாம் வருகை ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சிலுவையை முறிப்பவராகவும் பன்றியை கொல்பவராகவும் காண்பிக்கப்பட்டிருந்தார். இன்னொரு இஸ்லாமிய இன மக்களின் நம்பிக்கையின் படி "மெஹ்தி" என்ற போலியான ஒரு மேசியா வருவதாக நம்புகிறார்கள்(Antiochos Epiphinias).

 
முகமதுவின் தீர்க்கதரிசனத்தின் படி அல்லாமல், யாக்கோபுக்கு உண்டாகும் உபத்திரவமானது யூதர்களை முழுவதுமாக அழிக்க அல்ல மாறாக இயேசு ஒலிவ மலையில் மீண்டும் இறங்கி வர அடையாளமாக உள்ளது. அவர் இறங்கி இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு போரிடுவார். துரதிருஷ்டவசமாக இதை நம்பாதவர்களுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.

 
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யூதர்களை எதிரிகளாக நினைக்கும் மனப்பான்மையானது பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்று நினைக்கலாகாது. இன்றும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள், என்றைக்காவது ஒரு நாள் முகமது சவுதி அரேபியாவில் உள்ள யூதர்களுக்கு செய்தது போல நாங்களும் புனித பூமியில் உள்ள யூதர்களுக்கும் செய்வோம் என பரிதாபகரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் கொலை செய்து அவர்களது மனைவியரை ஆசை நாயகிகளாக வைத்துக்கொள்ள குர்‍ஆனில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தான் இஸ்லாமியர் அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள காரணமாக அமைகிறது.

 
சத்தியம் என்ற பதம் இரவு பகலாக விடாமல் என் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டு எனது ஆன்மாவை விடாமல் உரசிக்கொண்டிருந்தது. அதன் பயனாக பைபிளையும் குர்‍ஆனையும் விடாமல் படித்து பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என உணர்ந்தேன். பைபிளின் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது என்பதற்காக மட்டுமல்ல‌, தேவன் யாக்கோபின் காலத்திலிருந்து இன்று வரை நமது தலைமுறைவரை உறுதிப்படுத்தி நிலை நிறுத்திய இஸ்ரேல் என்ற வார்த்தை கூட பைபிளின் நம்பகத் தன்மைக்கு ஒரு ஆதாரமே . சந்தேகம் இருப்பவர்கள் இதை பார்த்து அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் உருவானதும் யூதர்கள் பூமியின் கடையாந்திரங்களிலிருந்தும் கூட்டி சேர்க்கப்பட்டது வேதாகமம் எனும் பைபிளின் உறுதித் தன்மைக்கு சரியான சான்றாகும். இஸ்ரேல் தேசம் உருவானது வேதமாகிய பைபிளின் உறுதி தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடித்தார் ஆனால் தமது வாக்கின்படி அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.
 
 
"நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 29:14)
 
 
மெய்யான தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, நான் எதிரிகளாக கருதிய யூதர்கள் வாயிலாக தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது, மீட்புக்கான தேவ திட்டம் மேசியா மூலமாக வெளிப்பட்டது. இயேசு என்ற யூதர் நான் வசித்த ஊரில் வசித்தவர், எனது ஊரான பெத்லகேம் அப்பத்தின் வீடு என்றல்லவா பொருள்படுகிறது. இயேசு இவ்வாறாக சொல்லியிருக்கிறாரே:
 
 
"இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும்பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான் 6 :35)
 
பெத்லகேம் என்ற பெயர் இயேசு இந்த உலகத்தில் வருமுன்னே அந்த ஊருக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் எதிரியாக கருதிய யூத வம்சத்தில் தான் அவர் வந்தார், எனது பாவங்களுக்காக மரித்தார். பகையாளி தன்னை பகைப்பவனுக்காக மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும், துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார், உனது பகையாளி உனக்காக மரிக்கக்கூடுமோ? இருப்பினும் அவர் இவ்வாறு சொன்னார்.
 
 
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44)
 
 
சத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின் கதவுகளை அது தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான் அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான் திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.
 
 
"அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6)
 
 
எனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. யூதர்களுக்காக பரிதாபப்பட ஆரம்பித்தேன், எனது காழ்ப்புணர்ச்சிகள் என்னை விட்டு அகன்றன. அவர்களை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் என் வாழ்விலே இப்போது இல்லை. ஜெருச‌லேமின் அமைதிக்காக ஜெபிக்கிறேன். யூத படுகொலைகளை தொலைக் காட்சிகளில் கண்டு ரசிப்பதை விடுத்து அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன். என் இயேசு எனக்காக செய்தது போல‌ எனது உயிரையே அவர்களுக்காக தியாகம் செய்ய ஆவலாய் உள்ளேன். எனது சொந்த இன மக்களான அரேபியர் இவ்வளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தபோதும் இதை தைரியமாக கூறுகிறேன்.

 
ஆம், முழு உலகத்துக்கும் சொல்கிறேன், நான் யூதர்களை நேசிக்கிறேன், அவர்களிடமிருந்து வந்த இரட்சகருக்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் மூலமாக ஒளியும் சத்தியமும் இந்த உலகத்துக்குள் வந்தது, இதற்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்களை இனியும் வெறுப்பதற்கில்லை ஏனெனில் நான் பைபிள் மூலமாக அறிந்துக்கொண்டேன், அவர்கள் கர்த்தரால் தெரிந்து எடுக்கப்பட்ட ஜனம், அரேபியர் மாத்திரம் அல்ல முழு உலகத்துக்கும் வெளிச்சம் கொடுக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். தேவன் உலகம் முழுவதற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைத்தார். நாம் அவர்களை நேசிக்க வேண்டும் தாங்க வேண்டும். அவர் ஆபிரகாமுக்கு சொன்னபடி
 
 
"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2)
 
 

சத்தியத்தை அறிந்ததால் ஹிட்லரை நம்பிக்கொண்டிருந்த நான் கிறிஸ்துவை நம்ப ஆரம்பித்தேன். பொய்களை நம்புவதிலிருந்து உண்மையை, வியாதிப்பட்டிருந்து பின் சுகமாகி, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கு, வெறுப்பில் இருந்து அன்பிற்கு இப்படி பல வகைகளில் மாற்றப்பட்டேன். இந்த மாற்றம் காரணமாக தேவனுடைய சத்தியத்தை அறியாவிட்டால் வெளியே நன்றாக தெரியும் விஷயங்கள் உள்ளே ஏமாற்றம் அளிக்கும் பொய்யோடு தான் இருக்கும் என்பதை உணர தவறிவிடுவோம் என அறிந்துகொண்டேன். கர்த்தராகியை இயேசு தான் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டேன், அவருக்கே என்னை அர்ப்பணிக்கிறேன்.

இயேசு கூறினார்:

"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)

உமது வாக்குத்தத்தை நிறைவேற்றியதற்காக நன்றி ஆண்டவரே.


என்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால், எனக்கு மெயில் அனுப்புங்கள்.

அன்பான இஸ்லாமியர்களே, நான் ஏன் இயேசுவை நம்புகிறேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும். பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளை படியுங்கள்.

Source: http://www.answering-islam.org/Testimonies/walid.html


இன்னும் அனேக இப்படிப்பட்ட சாட்சிகளை படிக்க சொடுக்கவும்
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Monday, November 17, 2008

Fwd: நான் ஏன் கிறிஸ்தவனாய் இருக்கிறேன் - 23 ஆண்டுகள் பாகிஸ்தானில் ஊழியம் செய்தவரின் சாட்சி



நான் ஏன் கிறிஸ்தவனாய் இருக்கிறேன்

WHY I AM A CHRISTIAN

டாக்டர் வாரன் எஃப் லார்சன்

(Dr. Warren F. Larson)

இக்கட்டுரையின் ஆசிரியர் தான் ஏன் ஒரு கிறிஸ்த‌வ‌ராய் இருக்கிறார் என்ப‌த‌ற்கும், மற்றும் அவ‌ர் ஒரு ச‌ரியான‌ வ‌ழியைத்தான் தேர்ந்தெடுத்தாரென அவர் ஏன் உண‌ர்கிறார் என்ப‌த‌ற்கும் மூன்று கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன என விளக்குகிறார். இக்காரணங்கள் பைபிளின் முத‌ல் புத்தகத்தில் ஆர‌ம்பித்து, பைபிள் முழுவதும் காணும்ப‌டியாக‌ வியாபித்து உள்ள‌து. இன்றிய‌மையாத‌ இத்த‌லைப்பில், கையாளப்படும் முக்கிய‌மான விஷயம் என்ன‌வெனில், இது நம் தேவ‌னைப் ப‌ற்றிய , கிறிஸ்துவைப் ப‌ற்றிய‌ ம‌ற்றும் ம‌னித‌குல‌த்தைப் ப‌ற்றிய‌ ந‌ம‌து க‌ருத்துக்க‌ளைச் சுற்றியே வ‌ல‌ம் வ‌ருகிற‌து. இவை மூன்றும் இஸ்லாமிலும் கூட‌ இழையோடியிருப்பினும், அடிப்ப‌டையில் பைபிளில் தேவ‌ன் வெளிப்ப‌டுத்தியிருப்ப‌தினின்று முற்றிலும் வேறுப‌ட்டுள்ள‌து.
 
 
மேற்கு க‌ன‌டா ப‌குதியில் வ‌ள‌ரும் ஒரு இளைஞ‌னாக, நான் முதலில் இந்த தலைப்பைப் பற்றிய‌ சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஒரு கிறிஸ்த‌வ‌ வீட்டில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ நான் ஏழு வ‌ய‌தில் சொந்த‌ விசுவாச‌த்திற்குள் வ‌ந்தேன். பின்பு க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது என‌து விசுவாசத்தைத் திருப்பி ஆராய்ந்து பார்த்தேன். உண்மையாக‌வே நான் ஏன் ஒரு கிறிஸ்த‌வ‌னாக‌ இருக்கிறேன்? பின்னும் என்னுடைய‌ 24 ஆவ‌து வ‌ய‌தில் நான் பாகிஸ்தான் சென்று 97 சதவீதம் முஸ்லீம்கள் (பெரும்பாலாக சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்) உள்ள அந்நாட்டில் ஒரு மிஷின‌ரியாக‌ 23 ஆண்டுகள் ஊழிய‌ம் செய்தேன். ப‌ற்ப‌ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் கிறிஸ்த‌வ‌ம் ப‌ற்றிய‌ என் உண்மை எண்ண‌ம் சோத‌னைக்குள்ளாயிற்று. நான் ஒரு இஸ்லாமிய‌னாக மாறிவிடுவேன் என உறுதியாகவே பலர் எண்ணினர். இதற்கும் மேலாக, நான் இஸ்லாம் பற்றிய மேற்படிப்பைப் படித்து டாக்டர் பட்டத்திற்கான (Ph.D) ஆராய்ச்சிக் கட்டுரையையும் பாகிஸ்தானின் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து எழுதினேன். என‌வே என‌து விசுவாச‌த்தைக் குறித்து, அதிலும் குறிப்பாக‌ இஸ்லாமிட‌மான‌ தொட‌ர்பு குறித்து, ஆராய்ந்து பார்க்க‌ என‌க்குப் போதுமான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து என‌ உண‌ர்கிறேன்.

 
இருப்பினும்‌, நான் இரு நம்பிக்கைகளைப் பற்றி படித்திருந்தாலும், தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றிற்கான பதிலும் என்னிடம் இல்லை என நான் ஒப்புக் கொள்கிறேன். எனினும் வெளிப்படையாகவும், அமைதியாகவும் கிறிஸ்துவத்தையும் இஸ்லாமையும் ஒப்பிட்டு, குறிப்பிடத்தக்கவைகளை நான் எழுத வேண்டும் என உணர்கிறேன். இஸ்லாமைப் பற்றியோ அல்லது கிறிஸ்துவத்தைப் பற்றியோ நான் தவறாக எதுவும் அபிப்பிராயம் கொண்டிருந்தால் நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.

 
இப்பொருள் குறித்து நான் சிந்திக்கும் போது, வட ஆப்பிரிக்காவின் பெர்பர் இனத்தைச் சேர்ந்த புனிதர் அகஸ்டின், நபி இயேசுவிற்கு சில நூறு ஆண்டுகளுக்குப் பின் மொழிந்த,"எங்களை உமக்காக உண்டாக்கினீர்; உம்மை வந்தடைந்து ஓய்வு பெறுமட்டும் எங்கள் இதயங்கள் அமைதியின்றி இருக்கும்(Thou hast formed us for Thyself and our hearts are restless till they find their rest in Thee)" என்ற வார்த்தைகளை நினைவு கூறுகிறேன். மேலும் கீழ்கண்டவாறு சொல்லப்படும் கிறிஸ்துவப் பிரமாணமும் எனது நினைவுக்கு வருகிறது ."தேவனை மகிமைப்படுத்துதலும் எக்காலத்திலும் அவரில் களிகூறுதலுமே மனிதனின் தலையாய இறுதி நிலையாகும்(The chief end of man is to glorify God and enjoy him forever)" .

 
 
எனவே கிறிஸ்தவர்கள், உண்மையான மன நிறைவு, தேவனை அறிந்துகொள்வதிலிருந்து மட்டுமே வருகிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஏனெனில் நம் மனத்தில் இத்தகைய ஒரு வெற்றிடத்துடனேயே தேவன் நம்மை உருவாக்கி இருக்கிறார் என்பதாகவே காணப்படுகிறது. ஆயினும், இவ்வுலகில் அனேகம் மக்கள் கடவுளைப் பற்றி மற்றவர்கள் மூலமாக கேள்விப்படுபனவற்றை மட்டுமே அறிவார்களேயொழிய அவரைப் பற்றி உண்மையில் சிந்தனை ஏதும் செய்வதில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அவர் சில கருத்துக்களின் அடிப்படையினாலான ஒரு தீர்மானமாகவே கருதப்படுகிறார். இன்னும் பலருக்கு அவர் "அங்கிருக்கிறார்" ஆனால் "இங்கு இப்போது செயல்பாட்டில்" இல்லை என்று நம்புகிறார்கள். அமெரிக்காவிலும் உலகில் இன்னும் பல பகுதிகளிலும் உள்ள பலர் இந்த வகையானவர்கள் என நான் நினைக்கிறேன். அதாவது "கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும். எனவே அவரை நான் நம்புகிறேன்" என அவர்கள் சொல்லுகிறார்கள்.

 
 
இறுதியாகச் சில கிறிஸ்தவர்களும் தேவன் மீது உண்மையில் தாக‌த்துட‌னும் ப‌சியுட‌னும் இருக்கிறார்களே என‌ நான் வியப்ப‌டைவ‌தைத் த‌விற‌ வேறு எந்த வகையிலும் என்னால் அவர்களுக்கு உதவமுடியாது. தேவ‌னைப்ப‌ற்றிய‌ அறியாமையிலேயும் புற‌க்க‌ணிப்பிலும் மூழ்கியுள்ள இக்கால‌ ம‌க்க‌ளுக்கு மாறாக‌ தேவ‌னைப்ப‌ற்றி அறிய‌வும் அவ‌ரோடு பேச‌வும் வழிபடவும் ஆவ‌லாய் இருந்த சிலரைப் பற்றி நான் பைபிளில் வாசிக்கிறேன்.

 
 
 
உதார‌ண‌மாக, மோசே சொன்னார், "உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும் (யாத்திராகமம் 33:13)".
 
தாவீதும் கூடச் சொல்கிறார், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் (சங்கீதம் 34:8)".
 
 
இயேசு நபியும் சொன்னார், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8)". புதிய ஏற்பாட்டின் (இஞ்ஜில்) இறுதியில் "இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுது கொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப் பட்டவைகளுமா யிருக்கிறது என்றார்கள். (வெளி 4:10-11)" எனச் சொல்லப்பட்டுள்ளது.

 

 
 
ப‌ல ஆண்டுகளுக்கு முன்பு பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (Bertrand Russel) எழுதிய "நான் ஏன் ஒரு கிறிஸ்தவனாக இல்லை" என்ற ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். ஆனால் அதை நான் மிகவும் கவனமாக வாசிக்கவில்லை என ஒப்புக்கொள்கிறேன். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அதன் பின்னால் இருந்த அவரது படம் ஒரு மிகவும் மகிழ்ச்சியற்ற மனிதனாகக் காணப்பட்டதே. ஒரு கிறிஸ்தவனாய் இருப்பதில், நான் திரு.பெர்ட்ராண்டு ரஸ்ஸல் அவர்கள் ஒரு கிறிஸ்தவனாக இல்லாததைவிட அதிக மகிழ்ச்சியாக‌ இருக்கிறேன் என‌ ந‌ம்புகிறேன்! எனவே இத‌ன்‌ தொட‌ர்ச்சியாக‌, நான் ஏன் ஒரு கிறிஸ்த‌வ‌னாக‌ மாறி ஒரு கிறிஸ்த‌வ‌னாக‌வே இருக்கிறேன் என்றும் நான் ச‌ரியான‌தைத்தான் தேர்ந்தெடுத்தேன் என்ப‌திலும் ம‌ன‌ நிறைவுட‌ன் தான் இருக்கிறேன் என்பதை மூன்று காரணங்களக் கொண்டு விளக்குகிறேன். இவை பைபிளின் முத‌ல் புத்தகத்தில் ஆரம்பித்து , வேர் கொண்டு பைபிள் முழுவ‌திலும் காணும்ப‌டியாக‌ வியாபித்து உள்ள‌து. கீழ்க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ள் மொத்தத்தில் இன்றிய‌மையாத இந்த‌த் த‌லைப்பில் என்னுடைய‌ எண்ணத்தைப் பிர‌திப‌லிக்கின்ற‌ன‌.

 

 

தேவ‌னின் இய‌ல்பு (The Character of God)

 
 
தேவ‌னுட‌னான‌ ந‌ம‌து உற‌வு அவ‌ரைப் ப‌ற்றி நாம் கொண்டுள்ள‌ எண்ண‌த்தின் மீதே (அதாவ‌து ந‌ம‌து "க‌ட‌வுள் கொள்கை" மீதே) சார்ந்துள்ள‌து, இந்த‌க் க‌ருத்துட‌ன் நான் ஆர‌ம்பிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம், தேவ‌ன் பெரும்பாலும் நம்முடனே ஒரு தொட‌ர்பை ஏற்ப‌டுத்திக்கொள்ளவே விரும்புகிறார் என‌ நான் ந‌ம்புவ‌தாலேயே. "அவ‌ர் ந‌ம்மிட‌ம் முத‌லில் அன்பு செலுத்துவ‌தினாலேயே நாம் அவ‌ர் மீது அன்பாய் இருக்கிறோம்" என‌ பைபிள் சொல்லுகிற‌து. அத‌ற்கான‌ முத‌ல் முயற்சியை அவ‌ர் எடுக்கிறார். தேவ‌ன் தான் இப்பிர‌ப‌ஞ்ச‌த்தில் மிக‌வும் பெரிய‌வ‌ர் என்ப‌தில் நாம் அனைவ‌ரும் ஒத்த கருத்துடைய‌வ‌ர்க‌ளாய் இருக்கிறோம். அவரே ம‌க‌த்துவ‌மான‌வ‌ர், க‌ம்பீர‌மிக்க‌வ‌ர், ஆளும் அர‌ச‌ர். என‌வே, அவ‌ர‌து பிர‌ஜைக‌ள் யாரும் அவ‌ர‌து அழைப்பின்றி அவ‌ர‌து ச‌மூக‌த்திற்கு வ‌ர‌ முடியாது( He is glorious, majestic, ruler and king; therefore, none of his subjects dare come into his presence without an invitation).

 
 
மேலும், வார்த்தையியலின்படி (etymology /வார்த்தைகளின் அமைப்பு குறித்த ஆய்வு) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் "கடவுள்" என்பது ஒன்றே. சில குறிப்பிட்ட‌ குர்‍ஆன் வசனங்கள் இதைத் தெரிவிக்கின்றன (குர்‍ஆன் 22:40). வார்த்தைகளின் மூலத்தை ஆராய்ந்தால் கடவுளைக் குறிக்கும் சொற்கள் ஒரே பொருளுடையவை. "Allah" என்பது எபிரேய மொழியில், " El-Bethel" மற்றும் "El-Elohim" என்பவையுடனும், அராமிக்கில் "Elah" என்பதுடனும் தொடர்புடையது. அல்லா என்பது இஸ்லாமின் தொடக்கத்திற்கு முற்பட்டது. ஒரு எடுத்துக்காட்டுக்காக இதை கவனியுங்கள்‌, முகமது நபியின் தகப்பனார் பெயர் "Abd-Allah" (Servant of Allah ) என்பதாகும் (Allah is pre-Islamic as, for example, when the Prophet Muhammad's father was named Abd-Allah" (servant of Allah)).

 
 
எனினும், இஸ்லாமிலும் கிறிஸ்தவத்திலும் கடவுள் என்ற சொல்லுக்கு வார்த்தையியலின்படி (etymologically) ஒரே மூலம் இருப்பினும் அவை அவற்றின் தன்மையினால் முற்றிலும் மாறுபட்டவை. கிறிஸ்துவத்தில் பைபிளின் ஆரம்பமுதல் தேவனின் வல்லமை மற்றும் ஆளுகை குறித்தேயல்லாமல் அவருக்கு ஒரு தெய்வீகத் தனித்தன்மை இருப்பதை உணர்கிறோம். இறைவனின் வல்லமை மற்றும் ஆளுமைப் பற்றி குர்‍ஆனில் வ‌லியுறுத்த‌ப்ப‌ட்டிருப்பினும், பைபிளில் தேவனின் நிபந்தனையற்ற அன்பே அவரது தனித்தன்மையாக இருக்கிறது.

 
 
பைபிளின் படி மனிதகுலம் பாவம் செய்து தேவனின் கட்டளையை மீறினது. ஆனாலும், தேவன், " நீ எங்கே இருக்கிறாய்?" என‌ அவர்களைத் தேடினார். தானே முன்வந்து முயன்று அவரே அவர்களை விரட்டியிருந்தாலும் அவர்களைத் தொடர்ந்து அன்பு செலுத்தி முறிந்துபோன உறவைப் புதுப்பிக்க ஒரு திட்டம் வகுக்கிறார். இந்த அருமையான வசனங்களைப் படியுங்கள்:"
 
 
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார் (ரோமர் 5:8)", "அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் (ரோமர் 5:6)", "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:10)". ஒரு சிறிய வசனம் இவைகள் எல்லாவற்றையும் இரத்தினச் சுருக்கமாய் சொல்கிறது:" தேவன் அன்பாகவே இருக்கிறார் (I யோவான் 4:8.)".
 
 
அன்புக்குப் பாத்திரமற்றவர்கள் மீதான தேவனின் இந்த நிபந்தனையற்ற அன்பு பைபிள் முழுவதும் காணப்படுகிறது. சான்றாக :

 
 
"அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்" (எரேமியா 31:3).

 
 
 
இயேசுவால் சொல்லப்பட்ட லூக்கா 15 ல் உள்ள கெட்ட குமாரன் கதையில் கூட‌, தேவ‌ன் ஒரு தந்தை போல் இருக்கிறார் என்பதை விளக்குகிறார். அந்த கதையில் அந்த குமாரனின் தந்தை அவனை ஒதுக்கவோ, அவனை திரும்பிவரும்படிச் செய்ய ஒரு இராணுவத்தை அனுப்பவோ இல்லை. மாறாக அவனோடு ஒரு நல்லுறவிற்காக ஏங்கி, அவனோடு ஒப்புரவாகி அவன் வீடு திரும்பும் மட்டும் பாடுகள் பட்டு வருந்தினார். இறுதியில் அந்த மகன் விரக்தியில் மனம் திரும்பி அவனது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு வீடு திரும்புகிறான். அவன் அவ்வாறு செய்தது அவன் தந்தையின் பண்பினையும் செயலையும் நன்றாக அறிந்திருந்த‌ காரணத்தினால் தான்.

 
 
அந்த தகப்பன் அவனது குமாரனை விரித்த கரத்துடன் வரவேற்கிறான்; ஏனெனில் அவனோடுள்ள உறவினைப் புதுப்பிக்கவே. கிறிஸ்தவத்தில் தேவன் இப்படிப்பட்ட குணத்தை உடையவராக‌ இருக்கிறார். தௌராத் சொல்கிறது:

 
 
 
"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறது போல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? "(உபாகமம் 4:7 ).

 
 
இப்படி தேவன் அன்பாக இருப்பதினால், அவ‌ர் பாவத்தை எளிதில் ஏற்றுக்கொள்கிறார் என எடுத்துக் கொள்ளலாகாது. தேவன் நீதிபரர். அவர் துன்மார்க்கருக்காக நரகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இயேசு அவ்விடத்தை"அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்" (மாற்கு 9:48) எனக் குறிப்பிடுகிறார். உண்மையில் பைபிள் நரகத்தின் பயங்கரங்க‌ளின் விரிவான விளக்கத்துடன் அதாவது "சத்தானுக்கும் அவன் தூதருக்கும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கும் அக்கினிக்கடல்" என்றும், "கந்தகமும் எரி தழலும் இருக்கும் இடம்" என்றும் படம் பிடித்து விவரித்து முடிக்கிறது.

 
 
ஆனால், தேவ‌ன், நாம் ந‌ர‌க‌த்திற்குப் போக‌ வேண்டிய அவசியம் இல்லையென்றும், நரகத்திலிருந்து த‌ப்பிக்க அவ‌ர் ஒரு நிச்ச‌ய‌மான‌ வ‌ழி வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார். இதுவே ந‌ற்செய்தி. இது த‌ம்மீது ந‌ம் த‌ண்ட‌னையை ஏற்றுக்கொண்ட‌ ஒருவ‌ர் மூல‌மாக‌வே ஆகும். பைபிளில் நாம் தேடுவோமானால் ப‌லியிடும் முறை, ஆக‌ம‌ங்க‌ளிலும் ச‌ங்கீதங்க‌ளிலும்(தௌராத் மற்றும் ஜபூர்) மற்றும் பைபிளின் பல பாகங்களிலும் காண‌ப்பட்டு தேவ‌ன் பலியிட‌ ஒரு மாற்றுப்பொருள் கொடுத்திருப்ப‌தைக் காண‌லாம். இதில் இறுதி ப‌லியாக‌ ஒரு பாவ‌மும‌ற்ற‌ அப்ப‌ழுக்க‌ற்ற‌ மாற்றுப் பொருளினைத் தாமே கொடுத்திருப்ப‌தை உண‌ர‌லாம். அவ‌ரே ந‌ம‌க்காக‌ ம‌ரித்து பின்பு உயித்தெழுந்தார். இயேசு தாமே இந்த‌ வாக்குறுதியை நிறைவேற்றினார்.

 
 
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் அறிஞர் தாவுத் ரஹபர் (Daud Rahbar) என்பவர் டாக்டர் பட்டத்திற்காக "நீதியுள்ள க‌ட‌வுள் - குர்‍ஆனில் அறவழிக்கொள்கை பற்றிய ஒரு ஆய்வு(God of Justice: A Study in the Ethical Doctrine of the Qur'an) " என்ற‌ த‌லைப்பில் ஒரு ஆய்வுக்க‌ட்டுரை எழுதினார். அதில் அவ‌ர் முடிவுரையாகக் க‌ட‌வுள் க‌ருணை மிக்க‌வ‌ராக‌வும் நீதியுள்ள‌வ‌ராக‌வும் ஒன்றுசேர இருக்க‌வேண்டுமெனின் அது சிலுவையின் மூல‌மே ஆகும் என‌ எழுதியிருந்தார். இந்தப் பிர‌ச்சினைக்கு இதுவே தீர்வு. தாவுத் ரஹபர் பின்பு ஒரு கிறிஸ்தவராக மாறி அமெரிக்காவில் ஆசிரிய‌ரானார்.

 
 
இத‌ற்கு ம‌றுப‌க்க‌மாக‌, நான் கூறுவ‌து த‌வறென்றால் திருத்த‌வும், இஸ்லாமில் க‌ட‌வுள் அன்பான‌வராகவே இருப்பினும் (al-wadud என்ற‌ பெய‌ரின் ப‌டி), பாவிக‌ளை அவ‌ர் நேசிப்ப‌தில்லை.
 
 
குர்‍ஆன் 3:31-32ன் ப‌டி, "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்;…… நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை". மேலும் குர்‍ஆன் 9:4 சொல்கிற‌து: "நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்". குர்‍ஆன் 4:107 கூட "கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை." என்றுச் சொல்கிற‌து.
 
 
அவ‌ர் க‌ருணை மிக்கோனாய் இருப்பினும் கூட‌, அது ஒரு அர‌ச‌ன் காட்டும் க‌ருணையே த‌விர‌, பைபிளின் லூக்கா 15ம் அதிகாரத்தில் காணப்படுவது போன்று ஒரு த‌க‌ப்ப‌னின் பாச‌ம் அல்ல‌.

 
 
குர்‍ஆனில் ஒவ்வொரு அத்தியாயமும் (ஒன்பதாவது தவிர) கருணை மிக்கோனும் அன்புடையோனுமான இறைவனின் நாமத்தில் (Bis milla ur-Rahman ur Rahim) என்றே துவங்குகின்றது. கடவுளின் கருணை இங்கு அவரின் உன்னதமான ஆற்றலில் அடங்கி விடுகிறது. எனவே இஸ்லாமில் அன்பு என்பது எதிர்பார்ப்புடன் கூடியது என்றே நான் கருதுகிறேன். எனவே ஒரு இஸ்லாமியன் "கடவுள் அன்பாகவே இருக்கிறார்" என அதின் உண்மையான அர்த்தத்தில் கூற முடியாது(I therefore conclude that love in Islam is reciprocal and that in a true sense a Muslim cannot say "God is love."). இஸ்லாமில் கடவுள் அனைத்து வல்லமையும் உள்ளவர் என்று கருதப்படுகிறார், ஆனால் மக்களுடன் பின்னிப் பிணையாமல் தூரமாயிருப்பவர். "சிலருக்கு சொர்க்கம், சிலருக்கு நரகம், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை" என்றுச் சொல்வது போல அல்லா காணப்படுகிறார். சொர்க்கம் என்பது அல்லாவின் சொந்த விருப்பமே(சித்தமே).

 
 
மனம் திரும்புதலை இஸ்லாம் ஊக்குவிக்கிறது என நாம் ஒப்புக்கொண்டாலும், இஸ்லாமின்படி ஒரு மனிதனின் மனம் திரும்புதலை விட‌ மிகவும் மேன்மையானது இறைவனின் சித்தம். கடவுளின் சித்தத்தின்படியே அவர் மன்னிக்கிறார், ஆனால் அவர் பெரிய பாவங்கள் சிறிய பாவங்கள் என எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. (குர்‍ஆன் 18:47). எவரையும் மன்னிப்பதோ அல்லது தண்டனைக்கு உள்ளாக்குவதோ அது முற்றிலும் அல்லாவின் சித்தமே. இதற்குத் தப்புபவன் யார்?

 
 
இதன் காரணமாகவே ஒரு இஸ்லாமியர், தான் பின் வரும் குர்‍ஆன் வசனத்தைப் பார்த்து மிகவும் பயத்துடன் இருப்பதாக எழுதுகிறார்.
 
 
"மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்" (குர்‍ஆன் 19:71). இதன் பின் வரும் குர்‍ஆன் வசனம் பலத்த அடியாய் இறங்குகிறது: "உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர் இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; "நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்" என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்" (குர்‍ஆன் 11: 118-119).

 
 
இந்த இஸ்லாமிய நம்பிக்கையாளர் இரட்சிப்பின் நம்பிக்கை இல்லாமல் இருப்பதை உணர்கிறார். அவரின் துக்கம் இபின் மசூத்(Ibn Masud) அவர்களின் கீழ்கண்ட இஸ்லாமிய ஹதீஸைக் கண்டதும் இன்னும் அதிகமாகியது, அந்த ஹதீஸ் இவ்விதமாகச் சொல்கிறது:
 
 
முகமது சொல்கிறார், "ஒவ்வொருவரும் முதலில் நரகத்திலேயே நுழைகிறார்கள். பின்பு அவர்கள் செய்தனவற்றின்படி முன்னதாகவோ அல்லது பின்போ அதினின்று வெளிவருகிறார்கள். முதலில் வெளி வருகின்றவர்கள் முழு வேகத்தில் விரைந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றும், அதன் பின்பு வேகமான சவாரி செய்பவரைப் போன்றும், பின்பு விரைந்து செல்லும் மனிதனைப் போன்றும் இறுதியில் நடந்து செல்லும் மனிதனைப் போன்றும் இருப்பார்கள். இந்த ஹதீஸ் திர்மிதி மற்றும் தரிமி மூலமாக கிடைத்தது. (The Moslem World, 18, no. 2, April 1928)
 
 
எனவே இதனை நோக்கும்போது இஸ்லாமின் கடவுள், கீழ்படிதலால் மகிழ்ச்சி அடையாதவராகவும், பாவத்தினால் வெறுப்படையாதவராகவும் தம்மை நம்புபவர்களின் மீது கருணைமிக்கவராய் இராமல் தம்மை மறப்பவர்களை வெறுத்து சாந்த குணமற்றவர்களுக்கு எதிர்ப்பாளராக இல்லாமலும் இருக்கிறார். அவர் இத்தகைய உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகவே காணப்படுகிறார். இதற்கு நேர்மாறாக கிறிஸ்துவத்தின் தேவன் நம்மீது அக்கரை உள்ளவராயிருக்கிறார். அவரது தீர்ப்புகள் நீதியாயும் பரிசுத்தமிக்கவையாயும் ஆதாரமற்ற‌வையாய் இராமல் நன்மையாயும், தம் விருப்பத்திற்கு என்று இராமல் விருப்புவெறுப் பற்று இருக்கிறது.

 
 
மார்க்ஸிஸத்திலிருந்து கிறிஸ்துவராய் மாறின தாமஸ் மெர்டன்(Thomas Merton) என்பவர் கடவுளின் தத்துவம் பற்றிய ஒர் புத்தகத்தைப் படித்த போது மன அழுத்தத்தினால் நம்பிக்கையற்ற நிலையிலேயே மார்க்ஸிஸத்திலிருந்து மாறினார். தேவனை அவர் அருகாமையில் இருப்பராயும் உடனே சென்றடையத்தக்கவராய் கைக்கு மிக‌ நெருக்கத்தில் இருப்பவராய் கண்டார். இதற்கு மாறாக இஸ்லாமியர்கள் என்னதான் அல்லாவைத் தேடினாலும் அவர் அவர்களின் கைக்கு எட்டாத துரமாக இருக்கிறார்.

 
 
பாகிஸ்தானிலிருந்த எனக்குத் தெரிந்த ஒரு முஸ்லிம் பெண், ஒரு கிறிஸ்தவரால், "தேவனிடம் ஒரு தகப்பன் போன்றும் ஒரு நண்பராயும் வேண்டுதல் செய்ய வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டார். இதற்கு அந்த முஸ்லீம சகோதரி:
 
 
"நான் முழங்காலில் நின்று முயன்றபோது அது என‌க்கு கேலிக்குரியதாகப்பட்டது. அதனைச் செய்ய எனக்கு உடன்பாடில்லை. தேவன் போன்ற மகத்துவமுள்ளவரை நம்மளவிற்குத் தாழ்த்துதல் பாவமில்லையா எனத் தோன்றுகிறது?" எனச் சொன்னார். பின்பு அவர் குழப்பத்துடன் தூங்கச்சென்று காலையில் எழும்பியபோது அன்று அவர் பிறந்த நாள் என்பது நினைவிற்கு வந்தது. அப்போது அவர் மிகவும் பரபரப்புடன் தேவனை அப்பா என்றழைத்தால் என்ன என்று நினைத்தார். உடனே அவர் முழங்காற்படியிட்டு "அப்பா பிதாவே" என்றழைத்தார். அவர் சொன்னார்," பின்பு நடந்தவைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அவரது நாமத்தை நான் உரக்கக் கூப்பிட்டேன். ஏதோவொன்று என்னை ஆட்கொண்டது. அவர் எனக்குச் செவிகொடுத்தார் என நான் அறிந்தேன். அந்த அறை வெறுமையாய் இல்லை. அவர் அங்கிருப்பதை உணர்ந்தேன்."

 

 

நான் யார் (Who I am)

 
 
ந‌ம்மைப்ப‌ற்றி நாம் என்ன‌ நினைக்கிறோம் என்பதையே தேவ‌னுட‌னான‌ ந‌ம்முடைய‌ உற‌வு சார்ந்திருக்கிற‌து. அதாவ‌து ந‌ம‌து "ம‌னித‌த் த‌த்துவ‌த்தைப்" பொறுத்தே அது அமைகிற‌து. இதை முத‌ல் க‌ட்ட‌த்திலேயே நான் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவ‌த்தில், ம‌னித‌குல‌ம் பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்க‌ளினால் ம‌ட்டுமின்றி உள்ளான‌ பாவ‌த்திலும் அதாவது ஆரம்ப அடிப்படையான பாவத்திலும் மூழ்கியிருக்கிற‌து என‌ நாம் அறிந்திருக்கிறோம். ம‌னித‌குல‌ம் முழுவ‌தும், அதாவ‌து முஸ்லிம்கள் மட்டுமின்றி நாம் அனைவரும் உட்ப‌ட‌, பாவ‌த்தினால் ஆன‌ தீமையில் திளைத்திருக்கிறோம். ரோம‌ர் 3:23ல் பைபிள் சொல்கிற‌து "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமை அற்றவர்களானார்கள்" மறுபடியும் பைபிள் ரோம‌ர் 3:10ல் "நீதிமான் ஒருவனாகிலும் இல்லை" என்றுச் சொல்கிறது.

 
 
அது ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்தது. அவர்களுடைய கீழ்படியாமைக்குப் பிறகு தேவன் ஆதாம், ஏவாளை நோக்கி, "நீங்கள் பாவம் செய்தீர்கள்" என்று சொல்கிறார். அதிலிருந்து மீள்வதற்கு வழியில்லை. இஞ்ஜில் சொல்கிறது, "ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று" (ரோமர் 5:12.) இது ஒரு அச்சுறுத்தும், தண்டனைக்குள்ளாக்கும் வார்த்தை தான். ஆனால் இது பாவத்தின் ஆரம்பத்தை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளும்படி இங்கு படம் பிடித்துக்காட்டுகிறது.

 
 
எனினும் தேவ‌ன் ந‌ம்மை அவ்வாறே விடுவ‌தில்லை. அவ‌ர் பாவ‌ம் செய்த‌வ‌ர்க‌ளை நோக்கி, "உங்க‌ளுடைய‌ பாவ‌ சுபாவ‌ம் உங்க‌ளின் அட‌ங்காமையினால் பாவ‌த்தில் த‌ரித்திருக்க‌ப் ப‌ண்ணுகிற‌து. அத‌ற்கெதிராக அதனை நீக்கவோ அல்லது என் கண்களுக்கு முன்பாக நீங்கள் வெட்கமடையாதிருக்கவோ உங்க‌ளால் ஒன்றும் செய்ய‌ முடியாது. நீங்க‌ள் நித்திய‌ ஆக்கினைக்குள்ளாக‌த் தீர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். என‌வே என்னை நோக்கித் திரும்பி, என்னை விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் மூல‌மாக‌ இர‌ட்சிப்ப‌டையுங்க‌ள். நான் உங்களை ஒரு புதிய வாழ்வுக்கு ஆயத்தப்படுத்துவேன்" என்றுச் சொல்கிறார்.

 
எனது கணிப்பின்படி பாவம் பற்றிய பிரச்சினையை இஸ்லாம் போதுமான அளவுக்குக் கையாளவில்லை என்பது ஒரு குறை தான். "இரட்சிப்பு" என்பது இஸ்லாமில் மிக அபூர்வமான வார்த்தை (குர்‍ஆன் 40:41ல் மட்டுமே காணப்படுகிற‌து). ஏனெனில் மனிதகுலம் இஸ்லாமின் படி விழுந்து போக‌வில்லை, அவர்கள் மனதளவில் வீழ்ச்சியடையவில்லை, மேலும், அடிப்படையான பாவம் என்ற தத்துவம் அங்கில்லை.

 
சூரா 33:72ல் குர்‍ஆன் சொல்கிறது: "நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ". மேலும் சூரா 96:6ல், "நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்" என்பதாகவும், சூரா 20:115ல் "ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்துவிட்டார்" என்பதாகவும், சூரா 2:36ல் "ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான் " என்பதாகவும் காண்கின்றோம்.

 
 
மனிதன் பலவீனமானவன்; எனவே அவனுக்கு வழிகாட்டுதல் தேவையாய் இருக்கிறது என்று இஸ்லாம் சொல்கிறது. சூரா 30:54 சொல்கிறது: "அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பல‌ஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்".

 
 
அதாவது இஸ்லாம் ஏன் அதனுடைய சாரம் எனக்கருதப்படும் இஸ்லாமியச் சட்டங்களுக்கு (Shariah Law) இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய‌ காரணம் இதுவாகத் தான் இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். எனினும், சரியான சட்டங்கள் மட்டும் இருந்தாலே பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்திவிடலாம் என எண்ணும் சமுதாயத்தில் ஒரு பிரச்சினை உள்ளது. அதில் உள்ள கஷ்டம் என்னவெனில் நல்ல சட்டங்கள் பெரும்பாலும் அநீதியின் கருவிகளாய் மாறிப் போகின்றன. மனித சமுதாயங்கள் ஒருபோதும் அப்பழுக்கற்றவை அல்ல. பைபிளில் ரோமர் 8:3 ஐ நாம் வாசிப்போமானால் "சட்டம் பாவத்தினால் பலவீனப்படுகிறது" என நாம் அறியலாம். தேவன் எதிர்பார்க்கும் கீழ்ப்படிதலை சட்டம் மட்டுமே உருவாக்க முடியாது.

 
 
பல கால கட்டங்களில் கிறிஸ்துவர்கள் பைபிள் அடிப்படையில் சமயச் சார்புள்ள நாடுகளை ஏற்படுத்தினர்; ஆயினும் அவை யாவும் இப்போது மறைந்து போய்விட்டன. பல வழிகளில் ஷரியா சட்டம் நல்லது தான் - மோசேயின் ஆகமங்கள் போன்று. ஆனால் பைபிள் கூறுவது என்னவெனில், ஆகமங்கள் கொடுக்கப்பட்டது மனிதர்களை நல் வழிப்படுத்த அல்ல, மாறாக, அவர்களது பாவங்களை உணரச்செய்து அவர்களுக் கென்று அவர்களை வழிந‌டத்த இயேசு என்ற ஒரு இரட்சகர் தேவை என்பதை உறுதிப்படுத்தவே. இது அவர்கள் இரட்சிப்புக்காக இயேசுவை நோக்கித் திருப்பும்வண்ணமாக அவர்களின் இயலாமையைத் தோலுரித்துக் காட்டிடவே ஆகும். (In many ways the shariah is good - as was the Torah of Moses - but the Bible says the Torah was given - not to make men good - but to prove their sinfulness and need of a Savior, to lead them to Christ - the Savior. It was to expose their helpless condition so they would turn to Christ for salvation).

 
 
இரட்சண்ய யாத்ரீகம்(Pilgrim's Progress ) எழுதிய ஜான் பனியன்(John Bunyan) , "ஓடுங்கள், ஓடுங்கள்-சட்டம் கட்டளையிடுகிறது. ஆனால் அது கால்களையோ அல்லது கைகளையோ தருவதில்லை; அதைவிட அருமையான தகவலை நற்செய்தி கொண்டுவருகிறது. அது எனக்கு இறக்கைகளைக் கொடுத்து என்னைப் பறக்க ஊக்குவிக்கிறது. எனவே, இயேசுவை முன்னிலைப்படுத்தாமல் எவ்வகையிலும் ஒரு சமுதாய அல்லது அரசியல் சார்ந்த ஒழுங்கினை நிறுவ நாம் முயன்றால் அது கலகத்தையே உருவாக்கும். அது தேவசித்தத்திற்கு எதிரான ஒரு வெளிப்படையான போராட்டமே ஆகும். நான் மேலை நாட்டினரின் கொடுங்கோல் ஆட்சியின் சார்பாக வக்காலத்து வாங்கவில்லை. நான் இயேசுவின் நற்செய்தியை ஆதரித்தே பேசுகிறேன். மேலை நாடுகளில் அனேகம் இயேசு கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தை நிராகரித்துவிட்டன என்று எனக்குத் தெரியும்; ஆயினும் அவர் சத்தியம், நீதி மற்றும் நேர்மையின் அடிப்படையிலான‌ இராஜ்ஜியத்தினை நிறுவ மறுபடியும் வருவார்.

 
 
மேலும் இவ்வுலகினை அழிவுக்குள்ளாக்கும் மனச்சிதைவு, வன்முறை, கொடூரம், மனிதச் சீர்கேடுகள், போர் மற்றும் கொடிய குற்றங்கள் ஆகியவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர இஸ்லாம் தவறுகிறது. இருக்கும் பிரச்சினை இதனினும் கொடியது. பைபிளில் மிகவும் அதிகமாக மதபற்றுள்ள பக்திமானிடம் இயேசு "நீ மறுபடியும் பிறக்கவேண்டும்" என்றுச் சொல்வாரானால் (யோவான் 3), நாம் அனைவரும் என்ன செய்யப்போகிறோம், நம்முடைய நிலை என்ன?

 
 
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ம் தேதியில் நான் கனடா நாட்டின் வான்கூவர்(Vancouver) நகரத்தில் இருந்தேன். அங்கிருக்கையில் நான் சரியாக அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1945 ல் போலந்து நாட்டின் அஸ்சுவிட்ஸ் (Auschwitz ) ல் சோவியத் படைகளினால் கொண்டுவரப்பட்ட மரணப் பாசறையினின்று மீண்டவர்களை நினைவுகூர்ந்தேன். அங்குச் சென்ற சுமார் பதினைந்து இலட்சம் கைதிகளில் அறுபத்தைந்தாயிரம் பேர் மட்டுமே 1945ல் உயிரோடிருந்தனர். பல‌ர் தங்க‌ளின் எரிந்த சடலங்களின் நாற்றத்தையும் சில மயிர்களையும் மட்டுமே விட்டுச் சென்றிருந்தனர். அதில் அனேகம் குழந்தைகள் குறிப்பாக சில சிசுக்கள் இருந்தனர் என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என‌ ஒரு சோவியத் போர்வீரர் சொன்னார்.

 
 
அவ‌ர்க‌ள் அப்பாச‌றையின் ம‌ருத்துவ‌ராகிய‌ ஜொசெப் மிங்க்லே(Josef Mengele) என்ப‌வ‌ரின் மருத்துவ ப‌ரிசோத‌னைக்குப் பிறகு த‌ப்பிப்பிழைத்த‌வ‌ர்க‌ள். அந்த‌ சோவிய‌த் போர் வீரரால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதனின் சீர்கேட்டினை நீங்கள் நம்பவில்லை எனில் அதனை நீங்கள் எவ்விதம் மறுக்கக் கூடும். 1947ல் இந்திய துணைக்கண்டத்தில் நடந்த‌ கொடூர‌ப் ப‌டுகொலைக‌ள் போன்ற‌ சோக‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அதைவிட‌ ச‌ற்றுக்குறைவான‌ தோற்ற‌ம‌ளிக்க‌லாம்; ஆனால் அவை பாவ‌ம் ஓர் கொடிய‌ நோய் என்ற‌ என் க‌ருத்தினையே வ‌லியுறுத்துகின்ற‌ன‌. என‌வே இஸ்லாமில் நான் காண்ப‌து என்ன‌வெனில், ம‌னித‌னின் பாவ‌ங்க‌ள் ப‌ற்றிய‌ ஒரு சரியான‌ அல‌ச‌ல் அதில் இல்லாதிருப்ப‌தே. "ப‌ல‌ர் வ‌ழி வில‌கிப்போனார்க‌ள்" எனக் குர்‍ஆன் சொல்வ‌திலிருந்தே இக்க‌ருத்தில் அதனால் ஒரு முடிவுக்கு வ‌ர இயல‌வில்லை எனத் தெரிகிற‌து.

 
 
அடிப்படையிலேயே உண்மை நிலை ப‌ற்றிய‌ ஒரு தீர்க்கமான சுய‌ ந‌ம்பிக்கையை இஸ்லாம் கொண்டுள்ளதாகத் தெரிகின்ற‌து. என‌வே தான் அதினால், இதுபோன்ற‌ ஒரு குழ‌ப்ப‌ நிலைக்கு ஒரு ஒப்புக்கொள்ள‌க்கூடிய‌ தீர்வைக் கொடுக்க‌ முடிய‌வில்லை. உதார‌ண‌மாக‌, ஒரு 20 வ‌ய‌து முஸ்லிம் பெண் ஒரு இஸ்லாமிய‌ செய்தித்தாளின் ஆசிரியருக்கு, தான் பாவ‌த்தினால் பிடிக்க‌ப்ப‌ட்டு உள்ள‌தாக‌வும், அதிலிருந்து மீட்படைய‌ அத‌ற்கு அவ‌ள் என்ன‌ செய்யக்கூடும் என‌வும் கேட்டு எழுதியிருந்தாள். அத‌ற்கு அவ‌ர் அவ‌ள் த‌ன்னை சீர்ப‌டுத்திக் கொள்ள‌வேண்டும் என‌வும் ஒரு புதிய‌ வாழ்க்கையை ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்றும் அறிவுறுத்தி இத‌ற்கு வெளியிலிருந்து எந்த‌ உத‌வியும் செய்‌வ‌து சாத்திய‌மில்லை என‌வும் ப‌தில‌ளித்து இருந்தார். இத‌ற்கு அர்த்த‌ம் என்ன‌வெனில் இஸ்லாமால் ச‌ட்ட‌த்தை ம‌ட்டுமே வ‌ழ‌ங்க‌முடியும்- பாவ‌த்தினின்று மீட்கும் க‌ருணையை அல்ல‌ என்ப‌தே (In other words, Islam can only offer law - not redeeming grace).

 

 

இயேசு யார்(Who Jesus Is)

 
தேவனோடு நமக்கு உள்ள உறவு இயேசு கிறிஸ்து யார் என நாம் நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. அதாவது நமது "இயேசு தத்துவத்தை"யே சார்ந்துள்ளது. ஆதியாகமத்தில் மனிதன் தவறிழைத்ததற்கான சாட்சியங்களுடன் பிடிபட்டு அவனுக்கு தண்டனைத் தீர்ப்பு வழங்கியபின் தேவன் தமது பணியைத் தொடர்கிறார். அவர், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்" என்று சொல்கிறார் (ஆதியாகமம் 3:15).

 
 
இதுதான் கிறிஸ்துவைப் பற்றிய முதல் வாக்குறுதி என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள், ஆனால், இது கடைசி வாக்குறுதி அல்ல. பல நூற்றாண்டுகளில் பலரால் எழுதப்பட்டதான பல‌ பைபிள் நூல்களில் இந்த வாக்குறுதி "அவர் வருகிறார், அவர் வருகிறார், அவர் வருகிறார்" என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இறுதியில் இயேசு வரும்போது அவர் வித்தியாசமானவராக, இயற்கை இயல்பிற்கு அப்பாற்பட்டவராக‌ காணப்படுகிறார். ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்து (இரண்டு புனித நூல்களிலும் இது காணப்படுகிறது) பாவமற்றவராக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்கிறார்.

 
 
ஆனால் இணையில்லாத கிறிஸ்துவினுடைய பண்பின் அழகு பிரம்மிக்கத்தக்கது. (மீண்டும் இதை பைபிள், குர்‍ஆன் இரண்டும் சொல்கின்றன‌). யோவான் 8:46 ல் இயேசு சவால் விடுக்கிறார், " என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? ". இயேசுவைப்பற்றி குர்‍ஆன் சூரா 19:19 ல் கீழ்கண்டவாறு சொல்கிறது. "பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்)" இது ஏனைய தீர்க்கதரிசிகளைப் பற்றி குறிப்பிட்டவைகளிலும் வித்தியாசமானது. சூரா 3:141 ல் " எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை என்பதாக‌ வாசிக்கிறோம்.

 
தன் பெயரில் உள்ள சூராவில்(அத்யாயத்தில்) அரேபிய நபி இவ்வண்ணமாய் உரைக்கிறார்: "உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக (சுரா 47:19)", சூரா 48:2 லும் கூட‌, "உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்." எனக் காண்கிறோம். மேலும் இயேசு தேவனாகவும் மனுஷனாகவும் இருக்கிறார் (பிலிப்பியர் 2 ல்). கிறிஸ்துவத்தின் படி தேவன் தம்முடைய சித்தத்தை மட்டுமல்ல, தம்மையே வெளிப்படுத்துகிறார்.( So, in Christianity God does not just reveal his will - He reveals himself).

 
 
தேவன் ஏன் இந்த வழியைத் தெரிந்துகொண்டார் என நாம் வியப்படையலாம். சமீபத்தில் தகவல் தொடர்பு பற்றி ராபர்ட் கேல் (Robert Gales ) என்பவர் எழுதிய ஒரு புத்தகம் இதை விளக்க உதவும். அதில் அவர் எந்த நபருமே ஆணாயினும் பெண்ணாயினும் தாங்களே ஒரு செய்தியாகவே இருக்கின்றனர் என முடிக்கிறார். இவ்வண்ணமாகவே இயேசுகிறிஸ்துவும், தேவன் தாமே தம்மையே ஒரு செய்தியாக முற்றிலும் வெளிப்படுத்தத்தக்க வகையில் வந்தார். பாவம் என்கின்ற பிரச்சினையினைக் கையாள இது ஒன்றே வழி எனக் கிறிஸ்துவர்கள் கருதுகிறார்கள். இயேசு ஒருவ‌ரே பாவ‌ம‌ற்ற‌வ‌ர், என‌வே, பல காலத்திற்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டபடி தேவனின் ஒப்பற்ற‌ பிரதிநிதியாகத் த‌ம‌து சிலுவை ம‌ர‌ண‌த்தினால் பாவ‌த்தின் த‌ண்ட‌னையை ஏற்றுக்கொண்டார்.

 
 
இஸ்லாமை நாம் ஒப்பிடுவோமானால், அதிலும் க‌ட‌வுள் ம‌ன்னிக்கிறார். ஆனால் "எப்ப‌டி ம‌ன்னிக்கிறார்" என்ப‌தே என்னைச் ச‌ஞ்ச‌ல‌த்திற்குள்ளாக்குகிற‌து. அவ‌ர் அனாதியாய்த் த‌ம்மிஷ்ட‌ப்ப‌டி‍ - சொல்ல‌ப் போனால் பொறுப்ப‌ற்ற‌ முறையில் ம‌ன்னிக்கிறார். வெறும் வார்த்தையின் மூல‌மாக‌வே அவ‌ர் ம‌ன்னிக்கிறார் . தேவ‌ ம‌ன்னிப்பு என்ப‌து ஒரு பொது ம‌ன்னிப்பு என்கின்ற‌ வ‌கையில் ஒரு தேவைய‌ற்ற‌ செய‌லாக‌ இருத்த‌லாகாது(He forgives arbitrarily, whimsically - almost irresponsibly. He does it by a mere word. Divine forgiveness can never be just an amnesty as if it does not really matter).

 
 
கிறிஸ்துவ‌த்தில் ம‌ன்னிப்பு என்ப‌து தியாக‌ங்க‌ளும் பாடுக‌ளும் உள்ள‌ட‌ங்கிய‌து(In Christianity, forgiveness involves sacrifice and suffering). இயேசு கிறிஸ்துவான‌வ‌ர் இந்த‌ உல‌க‌த்தின் பாவ‌ங்க‌ளுக்காக‌ ம‌ரித்த‌ தேவ‌ ஆட்டுக்குட்டியாக‌ ம‌ர‌ண‌த்தை வென்றார். இத‌ன் ப‌ல‌னாக‌ பாவிக‌ளின் குற்ற‌ங்க‌ளையும் அதினால் ஏற்பட்ட‌ வெட்க‌த்தையும் போக்கினார் என‌ ரோம‌ர் 8 ல் வாசிக்கிறோம். என‌வே, சிலுவையை ஏற்றுக் கொள்ளாம‌லிருத்த‌ல் தேவ‌னின் பெருந்த‌ன்மைக்கும் க‌ருணைக்கும் ஏற்ப‌டுத்தும் அவ‌ம‌ரியாதையாகும். இது ராஜாவின் சித்த‌த்திற்கு மாறான‌ க‌ல‌க‌த்திற்கு ஒப்பாகும்.

 
 
ஒரு தூரமான‌ பாகிஸ்தானிய‌ கிராம‌த்திலிருந்த‌ முஸ்லிம் ஒருவர் சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு கூறின‌வ‌ற்றை நான் நினைவு கூறுகிறேன். "உங்க‌ளின் ந‌பி, எங்க‌ளின் ந‌பியை விட‌ உயர்ந்த‌வ‌ர் என்ப‌த‌ற்கு மூன்று கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ர் ஒரு க‌ன்னியின் வ‌யிற்றில் உண்டான‌வ‌ர், எங்க‌ள் ந‌பி அவ்வாறில்லை. அவ‌ர் பிற‌ப்பிலிருந்தே அற்புதங்க‌‌ளைச் செய்த‌தால் பிறப்பிலேயே ந‌பியான‌வ‌ர். எங்க‌ள‌வ‌ர் நாற்ப‌து வ‌ய‌தில் தான் ந‌பியானார். உங்க‌ள் ந‌பி இப்போதும் உயிரோடிருக்கிறார், எங்க‌ள‌வ‌ரோ ம‌ரித்துவிட்டார்". (சூரா 4:15, கொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌பிக‌ளைப் ப‌ற்றிச் சொல்கிற‌து; ஆனால் அவர்கள் ம‌ரித்தோரிலிருந்து உயிரோடு எழும்பினவர்கள் என்று எதுவும் கூறவில்லை).

 
 
எனவே பைபிள் இயேசுவை மீட்பர் என்றுச் சொல்லும் போது அதன் முழுமையான அர்த்தத்திலேயே அவ்வாறு கூறுகின்றது. மனிதர்களாகிய நாம் நாமாகவே தேவன் மகிழும்படியான காரியங்களைச் செய்யத் திறனற்றவர்களாய் இருக்கிறோம் என‌ நன்கு அறிவோம், என்பதினாலேயே அவ்விதமாக வாழ அவர் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். பழங்காலத்தில் வாழ்ந்த செனகா(Senaca) என்ற ஒரு தத்துவ ஞானி இவ்வாறு கூறுகிறார்:

 
"நாம் கொடியவர்காளாகவே இருந்து, கொடியவர்களாகவே மாறியதினால் எப்போதும் கொடியவர்களாகவே இருப்போமென்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்"(Wicked we are, wicked we have become, and, I regret to add, wicked we will always be).

 
 
அவருக்கு எவ்விதத்திலும் நம்பிக்கை இல்லை. புனிதர்கள், நபிகள் நமக்கு வழிகாட்டினாலும் நம்மை அவர்களால் இரட்சிக்க முடியாது. அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கலாம் ஆனால், எந்த நபியும் நம் இடத்தில் வந்து நமக்கு பதிலாக‌ மரிக்கமுடியாது.

 
 
சிலுவையில் உடன் தொங்கின கள்ளனைப் பார்த்து இயேசு, "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் " என்று சொன்னார் (லூக்கா 23:43). பைபிள் நமக்கு ரோமர் 6: 11-14 ல் இயேசு நம்மைப் பாவக்கட்டுகளினின்றும் அதனால் ஏற்படும் தண்டனையினின்றும் விடுவிப்பார் என‌ போதிக்கிற‌து.

 
 
கிறிஸ்துவுக்குள்ளாக‌ நம‌து அடையாள‌ம் ம‌க‌த்தான‌து. நாம் அவரோடு கூட "பாவ‌த்திற்கு மரித்தோம்" என்ற நம்முடைய அடையாளம் நம்மை பாவ கட்டுகளிலிருந்து விடுதலையாக்குகிறது. ம‌ரித்தோரினின்று அவ‌ர் எழும்பிய‌து போல‌ நாமும் புதிய‌ வாழ்வுக்குள் உய‌ர்த்த‌ப்ப‌டுவோம். இப்போது தேவ‌ ஆவி ந‌ம்முள் இருப்ப‌தால் தேவ‌னை ம‌கிழ்வுற‌ச் செய்ய‌ அது ந‌ம‌க்கு உத‌வுகிற‌து.

 
 
இஸ்லாமுக்குள் புதிதாய் வந்த ஒரு பெண் தன் மனச் சோர்வை சக முஸ்லிம்களுக்கு வெளிப்படுத்தும்
வண்ணமாக ஒரு கணிணிச் செய்தித் தளத்தில் இவ்வண்ணமாய்ச் சொல்கிறார்:
 

 
 
"கடந்த நான்கு ஆண்டுகளாய் நான் ஒரு முஸ்லீமாக இருந்து வருகிறேன். இஸ்லாம், நான் நடப்பதற்கு ஒரு கடினமான பாதையாய் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால் நிச்சயமாகவே நான் நல்லது தான் செய்கிறேன் என உளமாற நம்புகிறேன்........ எப்பொழுதும் நான் ஒரு முஸ்லீமாகவே இருக்கவேண்டும் என‌ விரும்புகிறேன், ஆனாலும், இஸ்லாமில் நான் அனேக காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது..... சில நேரங்களில் இவை யாவற்றையும் செய்ய ஞாபகம் வைத்திருப்பதில் நான் பைத்தியமாக அலைகிறேனோ என நான் எண்ணுகிறேன். அல்லாவின் ஒரு நல்ல ஊழியக்காரியாக இருக்கவேண்டும் என நான் ஆசைப்படுகிறேன், ஆனாலும் இவை யாவற்றையும் நான் அறிந்துகொள்வது மிகவும் அதிகமாகவே எனக்குத் தோன்றுகிறது. என‌து க‌ண‌வ‌ரிட‌ம் இது ப‌ற்றிப் பேசினேன். அவ‌ர் நான் ஒரு ஜின்னினால் (அசுத்த ஆவி) பிடிக்க‌ப்பட்டிருப்பேனோ என‌ நினைக்கிறார்..... என‌து முய‌ற்சியில் வெற்றியடைய உத‌வியாய் இருக்கும்ப‌டியான‌ ப‌தில் கிடைப்பதற்கான தேடுதலில் நான் மிக‌த் தீவிர‌மாய் இருக்கிறேன்".

 
She said, "I've been a Muslim for about 4 years. Islam is a difficult road for me to walk, but I believe with all my heart that I'm doing the right thing. ... I want be a Muslim forever, but I feel there is so much to do in Islam ... sometimes I think I'm going crazy trying to remember all this... I want to be a good servant to Allah but learning all this is too much for me. I've talked to my husband and he thinks I have a jinn [evil spirit] .... I am desperately looking for answers that will help me to be successful in my effort."
 
 
இறுதியாக, சில முஸ்லிம் நண்பர்கள் ஹதீஸ்களில் முகமதுவே கூடத் தனது சொந்த மகளுக்கே இரட்சிப்பை உத்திரவாதம் செய்யக்கூடாத நிலையில் இருந்ததாகப் படித்ததை நினைவுகூறுகிறேன். அவர்கள் ஒரு இக்கட்டான கேள்வியைக் கேட்டார்கள்: "தனது சொந்த மகளாகிய பாத்திமாவையே இரட்சிக்க முடியாத நபி, நம்மை இரட்சிப்பாரென நாம் நம்புவது எவ்வாறு?" (al-Bukhari, vol. 6, p. 277). பலர் மசூதியிலிருந்து ஒரு நாளைக்கு ஐந்துமுறை ஒலிபெருக்கி மூலம் வரும் "வெற்றியடைய வாருங்கள், இரட்சிப்படைய வாருங்கள்" என்ற அழைப்புகளால் .. இவர்களுக்கே இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதபோது இவர்கள் எவ்வாறு மற்றவர்களை இவ்விதம் அழைக்க முடியும் எனச் சங்கடப்பட்டார்கள்.

 
 
இவ்விதமான கேள்விகளின் பலனாக சிலர் விரக்தியில் இயேசுவை நோக்கித் திரும்பி அவரின் வார்த்தைகளினாலும் வேதத்தினாலும் (இஞ்ஜில்) நம்பிக்கை அடைந்தார்கள். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 14:6). பல முஸ்லிம்கள் இயேசுவின் இந்த வார்த்தைகளினால் பலத்த ஆறுதல் அடைந்தார்கள்."வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." (மத்தேயு 11:28)
 


Dr. Warren Larson lived in Pakistan for 23 years. He has written a book called, Islamic Ideology and Fundamentalism in Pakistan: Climate for Conversion to Christianity?; University Press of America; ISBN: 0761810943.

ஏன் இவர்கள் கிறிஸ்தவர்களானார்கள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் 


© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
 

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்